Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 28 ஆகஸ்ட், 2019

வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள்..!

 Image result for வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள்..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஒரு பணக்கார முதலாளியின் வீட்டில் ராமசாமி என்ற ஒருவர் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தார். அவர் முதலாளி தினமும் வீட்டிற்கு வரும் போது ஓடோடிச் சென்று வீட்டுக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் ஒரு நாள்கூட அந்த முதலாளி பதில் கூறியது இல்லை. காவலாளியின் முகத்தை ஏறெடுத்து பார்க்கவும் மாட்டார்.
 ஒரு நாள் பசியில் இருந்த அந்த காவலாளி வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியின் அருகில் உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பைத் தொட்டியிடம் சென்றார். அப்போது காவலாளி சென்றதை அந்த வீட்டு முதலாளி பார்த்தார். ஆனால் வழக்கம் போல் எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.
 அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகள் ஒரு பையினுள் இருந்தது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
 இவ்வாறே தினமும் உணவுப்பொருட்களை தவறாமல் எடுத்து சென்று தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தார். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதிற்குள் ஒரு நகைப்புடன் இருந்தார்.
 திடீரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். காவலாளி அன்றும் அதே இடத்தில் உணவுப்பையை தேடினார். ஆனால் அங்கு உணவு இல்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர்கள் யாரேனும் எடுத்திருப்பார்கள் என நினைத்து விட்டுவிட்டார். மீண்டும் இரண்டாம் நாள் பார்க்கிறார், அந்த இடத்தில் உணவு இல்லை, மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறார். அவருக்கு உணவுப்பை தென்படவேயில்லை.
 இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்திற்கு உணவளிக்க பெரும் சிரமமானது. உடனே தனது முதலாளியம்மாவிடம் சென்று சம்பளத்தை உயர்த்தி தாருங்கள். இல்லையென்றால் வேலையை விட்டு விடுவதாக கூறினார். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பத்தின் அவஸ்தையையும் கூறினார்.
 உடனே முதலாளியம்மா எப்போதிலிருந்து உணவுப்பை இல்லாமல் போனதென்று கேட்டார். அதற்கு அவரும் முதலாளி இறந்த நாளிலிருந்து என்று கூறினார். அவர் கூறியதும் முதலாளியம்மா அழத் தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழாதீர்கள் என கூறினார்.
 அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.
 அதைக் கேட்டதும், காவலாளி நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லி ஏறெடுத்து கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும், நம்பாமலும் யோசித்தபடியே சென்றார். அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீட்டிற்கு சென்று உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான்.
 அதற்கு காவலாளி நன்றி சொல்லுவார். ஆனால் முதலாளி மகனும் முதலாளி மாறியே அதற்கு பதில் சொல்லாமலே செல்வான். இது போல் ஒரு நாள் முதலாளியின் மகன் வீட்டிற்கு வந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழக்கம் போல காவலாளி நன்றி கூறினார். அதற்கு எந்த பதிலும் வராததால் பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னார். திரும்பிப் பார்த்த அந்த சிறுவன் எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றான்.
 நீதி :
நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் என்னவென்று புரியாமலும், தெரிந்து கொள்ளாமலும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வௌ;வேறு விதமான போராட்டக் களத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக