இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிராமப்புற விளையாட்டுகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தையும், மனத் தெளிவையும், நண்பர்கள் வட்டத்தையும் அதிகரிக்கச் செய்கின்றன. குழுவாக குழந்தைகள் சேர்ந்து விளையாடும் போது அவர்களுக்கு சோர்வு என்பதே ஏற்படாது. நேரம் போவது கூட தெரியாமல் விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.
கிராமப்புற விளையாட்டுகளில் இன்று நாம் பார்க்க இருக்கும் விளையாட்டின் பெயர் நாடு பிடித்தல் விளையாட்டு.
எத்தனை பேர் விளையாடுவது?
நான்கு பேர்
விளையாட தேவையானது?
ஒரு அடி உயரமுள்ள குச்சி
எப்படி விளையாடுவது?
மைதானத்தில் சம அளவிலான நான்கு பெரிய கட்டங்களை வரைந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டம்; அதுதான் அவர்களின் நாடு. தங்களுக்குப் பிடித்தமான நாட்டின் பெயரை வைத்துக் கொள்ளலாம்.
நான்கு பேரும் தங்களின் நாட்டுக்குள் நிற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு காலாவது நாட்டுக்குள் இருக்க வேண்டும். நான்கு பேரில் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவர் கையில் குச்சியை வைத்திருப்பார்.
கையில் குச்சி வைத்திருப்பவர், ரெடி என்று சொல்லிவிட்டு, ஏதேனும் ஒரு நாட்டுக்குள் குச்சியை வீசி விட்டு ஓடி விடுவார். குச்சி சரியாக ஒருவரின் நாட்டுக்குள் விழ வேண்டும். இரு நாடுகளின் எல்லையிலோ, கட்டத்துக்கு வெளியிலோ விழுந்தால் மறுபடியும் வீச வேண்டும்.
குச்சியை வீசும்போதே, மற்றவர்களும் ஓடிவிடலாம். யாருடைய நாட்டுக்குள் குச்சி விழுகிறதோ, அவர்கள் அந்தக் குச்சியைக் கையில் எடுத்து, ஸ்டாப் என்று சொல்ல வேண்டும். அதுவரை மற்றவர்கள் ஓடிக் கொண்டிருக்கலாம். ஸ்டாப் சொன்னதும், அனைவரும் நின்று விட வேண்டும்.
கையில் குச்சியை எடுத்தவர், மற்ற மூன்று நாட்டுக்காரர்களில் அருகில் உள்ளவரை தன்னிடம் உள்ள குச்சியை அவரின் மீது படும்படி வீச வேண்டும். அப்படி வீசப்பட்ட குச்சி, வேறு நாட்டுக்காரர் மீது பட்டுவிட்டால், வீசியவர் ஜெயித்துவிட்டார் என்று அர்த்தம். குச்சி படாவிட்டால், அந்த நாட்டுக்காரர் ஜெயித்துவிட்டார்.
ஜெயித்தவர், தோற்ற நாட்டுக்காரரின் எல்லையைப் பிடிக்கலாம். அதாவது, தன் நாட்டுக்குள் இருந்தபடி, அந்தக் குச்சியால், தோற்ற நாட்டுக்காரரின் நாட்டுக்குள் எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் கோடு வரைந்து கொள்ளலாம்.
அப்படி நாடு பிடிக்கும்போது, வரைபவர் ஒருமுறை வைத்த காலை நகர்த்தக்கூடாது. வரைவதற்கு முன்பே கால்களை அகட்டி வைத்துக் கொள்ளலாம். கோடு வரையும்போது, ஒரே முறையில் குச்சியை தவறவிடாமல், கோட்டை பாதியில் நிறுத்தாமல் முழுமையாக வரைய வேண்டும். அவ்வாறு வரையும்போது கையை நிலத்தில் ஊன்றக்கூடாது.
நாடு பிடிப்பவர், எல்லையைப் பெரிதுபடுத்தும்போது தவறு செய்துவிட்டால், அந்த வாய்ப்பு முடிந்துவிட்டது. அடுத்து, தோற்றவரிடம் குச்சி தரப்படும். அவர் ரெடி சொல்லி, குச்சியை ஏதேனும் ஒரு நாட்டில் போட்டுவிட்டு ஓடலாம். இப்படியே விளையாட்டைத் தொடரலாம்.
தனது நாட்டின் பகுதியை, மற்றவர்களிடம் முழுமையாக இழந்தவர், ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். கடைசியாக பெரிய நாட்டை யார் வைத்திருக்கிறார்களோ அவரே வென்றவர் ஆவார்.
பயன்கள் :
எச்சரிக்கை திறன் மேம்படும்.
தனது இலக்கை விரிவாக்கும் எண்ணம் உயரும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக