Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 28 ஆகஸ்ட், 2019

நீலநிற எரிமலை

 Related image
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



நம் அன்றாட வாழ்வில் புதுப்புது ஆச்சரியங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

 எரிமலை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எரிமலை வெடித்து சிவப்பு நிறத்தில் வெளிவரும் லாவா குழம்புகள்தான்.

 இந்தோனேஷியாவில் உள்ள ஒரு எரிமலை வெடித்து வெளிவரும் லாவா குழம்பின் நிறம் எது என்று தெரியுமா? அதைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்..

 பல எரிமலைகளை கொண்ட நாடுகளில் இந்தோனிஷியாவும் ஒன்று.

 இந்தோனேஷியா நாட்டில் அமைந்துள்ள ஜாவா தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது கவா இஜென் எரிமலை.

பார்க்க வித்தியாசமாகவும், அழகாகவும் இருந்தாலும், இது நச்சுத்தன்மை கலந்த புகையை விடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 ஆனால் மலையேறும் ஆர்வலர்கள், முகத்தில் துணியைக் கட்டி மலைமேல் ஏறி நீலநிறக் கற்களை சேகரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 இந்த எரிமலை விடும் நீலநிற நெருப்புப் பிழம்பு இரவில் மட்டுமே தெரிவதாக கூறுகின்றனர்.

 இந்த எரிமலையின் முகப்புக்குள் ஒரு மிகப்பெரிய ஆசிட் ஏரி இருப்பதாகவும், இது நீல ஏரி எனவும் அழைக்கின்றனர்.

 இந்த ஏரியில் இருக்கும் ஆசிட்டின் மதிப்பு 0.5. அதாவது நமது கார் பேட்டரிகளில் இருக்கும் ஆசிட் போன்றது.

மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தொடர்ச்சியாக உடலின் மேல் படுவதால் பாதிப்புகள் நிகழ்வதாக கூறுகின்றனர்.

 இந்த ஏரிக்கு அருகில்தான் பெரும்பாலான கந்தகத் தாதுக்கள் இருக்கின்றன எனவும், இத்தகைய அபாயங்களைக் கொண்ட இஜென் எரிமலைச் சுரங்கமானது மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது.

 மேலும், பகல் நேரங்களில் இந்தப் பகுதியின் வெப்பநிலை சாதாரண வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

எரிமலையின் முகப்புப் பகுதியில் கண்ணைக் கவரும் வகையில் தோன்றும் நீலநிற தீ சுவாலைகள்தான் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!