இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மூலவர் : ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர்.
தல விருட்சம் : வில்வ மரம்.
பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்பு உள்ளது.
ஊர் : திருவையாறு.
மாவட்டம் : தஞ்சாவூர்.
தல வரலாறு :
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோவில் என்று ஏன்? பெயர் வந்தது என்பதை தெரிந்துகொள்ள முதலில் நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பார்.
நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர் ந்தவை ஆகும். சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர் ஆவார். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார்.
அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.
தல பெருமை :
இந்த கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்பது இதன் சிறப்பமாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க இக்கோவில் இறைவனை வணங்கலாம். அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
திருவிழா :
இக்கோவிலில் மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோவில்,
திருவையாறு - 613 204,
தஞ்சாவூர்,
போன் : 91- 436 -2260 332, 94430 08104.
செல்லும் வழி :
தஞ்சாவூரில் இருந்து பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் திருவையாறு என்னும் ஊரில் அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக