இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
1. ஆகாயத்தை இறைவனாக
தியானிப்பவனுக்கு, பறவைகளின் பேசும் சக்தி கிடைக்கும்.
2. தன் கண்களில் சூரியனையும்,
சூரியனில் தன் கண்களையும் இணைத்து மனதில் இறைவனை தியானம் செய்பவனுக்கு, உலகம்
முழவதையும் கண்ணால் பார்க்கும் சக்தி அடைகிறான்.
3. மனதை உபாதான காரணமாகக் கொண்டு,
எந்தெந்த வடிவத்தை அடைய விரும்பி பகவானை தியானிக்கும் யோகிக்கு, தான் விரும்பும்
வடிவத்தை அடைகிறான்.
4. தான் விரும்பும் காலத்தில் மரணமடைய
விரும்பும் யோகி, குதிகாலை, மலத்துவாரத்தை அடைத்துக்கொண்டு, பிராணசக்தியை,
இருதயம்-மார்பு-கழத்து-தலை என்ற வரிசைப்படி மேல் நோக்கி கொண்டு வந்து, பின்னர்
’பிரம்மரந்திரம்’ என்ற கபாலத்தில் உள்ள துவாரம் வழியாக உயிரை வெளியேற்றி துறக்க
வேண்டும். இச்சக்திக்கு கபால மோட்சம் என்பர்.
5. மனம், உடல், அதில் உறையும்
வாயுக்களுடன் சேர்ந்து பகவானை தியானிப்பவனுக்கு, ’மனோஜவம்’ என்ற ஆற்றல் கிடைத்து
அதன் மூலம் யோகி தான் விரும்ம்பும் இடத்திற்கு அந்த விநாடியே சென்றடைகிறான்.
6. தான் விரும்பும் உடலில் நுழைய
விரும்பும் யோகி, தான் அவ்வுடலில் இருப்பதாகச் தியானித்துக் கொண்டு, பிராணன்
சூட்சும வடிவாக, வெளியிலிருக்கும், வாயுவுடன், தன் உடலை விட்டு விட்டு வேறு உடலில்
நுழைகிறான். இதனை ’கூடு விட்டு கூடு பாய்தல்’ என்பர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக