இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த
இவ்வுலகில் இயற்கையாக உருவான ஒரு அழகிய வெந்நீர் ஊற்றைப் பற்றிதான் இன்று நாம்
தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
நெவாடா நாட்டில் உள்ள ப்ளாக் ராக் பாலைவனத்தில்
உள்ள வனப்பகுதியில் இந்த கடல என சொல்லப்படும் பல வண்ண கூம்புகளில் இருந்து
வெளிவரும் வெந்நீர் ஊற்றுகள் உள்ளன.
இந்த வெந்நீர் ஊற்றுகள் அங்கு சிறந்த
சுற்றுலாத்தலமாக உள்ளது. ஆனால் இப்பகுதியில் மக்கள் யாரும் வசிப்பது இல்லை.
ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம்
செய்வதற்காக இங்கு கிணறு தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு
தோண்டப்பட்ட கிணற்றில் வெடிப்பு ஏற்பட்டு அதில் இருந்து சுமார் 200 டிகிரி
செல்சியஸ் வெப்ப நிலையில் நீர் வெளிவரத் தொடங்கியது.
அதிக வெப்பநிலையில் நீர் வெளிவந்ததால் இங்கு
மக்கள் வசிப்பதற்கும், மற்ற உயிரினங்கள் வசிப்பதற்கும் மிகுந்த சவால் நிறைந்த
இடமாக இது இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 35 முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான
அளவில் பாலைவனத் தாதுக்கள் இந்த கிணற்றில் இருந்து வெளிவரும் நீருடன் சேர்ந்து
வருகிறது.
மேலும் இங்கு சுற்றுலா வருபவர்கள் இந்த இடத்தை
காண்பதற்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
சில காலங்களுக்குப் பிறகு இந்த கிணற்றில்
இருந்து வெளியேறிய நீரின் மூலம் ஏறத்தாழ 10 முதல் 12 அடி வரையிலான கால்சியம்
கார்பனேட் கூம்புகள் உருவாகின.
இதில் இருந்து வெளிவரும் நீர் அங்கு தண்ணீர்
குளம் போல உருவாகி காட்சியளிக்கின்றன.
இந்த சூடான நீருடன் சேர்ந்து ஏராளமான
பாலைவனத்தாதுக்களும் வெளியேறியதால் இந்த கூம்புகள் பச்சை, மஞ்சள், சிகப்பு என பல
வண்ணங்களில் காட்சியளிக்கத் தொடங்கின.
இந்த ஊற்றுகளில் இருந்து நீர் வெளிவந்தாலும்
எந்த உயிரினங்கள் வாழ்வதற்கும், மேலும் விவசாயம் செய்யவும் ஏற்றதாக இல்லை என்பதே
உண்மை.
ஆனால் இப்பொழுதும் இந்த நீர் ஊற்றில் சூடான
வெப்பநிலையில் நீர் வெளிவந்து கொண்டேதான் இருக்கிறது.
மேலும் இந்த நீர் ஊற்றுக்கு அருகிலேயே மற்றும்
ஓர் கூம்புகள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புவி வெப்ப ஆற்றல் மையம் இந்த ஊற்றில்
இருந்து வரும் வெந்நீரின் அளவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால்
அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இயற்கையை நாம் கட்டுப்படுத்த
நினைத்தால் அது நம்மை அழித்துவிடும் என்பதில் ஒரு துளியேனும் சந்தேகமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக