Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 17 ஜூலை, 2019

பராக் ஒபாமா

 Image result for பராக் ஒபாமா

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவது என்பது கனவாகவே இருந்து வந்த நிலையில் அதை சாதித்துக் காட்டி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தவர்.

கருப்பினர்களுக்காக குரல் கொடுத்து அதை வேரோடு அழிப்பதற்கான நடவடிக்கை எடுத்த தலைவர்கள் ஆப்ரகாம் லிங்கன், மார்டின்லூதர் கிங் உள்ளிட்ட பலர் உள்ளனர். ஆனால் கருப்பினத்திலிருந்து அதிபரான பெருமை இவரை மட்டுமே சேரும்.

அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

குடியரசு தலைவர் வேட்பாளராக மக்களாட்சி கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருமுறையல்ல, அடுத்தடுத்து இரண்டுமுறை குடியரசுத் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தன் அலுவலகத்தில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்களில் இருந்து, உயர் பதவி வகிக்கும் நபர்கள் வரை அனைவருக்கும் சரிசமமான மரியாதை அளித்தவர்.

2016 வரையிலும் அதிக ட்விட்டர் பின் தொடர்பவர்களை கொண்டிருந்த உலக தலைவர்களுள் முதல் இடத்தை பெற்றிருந்தவர்.

நான் இந்த இலக்கை எட்டுவேன்

குறிக்கோளை வெல்வேன்

வழியில் எந்த இடறும், தடையும் நேரினும் தகர்ப்பேன்

ஆயிரமாயிரமாய் இன்னல்கள் தாக்கினும், என் நம்பிக்கையை இழக்க மாட்டேன்.

அந்த நம்பிக்கை

நம்மால் முடியும் என்பதே!
என்று மக்கள் மத்தியில் நம்பிக்கையை வித்திட்டவர்.

அவர்தான் ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத்தலைவர்

பராக் ஒபாமா!!

பராக் ஒபாமாவின் ஆரம்பகால வாழ்க்கை...!!

பராக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி பிறந்தார். இவரின் தந்தை கென்யாவை சேர்ந்த பராக் ஒபாமா சீனியர், தாய் கேன்சஸ் மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன ஆன் டன்ஹம். ஒபாமாவின் பெற்றோர்கள், ஹொனலுலுவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் (ருniஎநசளவைல ழக ர்யறயii) முதன்முதலாக சந்தித்தனர். பின் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

பராக் ஒபாமாவின் இரண்டாம் வயதில் அவரின் தாயும், தந்தையும் மணமுறிவு செய்து கொண்டனர். ஒபாமாவின் தந்தை கென்யாவுக்கு திரும்பினார். பராக் ஒபாமா தனது ஆறாவது வயதிலிருந்து பத்தாவது வயது வரை ஜகார்த்தாவில் வசித்தார்.

தாய், தந்தை மறைவு :

பராக் ஒபாமாவின் தந்தையான பராக் ஒபாமா சீனியர் 1982ல் சாலை விபத்தில் உயிர் இழந்தார்.

தாயார் ஆன் டன்ஹம் 1995ல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

கல்வி :

ஒபாமா தனது மூன்று முதல் ஐந்து வயது வரை புனித பிரான்சிஸில் கல்வி கற்றார்.

ஆறு முதல் பத்து வரை, உள்ள ர் இந்தோனேஷிய மொழி பள்ளிகளில் படித்தார். ஜகார்த்தாவில் இருந்த இந்த நான்கு வருடங்களில் அவர் இந்தோனேசிய மொழியை சரளமாக பேசினார்.

1971ல் ஹொனலுலுக்கு திரும்பிய பராக் ஒபாமா உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார்.

1979ல் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஓசிடென்டல் கல்லூரியில் சேர்ந்தார்.

பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றி 1983ல் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

பின்னர் 1983ஆம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்றார். அதன்பிறகு வணிக சர்வதேச கூட்டுஸ்தாபனத்தில் ஒரு வருடம் வேலை செய்தார். அங்கு அவர் நிதி ஆராய்ச்சியாளராகவும், எழுத்தாளராகவும் இருந்தார்.

1985ஆம் ஆண்டில், நியூயார்க் பொது ஆர்வம் ஆராய்ச்சி குழுவின் திட்ட ஒருங்கிணைப்பாளராக மூன்று மாதங்கள் வேலை செய்தார்.
நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார்.

1985 முதல் 1988 வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து, சிக்காகோ மக்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் குத்தகையாளர் உரிமைக்கான திட்டங்களை உருவாக்கியது.

1988ல் ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சேர்ந்த ஒபாமா, ஒரு ஆண்டுக்கு பிறகு ஹார்வர்ட் சட்ட விமர்சனம் (ர்யசஎயசன டுயற சுநஎநைற) என்ற புகழ்பெற்ற சட்டம் தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இவ்விதழின் முதல் கருப்பின தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ல் சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. (1995ல் 'ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்" (னுசநயஅள குசழஅ ஆல குயவாநச) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது.)

இதன்பின் சிக்காகோக்கு திரும்பிய இவர், 1992ல் சிக்காகோ சட்டக்கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். 1993ல் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.
இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும்போதுதான் எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதன்முதலாக சந்தித்தார். இந்த சட்ட நிறுவனத்தில் மிஷேல் பணிபுரிந்தபோது, அங்கு புதிதாகப் பணிக்கு சேர்ந்தார் ஒபாமா. சில மாதங்களில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

1992ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அப்போது, ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார் என்றோ, மிஷேல் அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆவார் என்றோ என்பது இவர்களுக்கு தம்பதிக்குத் தெரியாது என்றாலும், அவர்களின் வாழ்க்கை நோக்கமும், செயல் ஆக்கமும் கொண்ட பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு 1998ஆம் ஆண்டு மலியா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் 2001ஆம் ஆண்டு சாஷா என்ற இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.

மிசெல் ஒபாமா :
மிசெல் ஒபாமா 1964ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி சிகாகோவில் பிறந்தார். இவர் சோஷியாலஜியில் பட்டம் பெற்றுள்ளார். சட்டம் படித்த இவருக்கு, மக்களுக்கு சேவை புரிவதில் விருப்பம் அதிகம்.

எனவே, வழக்கறிஞராக தான் வகித்த வேலையை உதறிய இவர், சிகாகோ மாநகர திட்ட மற்றும் வளர்ச்சித் துறையில் உதவி ஆணையராகும் அளவிற்கு பொதுவாழ்வில் முன்னேறினார். இன்னொரு பக்கம், தன் மகள்கள் மலியா, சாஷாவுக்கு ஓர் அம்மாவாக தன் பணியை நிறைவாக கொடுக்கவும் அவர் தவறியதில்லை.

2007ஆம் ஆண்டு ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கணவரின் வெற்றிக்காக உழைக்க, தன் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் மிசெல்.

அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்தபின், அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒபாமா. இந்த வெற்றிக்கு பிறகு ஒபாமாவிடம் மிசெல் கேட்ட பரிசு, இவர்களது காதலின் ஆழத்தை உலகுக்கு காட்டியது. அது, 'ஒபாமா புகைப்பழக்கத்தை விட வேண்டும்" என்பதுதான்.

ஒருமுறை மிசெலிடம், 'உங்களை எப்படி அறிமுகம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்?" என கேட்டதற்கு 'எனது மகள்களின் தாயாகத்தான் அறிமுகம் செய்துகொள்ள ஆசை" என்றார்.
அதாவது, 'அமெரிக்க அதிபரின் மனைவி!" என கர்வம் கொள்ளாமல் தாய்மை உணர்வோடு அவர் பேசியது மக்களை நெகிழ வைத்தது.

ஒருமுறை ஒபாமா, 'ஆங்ரி ப்ளாக் உமன்" என காதலோடு மக்கள் மத்தியில் பேசியது பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வென்றதில், மிசெலின் உழைப்புக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதை ஒபாமாவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமா ஒரு பேச்சில், '25 வருடங்களாக மிசெல் என்னோடு இருக்கிறார். ஒரு மனைவியாக... தாயாக... இந்த நாட்டின் ஃபர்ஸ்ட் லேடி என்பதையும் தாண்டி எனக்கு நல்ல தோழியாகவும் இருந்து வருகிறார்" என்றபோது மிசெலின் கண்களில் வழிந்த நீர் தான் இவர்களது காதலின் அடர்த்தியை சொல்லியது.

பராக் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கை!!

இலினாய்ஸ் செனட் :

ஒபாமா, 1996ஆம் ஆண்டு இலினாய்ஸ் செனட்டிற்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் நெறிமுறைகள் மற்றும் சுகாதார சட்டங்களை சீர்திருத்தும் சட்டத்திற்காக இரு கட்சிகளின் ஆதரவைப் பெற்றார்.

ஏழை மக்களுக்கு வரி குறைத்தல், நிதியுதவி (றநடகயசந) முறையை சீரமைப்பு செய்தல், குழந்தைகளின் உடல்நலம் தொடர்பான சட்டங்களுக்கு ஒபாமா ஆதரவளித்தார்.

1998 மற்றும் 2002ஆம் ஆண்டு மீண்டும் இலினாய்ஸ் செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003ஆம் ஆண்டு, இலினாய்ஸ் செனட்டின் சுகாதார மற்றும் மனித சேவைகள் கமிட்டியின் தலைவராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004ஆம் ஆண்டு அமெரிக்க செனட் தேர்தலுக்குப் பின், நவம்பரில் ஒபாமா இலினாய்ஸ் செனட்டில் இருந்து விலகினார்.

கவனத்தை ஈர்த்த உரை :

2004ல் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் ஆற்றிய சிறப்புரை காரணமாக தேசிய அளவில் கவனம் பெற்றார்.

இச்சிறப்புரையில் ஜார்ஜ் வாக்கர் புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளை கண்டனம் செய்து அமெரிக்கப் படையினர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அப்பொழுதே அமெரிக்காவில் இருந்த நிறவெறியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக ஒபாமா, 'வுhநசந ளை ழெவ ய டiடிநசயட யுஅநசiஉய யனெ ய உழளெநசஎயவiஎந யுஅநசiஉயஇ வாநசந'ள வாந ருnவைநன ளுவயவநள ழக யுஅநசiஉய' என்று முழங்கினார்.
மேலவை உறுப்பினர் :

2005ஆம் ஆண்டு ஒபாமா முதலாவது கருப்பின மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2008ஆம் ஆண்டு ஒபாமா மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து நவம்பர் 16, 2008ஆம் ஆண்டு விலகுவதாக அறிவித்தார். மேலும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

ஒபாமா - அதிபர் தேர்தல் :

2007ல் பிப்ரவரி 10ஆம் தேதி இலினாய்ஸ் மாநில தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்டில் தனது குடியரசு தலைவர் போட்டியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஒபாமா. பிரச்சாரம் முழுவதிலும் சுதந்திரம், ஈராக் போர் முடிவு மற்றும் உடல்நலப் பாதுகாப்பு என இந்த மூன்று முதன்மை வாக்குறுதிகளை முன் நிறுத்தினார். முதல் 6 மாதங்களில் ஒபாமாவின் பிரச்சாரத்தின் மூலம் கூ58 மில்லியன் டாலர்கள் நன்கொடைகளாக குவிந்தது.

2008ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் தொடங்கிய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர்கள் தேர்தலில் ஒபாமா, கிளாரி கிளிண்டனுக்கு எதிராக போட்டியிட்டார். அயோவா, நெவாடா, தென் கரொலைனா மாநிலங்களில் நடந்த முதல்கட்ட போட்டிகளில் வெற்றி பெற்று நியூ ஹாம்சயர் மாநிலத்தில் கிளாரி கிளிண்டனுக்கு சமமாக வாக்குகளை பெற்றார் பராக் ஒபாமா.

ஆனால், ஒபாமா ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவதற்கு தேவையான அளவில் பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றார். இதனையடுத்து கிளாரி கிளிண்டன் தனது பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டு ஒபாமாவிற்கு ஆதரவு அளித்தார்.

அதிகாரப்பூர்வமாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒபாமா, குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். 2008ல் டெலவெயர் மாநிலத்தின் சார்பில் மேலவை உறுப்பினராக இருந்த ஜோ பைடனை துணை குடியரசு தலைவர் வேட்பாளராக ஜனநாயக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பம் முதலே புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக இருந்தார் ஒபாமா. சிகாகோவில் முதலாம் ஈராக் போர்-எதிர்ப்பு கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார்.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்றால் நாட்டுடன் முதலில் பேச்சுவார்த்தைதான் நடத்த வேண்டும் என்ற அவரது கருத்து பலராலும் பாராட்டப்பட்டது. இவையெல்லாம் அவருக்கு வாக்குகளாகவும் மாறியது.

வெளிநாட்டு கொள்கைகள் மூலமாக உலகத்தை வழிநடத்த வேண்டும் என்பது ஒபாமாவின் கருத்தாக இருந்தது. இப்படி அமெரிக்க மக்கள் விரும்பும் வெளிநாட்டு கொள்கைகளை ஒபாமா கொண்டிருந்தார். ஒபாமாவின் பொருளாதார திட்டம் அமெரிக்க சட்டங்களை மாற்றி அமைப்பதாக இருந்தது.

மக்களின் வரிச்சுமைகளை குறைப்பதாகவும் இருந்தது. மேலும் பெட்ரோலை சார்ந்து இருக்காமல் மாற்று எரிசக்தி பயன்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளித்தார். இவையெல்லாம் ஒபாமாவிற்கு பக்கபலமாக இருந்தது. ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கும், வெளிநாடுகளுக்கும் உறவு மேம்படும் என்று வாக்களித்த பெரும்பாலானோர் கருதினர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா, 'றந உயn" என்னும் ளடழபயn-னை பயன்படுத்தினார். மிகச்சிறந்த பேச்சாளராக அமெரிக்க மக்களால் அறியப்பட்டார் ஒபாமா. அனைவரும் எதிர்பார்த்தது போல் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் - பராக் ஒபாமா...!!

கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்தார்....

பராக் ஒபாமா
கருப்பினத்தை சேர்ந்த ஒருவர், அதிபர் பதவிக்கு வருவதென்பது கனவாகவே இருந்துவந்த நிலையில் அதை சாதித்து காட்டிய ஒபாமாவின் சாதனை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. உலகெங்கும் உள்ள கருப்பின மக்கள் ஒபாமாவின் வெற்றியை தங்கள் வெற்றியாகவே கொண்டாடினர்.

ஒபாமாவின் பதவியேற்பு விழாவை காண அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாஷிங்டன்னில் திரண்டனர்.

அமெரிக்க நேரப்படி காலை 8 மணியளவில் ஒபாமா பதவியேற்புக்கு தயாரானார். அவர் தனது மனைவி மிசெல் ஒபாமாவுடன் கருப்பு நிறக் காரில் பழமை வாய்ந்த செயின்ட் ஜான்ஸ் சர்ச்சுக்கு புறப்பட்டார். பின்னர் சர்ச்சில் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

பிரார்த்தனையை முடித்த பின் ஒபாமாவும் அவரது மனைவியும், அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு சென்றனர். ஒபாமா தம்பதிக்கு, புஷ் தம்பதியினர் தேநீர் விருந்தளித்து கௌரவித்தனர்.

பின்னர் பதவியேற்பு விழாவுக்காக ஒபாமா, தன் மனைவியுடன் கிளம்பினார். பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள், ஒபாமாவின் குடும்பத்தினர், ஜார்ஜ் புஷ் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தனர்.

துணை அதிபரான ஜோ பைடன் வந்தபின் கடைசியாக ஒபாமா வருகை தந்தார். இதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் துணை அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க சட்டப்படி பதவியேற்பு தினத்தின் பகல் 12 மணியளவில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பதவிப்பிரமாணம் எடுத்திராவிட்டாலும் கூட தானாகவே அதிபர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக வந்துவிடுவார். எனவே 12 மணியளவில், ஒபாமா பதவியேற்காமலேயே அதிபரானார்.

ஒபாமா அதிபராக பதவியேற்க அழைக்கப்பட்டார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கானோரும் ஒபாமா, ஒபாமா என்று உற்சாக குரல் எழுப்பினர்.

1861ல் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பதவி பிரமாணத்துக்கு பயன்படுத்திய பைபிளை ஒபாமாவின் மனைவி மிசெல் எடுத்துத் தர, அதன்மீது தனது இடதுகையை வைத்து வலது கையை உயர்த்தி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இதன்மூலம் அமெரிக்காவின் 44வது அதிபரானார் பராக் ஒபாமா.
ஒபாமா - ஆட்சிக்காலம் :

ஒபாமா அதிபராக பதவியேற்றதும் பிரச்சாரங்களில் சொன்ன விஷயங்களைப் படிப்படியாக செய்யத் தொடங்கினார்.

அனைத்து நாடுகளுடனான நல்ல நட்புறவில் துவங்கி, பருவநிலை மாற்றத்திற்கான முதல் குரலை எழுப்பி உலகையே பருவநிலை மாற்றத்திற்காக முக்கிய முடிவுகளை எடுக்கச் செய்தது வரை, பல விஷயங்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.

ஒபாமா தனது ஆட்சிக்காலத்தில் செய்தவைகள் :

இதற்கு முன் இருந்த ஐந்து ஜனாதிபதிகள் நிறைவேற்ற தவறிய, 'யுனிவர்செல் ஹெல்த் இன்சூரன்ஸ்" திட்டம் தொடர்பான சட்டத்தை 2010ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். இதனால் பல கோடி அமெரிக்கர்கள் பயன்பெற்றனர்.

பின்னடைவில் இருந்த அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், 78,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள மீட்பு மற்றும் மறு முதலீட்டு சட்டத்தில் கையெழுத்திட்டார். இச்சட்டம் அமலுக்கு வந்தபின், வேலையின்மை குறையத் துவங்கியது. பனிரெண்டு மாதங்கள் கழித்து தனியார் துறை நிறுவனங்கள், அதிகமாக உற்பத்தி செய்யத் துவங்கின. இதன்மூலம் 37 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.

2009ல் ஈராக்கில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தார். அமெரிக்காவில் ஏற்பட்ட மந்தநிலையால் 2010ல் ஒபாமா விமர்சனங்களுக்கு உள்ளானார். அதை சரி செய்து, நிதித்துறையை கட்டுப்படுத்தும் வகையில், டாட்-பிராங்க் வால் ஸ்ட்ரீட் சீர்திருத்தம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார்.

அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், 2011ல் அமெரிக்காவின் சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது இவரது ஆட்சிக்காலத்தில்தான்.

முந்தைய ஆட்சியில் வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல் தொழிலை சரி செய்த பெருமை இவரையே சாரும். புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், எலக்ட்ரிக் கார்கள், நிலக்கரி, இயற்கை எரிபொருள், ஸ்டெம்செல் ஆராய்ச்சி உள்ளிட்ட தொழில்நுட்பம் நிறைந்த துறைகளின் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கினார்.

பராக் ஒபாமா, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச உணவுகளில் அதிக ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் கட்டாயம் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்தார். இதனால் இரண்டு மடங்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மாணவர்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டது.

உலக நாடுகளுடன், நெருக்கமான உறவை வைத்திருக்க விரும்பினார் ஒபாமா. எந்த நாட்டிற்கு சென்றாலும், அங்குள்ள கலாச்சாரத்தை மதிப்பதுடன், அதை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டினார். மற்ற நாட்டு அதிபர்கள், பிரதமர்களிடம் சுமூக உறவை கடைபிடித்தார்.

ஒபாமாவின் வெற்றிக்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, நல்லொழுக்கம், நேர்மை, வளைந்து கொடுக்கும் தன்மை என பல இருந்தாலும், அவருடன் கைக்கோர்த்து நிற்கும், மனைவி மிசெலுக்கே இந்த பெருமை சேரும்.

அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டு, நடுத்தர மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே தனது லட்சியம் என்று செயல்பட்ட ஒபாமாவுக்கு, எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு கொடுக்காமல், அனைத்து விதத்திலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இரண்டு முறை அதிபரானார்... பராக் ஒபாமா...!!

எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சியை முறியடித்து, மக்கள் ஆதரவுடன் மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, கருப்பு இன மக்களுக்கு அமெரிக்க அரசியலில் மிகவும் முக்கியமான இடத்தையும் பெற்றுத் தந்துள்ளார்.

ஒபாமா தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வரை, கருப்பு இன மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவர்களை ஒன்று திரட்டி வாக்களிக்க வைத்து, 90 சதவீத கருப்பு இன மக்களின் ஆதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல், ஸ்பானிஷ் பேசும் லத்தீன் இனமக்களின் பேராதரவையும் பெற்றார். இதுதவிர வெள்ளை இன பெண்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் பொது வாக்காளர்களில் வெள்ளை இன ஆண்களின் ஆதரவு என 51 சதவீதம் வாக்குகளை பெற்று சாதனை படைத்தார் ஒபாமா.

ஒபாமாவின் இரண்டாவது பதவியேற்பு விழா 2013 ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், அது விடுமுறை நாளாக இருந்ததால் அடுத்த நாளான 21ம் தேதி பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்படி இருமுறை அதிபர் பதவியேற்பது அமெரிக்காவில் இது நான்காவது தடவையாகும்.

கருப்பு இன மக்களின் சம உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் பிறந்த நாள் அனுசரிக்கப்படும் நாளில், ஒரு கருப்பின அதிபர் இரண்டாவது முறையாக பதவியேற்றது, அவரது அகிம்சை வழி உரிமைப் போராட்டத்திற்கு கூடுதல் பெருமையை சேர்த்தது.

அதை நினைவுக்கூறும் வகையில், மார்ட்டின் லூதர் கிங் பயன்படுத்திய பைபிள் மீது ஆணையாக ஒபாமா பதவியேற்றுக் கொண்டார். கூடவே கருப்பின மக்களுக்கு அடிமை விலங்கை உடைத்தெரிந்த ஆப்ரகாம் லிங்கனின் பைபிள் மீதும் ஆணையாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் பராக் ஒபாமா.

இரண்டாவது முறை அதிபர் ஆனபோதும் 'ஒரே நாடு, ஒரே மக்கள். கறுப்பு, வெள்ளை பேதம் இங்கு இல்லை" என்று முழங்கினார்.

பராக் ஒபாமாவின் இறுதி உரை :

ஒபாமா விமர்சனங்களுக்கு சளைக்காதவர். தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டு தனது செயல்களால், அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

ஒருமுறை ஒபாமா 'உண்மையான அன்புக்காக சிறுவயதில் ஏங்கியவன் நான். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டவன்!" என்று தனது சிறுவயது நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். இது அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் இவருக்கு பெரிய அளவில் மதிப்பை ஏற்படுத்தியது.

2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. பதவி ஏற்ற சில மாதங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த அங்கீகாரம் மிகவும் பிரமாண்டமானது என அமெரிக்காவின் 'தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்" பத்திரிகையில் வெளிவந்தது.

இவர் அமெரிக்க அதிபர் என்பதை தாண்டி மிகவும் அன்பானவர். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பூங்காக்களில் அமெரிக்க சிறுவர்களுடன் உரையாடுவார். கடிகாரத்தில் வெடிகுண்டு தயாரித்தான் என்று தவறாக கணித்து கைது செய்யப்பட்ட‌ சிறுவனை 'அஸ்ட்ரானமி நைட் டின்னரு"க்கு அழைத்து, 'நீ எப்போது வேண்டுமானாலும் வெள்ளை மாளிகைக்கு வரலாம்!" என அன்பு காட்டினார். இதுபோன்ற பல செயல்கள் ஒபாமாவின் இன்னொரு முகத்தைக் காட்டியது.

அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் ஒபாமா 'அமெரிக்க அதிபரானால் என்ன?... நானும் ஒரு மனிதன்தான்" என்று இருந்த இவரது இந்தக் குறும்புகள் இளைஞர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒபாமாவின் எட்டு ஆண்டுகால ஆட்சியின் இறுதியில் சிகாகோவில் ஓர் உரை ஆற்றினார். அந்த இறுதி உரை மக்களின் மனதை நெகிழச் செய்தது.

ஒபாமாவின் இறுதி உரை :

நம்மால் முடியும் என்பதை நாம் செய்து காட்டியிருக்கிறோம். என்னுடன் கடந்த 8 வருடங்களும் உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி.

உங்களுக்காக பணி செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். நான் மீண்டும் திரும்பியிருக்கிறேன் ஓர் அமெரிக்க குடிமகனாக, மீதமுள்ள நாட்களை உங்களுடன் கழிப்பதற்காக...

அமெரிக்க அதிபராக கடைசியாக உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன், நீங்கள் உங்களின்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

உங்களது கடின உழைப்பின் மூலம் அமெரிக்காவை ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அமெரிக்க ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள். எதிர்காலம் சிறந்த கைகளில் இருக்குமென்ற நம்பிக்கை என்னிடத்தில் அதிகம் உள்ளது.

என்னுடன் கடந்த 8 வருடங்களாக பணிபுரிந்த எனது சக பணியாளர்களுக்கு எதிர்கால பயணமானது திருமணம், குழந்தைகள் என சிறந்த பயணமாக இருக்கப் போகிறது.

மலியா, சாஷா (ஒபாமாவின் இரு மகள்கள்) நீங்கள் இருவரும் சிறந்த பெண்கள். புத்திசாலிகள், அழகானவர்கள்; அதைக் காட்டிலும் நீங்கள் இருவரும் கனவுகளை உடையவர்கள். உங்கள் தந்தையாக நான் பெருமிதம் கொள்கிறேன்.

மிசேல் எனக்கு மனைவியாகவும் எனது குழந்தைகளுக்கு அம்மாவாகவும் மட்டும் இருக்கவில்லை. எனக்கு சிறந்த தோழியாகவும் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகவும் இருந்திருக்கிறார்.

அவருடைய பணியை அவரே தீர்மானித்தார். அதற்காக என்னிடம் அனுமதி கேட்கவில்லை. வெள்ளை மாளிகையை அனைத்து மக்களுக்கும் சொந்தமானதாக மாற்றினார். அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்து என்னையும் நாட்டையும் பெருமையடையச் செய்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். (இவ்வாறு அவர் கூறும் போது ஒபாமாவின் கண்கள் கலங்கின.)

அமெரிக்க மக்களே, நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அமெரிக்க குடிமக்களாகிய நீங்கள் பங்குபெறாமல் இங்கு ஏதும் நிகழப் போவதில்லை. நாம்தான் ஜனநாயகத்திற்கான சக்தியைக் கொடுக்கிறோம்.

நாம் தளர்ந்து போகாதவரை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நம்மிடம் போட்டி போட முடியாது.

அமெரிக்கர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பெண் வெறுப்பு, நிறவெறி, பாலியல் பாகுபாடு, மதவெறுப்பு போன்றவற்றை மறந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட பல துறைகளில் அமெரிக்கா முன்னேறியுள்ளது.

கடந்த 8 வருடங்களில் தீவிரவாத தாக்குதல் ஏதும் அமெரிக்காவில் நடக்கவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம்.

பருவநிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த உலகத்தை காப்பற்றுவதற்கான முயற்சிகளை நாம் முன்னேடுத்துச் செல்ல வேண்டும்.

ஏனெனில் நம் குழந்தைகளுக்கு அதற்கான நேரம் இருக்காது. அவர்கள் அதற்கான விளைவுகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.

நான் பதவி ஏற்றபோது அமெரிக்காவில் நிறம் சார்ந்த பேச்சுகள் அதிகளவில் இருந்தது. நிறவெறி நமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது.

கடந்த இருபது வருடங்களுக்கு முன் இருந்த சூழலைக் காட்டிலும் தற்போதைய சூழல் சிறப்பாகத்தான் உள்ளது என நான் தற்போது உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

நீங்கள்தான் என்னை சிறந்த அதிபராக உருவாக்கினீர்கள். நீங்கள்தான் என்னை சிறந்த மனிதராகவும் உருவாக்கினீர்கள் என அனைவரையும் கண்கலங்க வைத்ததுடன், ஒவ்வொரு அமெரிக்கர்களையும் நெகிழ வைத்தார் ஒபாமா.

அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின அதிபர் என்ற பெருமையுடன் 8 வருடம் ஆட்சி புரிந்த ஒபாமாவின் பதவிக்காலம் 2017; ஜனவரி 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

பதவிக்காலம் முடிந்ததும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ஒபாமாவை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர் அமெரிக்க மக்கள். ஒபாமா, அமெரிக்க அதிபர் செய்யும் தவறுகளுக்கு எதிர்ப்புக்குரல் கொடுக்கிறார். அன்பால் உலகை ஆட்சி செய்கிறார். அன்று அன்புக்கு ஏங்கியவர் இன்று அன்பின் அடையாளமாய் திகழ்கிறார்.

உலகின் மிகச்சிறந்த அதிபர்களில் இடம்பிடித்துள்ளார் பாரக் ஒபாமா. தனது இனத்தையே ஒதுக்கும் ஓர் இடத்தில், அந்நாட்டிற்கே அதிபராக தன் இனத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேமிக்க வேண்டிய, பிறரின் அன்பு, பாசம் எல்லாவற்றையும் அமெரிக்க மக்களிடத்தில் பெற்றிருக்கிறார்.

அமெரிக்க மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடம்பிடித்துள்ளார் ஒபாமா. முயற்சித்தால் முடியும் என்பதற்கு ஒபாமா ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

இவரைப்போலவே நாமும் நம் மனதில் ஓர் முடிவை தீர்க்கமாக எடுத்து முயற்சித்தோமேயானால் அந்த வானம் கூட வசப்படும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக