>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 1 ஆகஸ்ட், 2019

    ஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை

    Image result for ஜோசப் ஸ்வான்

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    1879 அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கு கொடுத்த மிக உன்னத பரிசு எலெக்ட்ரிக் பல்பு என நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களா? எடிசன் மிகப்பெரிய விஞ்ஞானிதான் ஆனால் அவர் மிக மேசமான அறிவியல் வியாபாரி என்று உங்களுக்குத் தெரியுமா? ஏழை விஞ்ஞானி ஜோசப் ஸ்வான் முதலில் கண்டு பிடித்த பல்பை தனதாக்கி எடிசன் வரலாற்றில் மோசடி புகழ் பெற்றது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் நண்பர்களே வரலாற்றை புரட்டி பார்போம்.
    1828 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஒரு எளிய குடும்பத்தில் ஜான் ஸ்வான் மற்றும் இசெபெல்லா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த ஜோசப் ஸ்வான் தனது குடும்ப வறுமை நிலையிலும் இயற்பியல், வேதியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மிகச்சிறந்த புலமை பெற்றார் தனது குடும்ப வறுமையை போக்க ஏதாவது கண்டுபிடிப்பு செய்து அதன் மூலம் வறுவாய் ஈட்டலாம் என நினைத்தார்.
    தனது 22 ஆம் வயதிலே அதாவது 1850 ஆம் ஆண்டிலேயே பல்பினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஜோசப் ஸ்வான் கண்ணாடியிலான வெற்றிடக்குழாயில் மெல்லிய கம்பியிலான இழையை (Filament) சூடாக்குவதின் மூலம் ஒளியை பெற முடியும் என்று கண்டறிந்தார். அதிக மின்சாரம் பாய்வதால் கம்பியிலான இழை சூடு தாங்காமல் அறுந்து அறுந்து போனது தனது முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத ஸ்வான் வேறு வேறு உலோகங்களை மெல்லிய கம்பி இழையாக பயன்படுத்த முடியுமா என்று சோதித்துப் பார்த்தார் இதே சமயம் தாமஸ் ஆல்வா எடிசன், ஹம்பிரிடேவி ,ஜேம்ஸ் பவ்மான் போன்ற பலரும் பல்பினை கண்டுபிடிக்க ஆராய்ந்து வந்தனர்.
    1875 இல் ஜோசப் ஸ்வான் அதிக மின்தடையை தாங்கும் கார்பன் இழையை கொண்டு பல்பினை தயாரித்தார் அதை மேலும் மேலும் மெருகேற்றி 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் விஞ்ஞானிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தார் 1879 ஆம் ஆண்டு ஜனவரி 17 பொது மக்களுக்கும் நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பித்தார் அத்துடன் காப்புரிமைக்கும் விண்ணப்பித்தார். 
    ஆனால் அவரது காப்புரிமை விண்ணப்பம் சரியாக நிரப்பப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி அவரது காப்புரிமை நிராகரிக்கப்பட்டது அவருக்கு பின் சற்றேறக்குறைய அவரைப் போலவே பல்ப் தயாரித்து 1879 அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் வெளியிட்டு தனது செல்வாக்கால் காப்புரிமையை பெற்றுக் கொண்டார் ஆனால் ஜோசப் ஸ்வானால் ஏழ்மையாலும் ஆதரவின்மையாலும் எடிசனுடன் போட்டி போட முடியவில்லை. 
    ஸ்வான் எங்கே தனியே வேறு முறையில் பல்ப் செய்து வரலாற்றில் இடம்பிடித்து விடுவாரோ என்று பயந்து ஜோசப் ஸ்வானை தன்னுடன் கூட்டு சேருமாறு அழைத்தார் எடிசன் தன் குடும்ப வறுமையை போக்க ஜோசப் ஸ்வான் எடிசனுடன் கூட்டு சேர்ந்தார். பின்னர் பல முயற்சிக்களுக்கு பிறகு எடிசன் டங்ஸ்டனை மின் இழையாக கொண்டு தற்போது நாம் பயன்படுத்திவரும் எலெக்ட்ரிக் பல்பினை கண்டுபிடித்தது தனி வரலாறு. 
    எப்படியோ பல்பினை கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு நாம் ஜோசப் ஸ்வான் என்று பதில் கூறுவதில்லை எடிசன் என்று தான் கூறுகிறோம் தனது செல்வாக்கால் ஜோசப் ஸ்வானுக்கு கிடைக்க வேண்டிய புகழை தட்டி பறித்துக் கொண்டார் தாமஸ் ஆல்வா எடிசன்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக