இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமெரிக்காவில்
வரலாற்று புகழ்மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று தீக்கிரையானது.
மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்பேலியா((Westphalia)) என்ற இடத்தில் கடந்த 1895ம் ஆண்டு மரப்பலகைகளில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த தேவாலயம் கடந்த இரு தினங்களுக்கு முன் திடீரென தீப்பற்றியது. வளாகம் முழுவதும் தீப்பற்றிய நிலையில், தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருநாட்கள் நடந்த இந்த பணி நிறைவடைந்த நிலையில், சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
விரைவில் தேவாலயத்தில் 125 ஆண்டு விழா கொண்டாட இருந்த நிலையில், இந்த கத்தோலிக்க தேவாலயம் திடீரென தீக்கிரையானது கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக