இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஏய்! பாத்ரூம்ல என்னடி பண்ற, மணி எட்டாகுது, எட்டரை மணிக்கு பஸ், சீக்கிரம் குளிச்சிட்டு வெளிய வாடி, அப்புறம் பஸ் ஸ்டாப்புக்கு குடுகுடுன்னு ஓடனும்.
ஏம்மா கோபப்படாதீங்கம்மா. கோபப்பட்டா ரத்தக்கொதிப்பு வருமாம், எங்க டீச்சர் சொன்னாங்க. தலையை துவட்டிக் கொண்டே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் சுமதி.
ரத்தக்கொதிப்பு வருமாம், ரத்தக்கொதிப்பு எனக்காடி வரும் ரத்தக்கொதிப்பு, உனக்கு சொல்லிக் கொடுத்தாலே அவளுக்கு வரும் ரத்தக்கொதிப்பு. எட்டாம் வகுப்பு படிக்கிற பொட்டக் கழுதை, எனக்கு ரத்தக்கொதிப்பு வருமாம்ல. என்ன சொன்னாலும், எங்க டீச்சர் சொன்னாங்க அப்படி சொல்லாத. நேத்து என்னடான்னா, எதிர்த்த வீட்டு ராட்சசி தெருப்பைப்ல தண்ணி பிடிக்கும் போது சண்டைக்கு வாரா. கூட ஒரு குடம் தண்ணி நான் பிடிச்சா சம்மதிப்பாளா. எழவ இழுத்திருவா. நீ ஏன் ஒரு குடம் கூட பிடிக்கிற? கணக்குனா கணக்குத்தானன்னு சொன்னே. அவ்வளவு தான் இந்த வீட்டுக் கழுத, கூட ஒரு குடம் இல்லம்மா இரண்டு குடமே பிடிச்சிட்டு போட்டுமே. அவங்க வீட்டில ஆடுமாடு இருக்குமான்னு அவளுக்கு சப்போட்டு பன்னுதா. இன்னக்கி என்னடான உனக்கு ரத்தக்கொதிப்பு வருங்கிறாள்.
அம்மா பேசுவதை புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டே, பள்ளிக்கூடத்து யூனிபார்ம் போட்டுக்கொண்டு, புத்தகப்பையை சரிபார்த்துக் கொண்டாள், சுமதி.
என்னடி நான் இவ்வளவு நேரம் பேசுறேன். உனக்கு எகத்தாளமா இருக்கோ. நமட்டுச் சிரிப்பு சிரிக்க.
ஏம்மா, நீங்க என்னய பேசாம வேறு யாரு பேசுவா. ஆனா, ஒன்னும்மா நீங்க கோபப்படாம இருக்கும் போது எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? போனவாரம் எங்க டீச்சர் கேட்டாங்க, உங்களுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின் யாருன்னு? நான் யாரைத் தெரியுமா சொன்னே, எனக்கு பிடித்த ஹீரோ எங்க அப்பா. எனக்கு பிடித்த ஹீரோயின் அம்மான்னேன். உடனே எல்லாப் பிள்ளைகளும் அவங்கவங்க அப்பா, அம்மா தான் ஹீரோ, ஹீரோயின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால் முதல்ல சினிமா கூத்துக்காரங்களையும், கூத்துகாரிகளையும் சொன்னாங்க. உடனே எங்க டீச்சர் வெரிகுட் சொல்லி எல்லோரையும் கைதட்டச் சொன்னாங்க. எங்க டீச்சுரு ரொம்ப நல்லவங்கம்மா. உங்கள மாதிரியே.
இந்த பேச்சு சுவாரஸ்த்திலேயே சுமதிக்கு ரெட்டை சடையை போட்டுவிட்டாள். அம்மாவுக்கு ஒரு முத்தத்தை வழங்கி விட்டு புத்தகப்பையை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போவதற்கு டவுண் பஸ்சைப் பிடிப்பதற்கு வெளியே வந்தாள், சுமதி. இவள் வெளியே வருவதற்கும், நாலு வீடு தாண்டி உள்ள முக்குவீட்டு சுந்தரியும் பள்ளிகூடப் புத்தகப்பையை தோளில் போட்டுக்கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எதிர்பார்த்து ஒன்றாகத்தான் பஸ்ஸ்டாப்புக்கு செல்வார்கள். உள்ள ர்ல ஜந்தாம் வகுப்பு வரை தான் உள்ளது. அதனால் தான் ஆறு கிலோ மீட்டர் பேருந்தில் பயணித்து பள்ளிகூடத்திற்கு அடுத்த ஊருக்கு செல்வார்கள்.
பஸ் ஸ்டாப்புல ஒரே கூட்டம். வெளியூருக்கு வேலைக்கு போகிறவங்களும், வியாரத்திற்கு போகிறவங்களும், பள்ளிக்கூடம், காலேஜ் போகிறவங்களும் காலைல ஒன்றாக கூடுகிற இடம். பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக கூடிவிடுவார்கள்.
டவுண் பஸ் அரைக் கிலோ மீட்டருக்கும் தூரத்தில இருந்து வரும் போதே சத்தம் இங்க வந்துவிடும். அரசு ஏற்பாடு போல, டவுண் பஸ் வருகிறது மூட்டை முடிச்சுகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ரெடியா நில்லுங்க! என்று சொல்வது போல இருக்கும்.
இன்றைக்கு பஸ் சரியான நேரத்திற்கு வந்துவிட்டது. பேருந்தைக் கண்டவுடன் கோழிகளும், குஞ்சுகளும் கோழிக்கூட்டுக்குள் ஓடுவதுபோல், ஒருவரையொருவர் முந்திக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்வதும் அடம் பிடிப்பதுமாக இருக்கும்.
சுமதி அவள் தோழி சுந்தரி மற்றும் அவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள மற்ற மாணவ மாணவியரும் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள்.
ஏக்கா, சுமதியக்கா பஸ்பாஸை கையில எடுத்து வச்சுக்கோங்க. இன்னைக்கு சிடுமூஞ்சி கண்டக்டரு வந்திருக்காரு, என்றாள் ஏழாம் வகுப்பு சுந்தரி.
இந்த ஊர்ல பஸ்ஸில் ஏறுகிற யாருக்குமே சீட் கிடையாது. ஏன்னா வரும்போதே முந்தின ஸ்டாப்பிலே சீட் எல்லாம் ஃபுல் ஆயிடும். பள்ளிக்கூடம் போகிற குழந்தைகள், விண்வெளி வீரர்கள் முதுகிலே பிராணவாயு சிலிண்டர் மாட்டிக் கொள்வது போல, புத்தகப்பையை முதுகிலே மாட்டிக்கொண்டு, பேருந்து கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றபடியேதான் பயணம்.
டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட் கேட்டு வாங்குங்க. சில கண்டக்டர்கள் தூங்கும் போது கூட இந்த டயலாக்கை சொல்வதாக கேள்வி.
பஸ்ஸில நிறைய கூட்டம் இருக்கிறதாலோ என்னமோ, கண்டக்டர் டிக்கெட் கொடுக்கிறதுக்குள்ளே அவருக்கு வருகிற ஆத்திரமும் கோபமும்... அப்பப்பா முகத்தில எள்ளப் போட்டாலும் வெடிச்சிரும்.
பள்ளிக்கூடம் செல்கிற மாணவ மாணவியர் பஸ் பாஸை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டனர். கண்டக்டர் பக்கத்தில வந்தவுடன் காட்டிவிட வேண்டும். இல்லாட்டி அவருக்கு கோபம் வந்துவிடும். திட்ட ஆரம்பித்துவிடுவார்.
நம்ம நாட்டு சாலைகளில் பேருந்தை ஓட்ட வேண்டும் என்றால் சிறப்புப் பயிற்சி தேவைப்படும். ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்து விட்டால் அவ்வளவுதான், பயணிகளுக்கு கோபம் வந்துவிடும். இவனெல்லாம் எருமை மாடு மேய்க்கதான் லாயக்கு என்று முனங்குவர். ரோடே ஸ்பீட் பிரேக்கர் மாதிரிதான் இருக்கும். இதுல வேற, ஊருக்கு ஏழு ஸ்பீட் பிரேக்கர் இருக்கும். ஆட்டோவில் தான் பிரசவத்துக்கு இலவசம்ன்னு. ஆனால் அரசு டவுண் பஸ்ல பிரசவமே இலவசமாயிடும்.
ஏய் பாட்டி எங்க போகனும்? கண்டக்டர் கொஞ்சம் அதட்டலாகத் தான் கேட்டார்.
பாட்டி, ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டியவாறே! மங்களாபுரம் ஒரு டிக்கெட் கொடுங்கையா என்றார். ரூபாயை வாங்கிய கண்டக்டர் வாங்கிய வேகத்திலே பாட்டியிடம் திருப்பிக் கொடுத்து வேற பத்துரூபா தாள் தா பாட்டி, இது கிழிஞ்சியிருக்கு.
வேற ரூபாயே எங்கிட்ட இல்லியேயா. மங்களாபுரம் சந்தையில புளி விக்கப் போறேன், என்ற பாட்டி இரு கைகளாலும் ஓலைப் பெட்டியைப் பிடித்துக் கொண்டு குத்தவச்சி உட்கார்ந்திருந்தார்.
நீயெல்லாம் எதுக்கு மோட்டார்ல ஏறனும். கிழிஞ்ச நோட்டக் குடுத்துக்கிட்டு என் உசிர எடுக்கிற. அடுத்த ஸ்டாப்பில கீழ இறங்கி விடு. இல்லன்னா இழுத்து கீழ தள்ளிடுவேன்.
எல்லோரும் வேடிக்கைப் பார்த்தார்கள். பாட்டியைப் பார்ப்பதற்கு பாவமாக இருந்தது, ஒரு சிலர் பஸ்ஸீக்கு வரும் போதே கிழியாத நோட்ட கொண்டு வரனும்ன்னு தெரியாதோ! என்று முனுமுனுத்தனர்.
சுமதியும் மற்ற மாணவிகளும் பாட்டியைச் சுற்றி தான் நின்று கொண்டிருக்கிறார்கள்.
கண்டக்டர் பாட்டியைத் திட்டிக் கொண்டே மற்ற பயணிகளிடம் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பாட்டியைப் பார்பதற்கு பரிதாபமாக இருந்தது.
ஒரு தடவையாவது கீழ இறக்கிவிடனும். அப்போ தான் இதுகளுக்கெல்லாம் தெரியும், என்று சீட்டில் உட்கார்ந்திருந்த பெண் சொல்வது பாட்டி காதிலும், பக்கத்தில் நிற்பவர்கள் காதிலும் விழுந்தது.
இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற சுமதி மற்ற மாணவிகளுக்கு பாட்டியைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. பாட்டி, அடுத்த ஸ்டாப்பிலே இறங்குவதற்கு பரிதாபத்தோடு தயாராகிக் கொண்டிருந்தார். சுமதி தன் புத்தகப்பையை துளாவி ஜியாம்ன்றிப் பாக்ஸை எடுத்தாள். பாக்ஸைத் திறந்து பார்த்தாள் சில்லரை ஜந்து ரூபாய் இருந்தது. தனது தோழிகளைப் பார்த்தாள். அவர்களும் புத்தகப் பைக்குள் துளாவி துளாவி ஒன்றிரண்டுமாக தேடி பத்து ரூபாயை சில்லரையைப் பாட்டியிடம் நீட்டி, பாட்டி இந்தாங்க! இதில பத்து ரூபாய் இருக்கு. இதவச்சி டிக்கெட் வாங்கிக்கோங்க என்றாள்.
வேண்டாம் தாயி. நீங்களே பள்ளிக்கூடத்து கடையில பண்டம் வாங்கி திங்க வச்சிருப்பீங்க, என்று பாட்டி சொன்னார்.
பாட்டி நாங்க, பள்ளிக்கூடத்துல போய் சாப்பிட பண்டம் வைத்திருக்கிறோம். இதவச்சி நீங்க முதல்ல டிக்கெட் எடுங்க என்று சொல்லி பாட்டியின் கையில் பத்து ரூபாய் சில்லரையை திணித்தனர். பாட்டியின் கண்களில் புது மலர்ச்சி. தாயி நீங்க நல்லாயிருக்கனும். படிக்கிற புள்ளைங்கன்னு காட்டிட்டீங்க. நான் திரும்ப வரும் போது...
அதெல்லாம் நீங்க திரும்ப வரும் போது தர வேண்டாம் பாட்டி…. என்று இடை மறித்தாள் சுந்தரி.
இந்த மாணவிகளின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த நடுத்தர வயதுடைய பெண்மணி கேட்டார், உன்னுடைய பெயர் என்னம்மா? என் பெயர் சுமதிங்க என்றாள்.
அப்படியா வெரிகுட் உங்க வகுப்பாசிரியர் பெயர் என்ன, நான் தெரிந்து கொள்ளலாமா.
எங்க டீச்சர் பெயர் சகாயம் டீச்சர்.
அப்படியா, உங்க டீச்சரை நான் ரொம்ப கேட்டதாச் சொல்லுங்க. உங்க முகத்தில நான் அவங்களப் பார்க்கிறேன் என்றார். அந்த நடுத்தர வயது பெண்மணி.
சரிங்க! மேம் நீங்க யாருன்னு எங்க டீச்சர் கேட்ட? நாங்க என்ன சொல்லனும் என்று பவ்யமாகக் கேட்டாள், சுமதி.
நம்ம யூனியன் கல்வி அதிகாரி தமிழ் செல்வி என்று சொல்லுங்கள், என்றார் அந்த கல்வி அதிகாரியான நடுத்தர வயது பெண்மணி..
கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக