Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 செப்டம்பர், 2019

கிருஷ்ணகிரி அணை !!

Image result for கிருஷ்ணகிரி அணை !!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கிருஷ்ணகிரியிலிருந்து ஏறத்தாழ 11கி.மீ தொலைவிலும், தருமபுரியிலிருந்து 49கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 108கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள நீர் நிரம்பிய இடம்தான் கிருஷ்ணகிரி அணை.

சிறப்புகள் :

இது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எழில் மிகுந்த அணையாகும். இந்த அணையின் அருகில் பசுமையான பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. தென்பெண்ணையாற்றின் நீர் ஆதாரமாக உள்ளது.
இவ்வணைக்கட்டின் மூலம் தேக்கப்பட்டுள்ள நீர் 1000 ஏக்கர் நிலபரப்பு பாசனத்திற்கு வழிவகை செய்கிறது.
சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் விளையாட்டு மைதானம், நீர் ஊற்றுகள், நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள், பரந்து விரிந்த பசுமையான புல்தரைகள், நீரூற்றுகள் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளதால் சுற்றுலா மையமான கிருஷ்ணகிரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகவே உள்ளது.

இங்குள்ள பூங்காவிற்கு கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகின்றனர்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து செல்கின்றனர்.

மேலும், இங்குள்ள மான் பூங்கா சுற்றுலா பயணிகளை கவர்கிறது. அது மட்டுமில்லாமல் இயற்கையோடு ஒன்றி மரம் விட்டு மரம் தாவி சேட்டைகள் செய்யும் குரங்குகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் மகிழ்விக்கின்றன.

சுற்றுலா வந்த பயணிகள் தங்கள் குழந்தைகளை பூங்காவில் உள்ள சறுக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் விளையாட வைத்து மகிழலாம்.

எப்படி செல்வது?

கிருஷ்ணகிரிக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. கிருஷ்ணகிரியிலிருந்து பேருந்து மூலமாகவோ, மற்ற வாகனங்களின் மூலமாகவோ கிருஷ்ணகிரி அணையை அடையலாம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

இதர சுற்றுலாத்தலங்கள் :

சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில்.
தளி.
அவதானப்பட்டி ஏரி பூங்கா.
கெலவரபள்ளி அணை.
காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக