இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சுற்றிலும் பச்சைப்பசேல் என்ற மரங்களும், சலசலத்து ஓடும் நதியும், அதன் நடுவே கோவில்கள் அமைந்திருந்தால் ஆத்ம திருப்தியைக் கொடுக்கும். அப்படி அமைந்துள்ள ஒரு இடத்திற்கு சென்றால் ஒரு வித மன அமைதி கிடைக்கும்.
இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை உணர்த்துவதற்காக இங்கே ஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் சால்மலா ஆற்றங்கரை அமைந்துள்ளது. இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான இங்கு தென்மேற்கு பருவமழையின் போது வெள்ளம் கரை புரண்டு ஓடும். அப்போது இந்தப் பகுதியை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த அத்தனை லிங்கங்களும் ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் உள்ளன. இவை அனைத்தையும் ஆற்றுநீர் வற்றும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.
இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவின் போது, இந்தப் பகுதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது.
கோவில்களில் உள்ள லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வதுபோல இங்கு லிங்கங்களுக்கு அபிஷேகம் எதுவும் செய்ய தேவையில்லை. ஏனெனில் இந்த லிங்கங்களுக்கு எந்நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம்தான். இதுதான் இங்குள்ள லிங்கங்களின் சிறப்பாகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக