இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காவிரியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில், திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் அமைந்துள்ளது. இது 2000 ஆண்டுகள் பழமை கொண்ட தொன்மையான ஆலயங்களில் ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66வது தேவாரத்தலம் ஆகும்.
மூலவர் : பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்)
அம்மன்ஃதாயார் : பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பாள்
தல விருட்சம் : பராய் மரம்
தீர்த்தம் : அகண்ட காவேரி
ஆகமம்ஃபூஜை : சிவாமம்
புராண பெயர் : அகண்ட காவேரி
ஊர் : திருப்பராய்த்துறை
தல வரலாறு :
இத்தலத்திற்கு தாருகாவனம் என்றும் பெயருண்டு. முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்று கர்வமும், ரிஷிகளின் மனைவியர்கள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று ஆணவமும் கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.
மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர்.
சிவனது பேரழகைக்கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் திருவோடு ஏந்திய ஒருவனுடன் சென்றதைக் கண்ட ரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்று நினைத்து அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். சிவனும், மகாவிஷ்ணுவும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். ரிஷிகள் ஏவிய விலங்குகளையும், எய்த ஆயுதங்களையுமே தன் உடலில் ஏந்திக் கொண்டார் சிவன்.
சிவனை அழிக்க முடியாமல் மகரிஷிகள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாக காட்சி தந்தார். தம் தவறுகளை உணர்ந்த மகரிஷிகள் தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். சிவன் அவர்களை மன்னித்தருளி, சுயம்பு லிங்கமாக தோன்றினார்.
பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோவில் எழுப்பப்பட்டது.
இக்கோவிலுள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது, மற்ற கடவுள்களுக்கு வாகனம் கிடையாது.
சாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். புரட்டாசி மாதம் 18ம் தேதி சாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.
பிராத்தனை :
இந்த சிவனை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இத்தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர். கோவில் ராஜகோபுரம் 7 நிலை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக