Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

Book my Show நிறுவனர் ஆஷிஷ் ஹெம்ரஜானி

  Image result for Book my Show நிறுவனர் ஆஷிஷ் ஹெம்ரஜானி

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அந்த காலத்தில் மக்கள் ஒரு படத்தை ஐந்து அல்லது ஆறு முறையாவது பார்ப்பது வழக்கம். நம் அப்பா, அம்மாவிடம் பழைய படத்தை பற்றி கேட்டால், நான் இப்படத்தை ஆறு முறை பார்த்தேன், எட்டு முறை பார்த்தேன் என கூற கேட்டிருப்போம்.

மக்கள் படம் பார்ப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தனர் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி அக்காலத்தில் ஒரு படத்தை பார்ப்பதற்கு டிக்கெட்டை அடித்து பிடித்தாவது வாங்கி விடுவார்கள்.

ஆனால், இப்போது உள்ள நவீன காலத்தில் ஒரு படத்தை ஒரு முறை பார்ப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில், விடுமுறை நாட்களில் படம் பார்க்கப்போகலாம் என திட்டமிடுவோம்.

சரி என்று படம் பார்க்கப்போனால் அங்கு டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகமாக இருப்பதால், டிக்கெட் பெறுவதில் சிரமமாக இருக்கும். இல்லை கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் படம் பார்க்காமல் திரும்பி வருபவரும் சிலர் உண்டு.

இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதியை கொண்டு வந்தது புக் மை ஷோ (டீழழம அல ளாழற) இணையம்.

இன்று புக் மை ஷோ இணையத்தின் நிறுவனரான ஆஷிஷ் ஹெம்ரஜானி பற்றி விரிவாக காண்போம்!!

ஆஷிஷ் ஹெம்ரஜானி தனது படிப்பை Sydenbham Institute of Management, Mumbai University-ல் முடித்தார். படிப்பை முடித்ததும் JW Thompson Company-ல் வேலைக்கு சேர்ந்தார். ஆஷிஷ்க்கு பயணம் செய்வது மிகவும் விருப்பமான ஒன்று. 1992ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது அவருக்கு புதுவிதமான சிந்தனை ஒன்று தோன்றியது. அங்கிருந்த ரேடியோ ஸ்டேஷனில் Rugby Game ஒன்றிற்கான டிக்கெட்டுகளை விற்பதை அவர் கேட்டார்.

இந்த மாதிரியான டீரளiநௌளக்கு எப்படிப்பட்ட மார்க்கெட் இருக்கிறது என்றும், எந்த அளவுக்கு இலாபகரமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி செய்து கடைசியாக இதன் நுணுக்கங்களை அறிந்து தன்னுடைய சொந்த கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆஷிஷ் ஹெம்ரஜானி 24வது வயதில் தனது முதல் கம்பெனியான Bigtree Entertiment Pvt Ltdஐ தொடங்கினார். இதன் தலைமை அலுவலகம் அவரது படுக்கையறையாகும் (பெட்ரூம்).

அவருடைய நெருங்கிய நண்பர்களான பரிக்ஷித் டார் மற்றும் ராஜேஷ் பல்பாண்டே ஆகிய இருவரையும் தனது கம்பெனியில் சேர அழைத்தார். பரிக்ஷித் தொழில்நுட்பத் துறையையும், ராஜேஷ் நிதித்துறையையும் பார்த்துக்கொண்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து சிறந்த தொழிலதிபர்கள் ஆக வேண்டும் என்ற கனவுடன் வேலையை தொடங்கினார்கள்;. ஆனால் அதற்கேற்ற பொருளாதாரம் இல்லாததால் அவர்கள் பெரிய முதலீட்டாளர்களை தேடி சென்றனர்.

அப்போதெல்லாம் முதலீட்டாளர்கள் கிடைப்பது என்பது அரிதான விஷயம். சரியான இணைய வசதி இல்லாமல் அதற்கான தொழில்நுட்ப வசதி இல்லாமல் அவர்களது திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திணறினர்.

ஆஷிஷ் ஹெம்ரஜானி மற்றும் அவரது நண்பர்களின் தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் பார்த்த JP Morgan Chase கம்பெனி இவர்களது யோசனையில் முதலீடு செய்ய முன்வந்தது. இதனை முடிவு செய்ய அவர்களிடம் நேரில் சென்று பேசக்கூட பணம் இல்லாமல் Fax மூலமாக திட்டத்தை அனுப்பி JP Morgan Invest ஒப்பந்தத்தை முடிவு செய்தனர்.

இந்த ஒப்பந்தம் முடிந்ததும் Go For Ticketing என்கிற  Brand பெயரில் இவர்கள் Business-ஐ துவங்கினர். 2002-ல் அப்பெயரை India Ticketing என்று மாற்றி கடைசியாக  Book my Show  என்று கம்பெனி பெயரை நியமித்தார்கள்.

அவர்கள் நினைத்தப்படி இந்த வேலை சுலபமானதாக இல்லை. அன்றைய காலக்கட்டத்தில் Online-ல் டிக்கெட் விற்பது என்பது சாதாரண விஷயமல்ல.

Credit Card ,Debit Card வசதி, நெட் பேங்கிங், சரியான Broadbrand ஆகிய வசதிகள் இல்லாமல் திரையரங்குகளில் சரியான e-Ticketing Software இல்லாமல் ஒரே ஒரு திரை மட்டும் உள்ள திரையரங்குகள் இருந்ததால் இத்திட்டத்தை செயல்படுத்த இவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதுபோல் நிறைய சிக்கல்கள் இருந்தும் இவர்கள் மனம் தளராமல் திரையரங்குகளில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கினர். 100 டிரைவர்களை வேலைக்கு எடுத்து மக்கள் எப்பொழுதெல்லாம் டிக்கெட் புக் செய்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்களின் வீடு தேடிச் சென்று டிக்கெட்டுகளை வழங்கும் ஒரு முறையை கையாளத் தொடங்கினர்.

இப்படி ஆரம்பித்த இவர்களது வேலையில் 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்ய ஆரம்பித்தனர். வேலையும் நன்றாக போய் கொண்டிருந்தது. அந்த சமயம் 2002-ல் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட விபரீதம் ஒன்று நடந்தது.

அச்சமயம் .com மார்க்கெட் தோல்வியடைந்தபோது தொழில்துறையில் இருந்தவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அதிலும் Bigtree Entertiment புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புதிய கம்பெனி என்பதால் அதிகப்படியாக பாதிப்புக்குள்ளாகியது. இணையம் சம்பந்தமான தொழில்கள் நஷ்டத்திலேயே சென்று கொண்டிருந்தது. முதலீட்டாளர்கள் அனைவரும் பின்வாங்க ஆரம்பித்தனர்.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொழிலாளர்களின் ஊதியங்களை குறைக்க ஆரம்பித்தனர். டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் Bussiness-ஐ செயல்படுத்தி, மற்ற நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட கிளை நிறுவனங்களை மூட முடிவு செய்தனர். 150 பேர் வேலை செய்த இடத்தில் வெறும் 6 பேர் மட்டுமே வேலை செய்யும் நிலை உருவானது.

அந்நிலையில் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயையும் Bussienss-ல் முதலீடு செய்தனர். 2002 முதல் 2006-ஆம் ஆண்டு வரை இவர்களது Bussienss ஆரம்ப காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. சிறிது நாட்களில் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர இயலாமல், சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் திணறினர். இந்த சூழல் இவர்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்தது.

ஆஷிஷ்-ன் நிறுவனம், நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று Bussienss -ஐ மொத்தமாக முடிவுக்கு கொண்டு வருவது, இல்லையென்றால் தான் வைத்திருந்த மொத்த சேமிப்புகளையும் இதில் முதலீடு செய்து முதலிலிருந்து ஆரம்பிப்பது. இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் ஆஷிஷ் தனது நம்பிக்கையை கைவிடாமல் துணிச்சலுடன் திரும்பவும் சில மாற்றங்களுடன் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

ஒரு நல்ல தொழிலதிபருக்கு உண்டான அடிப்படை உந்துதலால், ஏற்கனவே செய்த தவறுகளை மாற்றிக்கொண்டார். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மூன்று பேரும் தனது கம்பெனியை திரும்பவும் கையில் எடுத்து செயல்படுத்த ஆரம்பித்தனர் .Com-ல் இருந்த நெருக்கடிகள் குறைந்ததும் இவர்களது Bussienss நல்ல நிலைமைக்கு வர ஆரம்பித்தது.

அதேசமயத்தில் Credit Card ,Debit Card  வசதிகளும் பெருக ஆரம்பித்தது. அதேபோல் இன்டர்நெட் வசதியும் பெருவாரியாக வளர்ந்து ஒரு திடமான அமைப்பாக மாறியது. 2002 முதல் 2004ஆம் ஆண்டுக்குள் பல்வேறு அமைப்புகள்  கொண்ட திரையரங்குகள் அதிகம் உருவாகின. எனவே, ஆஷிஷ் & கோ இந்த திரையரங்குகளுக்கு Automatic ticketing Softwareஐ செய்து கொடுத்தனர். இது ஒரு நல்ல தொழில் மாதிரியாக அவர்களுக்கு அமைந்தது.

இவர்களது Bussienss நன்கு வளர ஆரம்பித்து 2007ஆம் ஆண்டு இவர்களது கம்பெனியின் மதிப்பீடு 24 கோடியாக கணிக்கப்பட்டது. அந்த ஆண்டே நெட்வொர்க் 18 கம்பெனி ஆஷிஷ் கம்பெனியின் மீது 14.5 கோடி முதலீடு செய்தது. இதனால் Bussienss ல் 60ம% பங்குகள் அவர்களுக்கு கிடைத்தது. சரியான சமயம் பார்த்து டிக்கெட்டிங் Bussienss -ஐ தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து Book My Show-ஐ மீண்டும் திறந்தனர்.

ஆனால், இந்தமுறை மிகவும் சிக்கனமாக Bussienss -ஐ முன்னேற்றி கொண்டு சென்றனர்;. சிறிது காலத்தில் Book My Show எல்லா ஊர்களிலும் பிரபலமடைந்தது. சரியான நேரத்தில் திட்டமிட்டு செயல்படுத்தியதால் Book My Show -ன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. மேலும் மலேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் இந்த Bussienss -ஐ பரவ செய்தனர். இதனால் Book My Show  உலகளவில் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து Formula 1,IPL,  Aircel Chennai Open, Super Fight Leak போன்ற நிகழ்ச்சிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்றனர். இன்றைக்கு இந்த கம்பெனியின் மதிப்பீடு ரூ.3000 கோடிக்கும் மேல் உள்ளது. இத்துடன் இதன் வளர்ச்சி நிற்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆஷிஷ் தனது வாழ்க்கையில் பல தோல்விகளை கண்டாலும் தொழிலதிபர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் தோல்வியை கண்டு துவளாமல், திரும்பவும் எழுந்து நிற்க வேண்டும் என்ற மனதைரியமும், விடாமுயற்சியும் தான் அவரை மென்மேலும் வளரச் செய்தது.

ஒரு 24 வயது இளைஞன் பெரிய கனவுகளுடன் தொடங்கிய ஒரு Business தான் இந்த Book My Show  அந்த வகையில் தற்போது Book My Show உலகளவில் பிரபலமடைந்துள்ளது என்பது பிரமிக்கத்தக்க விஷயமே...!!
                                                                                                                        




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக