இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடும்போது அவர்களுக்கு மற்றவர்களை பற்றி புரிந்துக்கொள்ளும் மனப்பான்மையும், பல நன்மைகளும் உண்டாகின்றன.
அந்த வகையில் நாம் இன்று குழந்தைகளுக்கு ஆரவாரமும், கொண்டாட்டமும் அதிகளவில் உள்ள முத்து பறித்தல் விளையாட்டை பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை 7 அல்லது 8 பேர் வரை சேர்ந்து விளையாடலாம்.
விளையாடத் தேவையானவை :
புளியங்கொட்டை
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டை தொடங்குவதற்கு முன்பு மூன்று அல்லது நான்கு நபர்கள் நிற்கும் வகையில் பெரிய வட்டமொன்றை வரைந்துக்கொள்ள வேண்டும்.
பிறகு விளையாடும் குழந்தைகள் அனைவரும் அவர்கள் கைகளில் உள்ள புளியங்கொட்டைகளை வட்டத்துக்குள் வைக்க வேண்டும்.
அவ்வாறு வட்டத்திற்குள் விளையாடும் நபர்கள் அனைவரும் முத்துக்களை வைத்துவிட்டு, அந்த வட்டத்தின் ஏதாவதொரு பக்கவாட்டு பகுதியில் கோடு ஒன்றை வரைந்துக்கொள்ள வேண்டும்.
பின்பு விளையாடும் நபர்கள் அனைவரும் 15 அடி தொலைவில் சென்று நின்றுக்கொள்ள வேண்டும். அங்கிருந்தே அவர்களின் கையில் உள்ள செதுக்குச் சில்லை (சிப்பி) வட்டத்தின் அருகேயுள்ள கோட்டை நோக்கி வீச வேண்டும்.
இப்போது கோட்டுக்கு அருகில் எந்த செதுக்குச் சில் விழுந்ததோ அவர் முதல் போட்டியாளர் ஆவார். அடுத்தடுத்து செதுக்குச் சில்லைப் போட்டவர்கள் அந்த வரிசைகேற்ப விளையாட வேண்டும்.
அதன்பின் முதல் போட்டியாளர் செதுக்குச் சில் விழுந்த இடத்தில் நின்றபடி, வட்டத்தில் உள்ள புளியங்கொட்டைகளை செதுக்குச் சில்லினால் குறிப்பார்த்து அடிக்க வேண்டும்.
அவ்வாறு முதல் போட்டியாளர் வட்டத்தில் இருக்கும் புளியங்கொட்டையை அடிக்கும்போது, வெளியேறும் புளியங்கொட்டையை எடுத்துக்கொண்டு, விளையாட்டை தொடர வேண்டும்.
அதேமாதிரி முதல் போட்டியாளர் வட்டத்தில் இருக்கும் புளியங்கொட்டைகளை அடிக்கும்போது, அவை வெளியே வரவில்லையென்றால், அடுத்த போட்டியாளர் விளையாட்டை தொடங்க வேண்டும்.
விளையாடும் நபர்கள் வட்டத்தில் இருக்கும் புளியங்கொட்டையை செதுக்குச் சில்லில் அடிக்கும்போது, அந்தச் செதுக்குச் சில்லும் வட்டத்தில் இருந்து வெளியே வரவேண்டும்.
செதுக்குச் சில் தவறி வட்டத்திற்குள் நின்றுவிட்டால், அதற்கு அபராதமாக இரண்டு, மூன்று புளியங்கொட்டைகளை வட்டத்திற்குள் போட்டுவிட்டு செதுக்குச் சில்லை எடுத்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக