இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கல்வராயன் மலை விழுப்புரத்திலிருந்து ஏறத்தாழ 122கி.மீ தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து 46கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 289கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
பச்சை கம்பளம் போர்த்தியது போல் பச்சை பசேல் போன்று காட்சியளிக்கும் அழகிய மலை.
சாலையில் பயணிக்கும்போது சாலையின் ஓரத்தில் இருக்கும் அழகிய வயல்வெளிகள் கண்களுக்கு விருந்து.
கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். ஓங்கி உயர்ந்த பச்சை பசும் மரங்களும், ஆர்ப்பரிக்கும் அருவிகளும், பறந்து திரியும் பறவைகளும், வன விலங்குகளும் காணப்படும் இடமாக உள்ள கல்வராயன் மலையை ஏழைகளின் மலைவாசத்தலம் என அழைக்கின்றனர்.
கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப்பகுதி 'சின்னக் கல்வராயன்" மற்றும் தெற்குப்பகுதி 'பெரிய கல்வராயன்" என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளது.
இங்குள்ள நீர்வீழ்ச்சிகளை காண்பதும், குளிப்பதும் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தமாக உள்ளது. கல்வராயன் மலை செல்பவர்கள் கோமுகி அணையைப் பார்க்காமல் திரும்பமாட்டார்கள்.
ஏனென்றால் அங்கு குழந்தைகள் பூங்காவும், ஆற்றின் குறுக்கே தடுப்பணையும் அமைக்கப்பட்டு படகு குளம் உருவாகியுள்ளது.
இங்கு காட்டுப்பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளை பார்க்கும் அரிய வாய்ப்பும் கிடைக்கிறது. மலையின் மீது செல்லச் செல்ல சந்தன மரம், தேக்கு மரம் போன்றவற்றை காண முடியும்.
எப்படி செல்வது?
சின்ன சேலத்திலிருந்தும், கள்ளக்குறிச்சியிலிருந்தும் பேருந்துகளின் மூலம் கல்வராயன் மலைக்கு பயணம் செய்யலாம்.
விமானம் வழியாக :
சென்னை விமான நிலையம்.
ரயில் வழியாக :
விழுப்புரம் ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
மழைக்காலங்களில் சென்றால் அருவிகளில் குளித்து மகிழலாம்.
எங்கு தங்குவது?
விழுப்புரத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
கோமுகி அணை.
மேகம் அருவி.
பெரியார் அருவி.
தாவரவியல் பூங்கா.
வெங்கட்ரமணா கோவில்.
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகம்மன் கோவில்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
செஞ்சி கோட்டை.
செஞ்சி மதிற்சுவர்.
வேணுகோபால் சுவாமி கோவில்.
புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில்.
24 தீர்த்தங்கரர்கள்.
மேல்நாரியப்பனூர் தேவாலயம்.
உலகளந்த பெருமாள் திருக்கோவிலூர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக