இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிராமப்புறங்களில் குழந்தைகள் விரும்பி விளையாடும் விளையாட்டுகளான 'ஒற்றையா, இரட்டையா" விளையாட்டை பற்றி இன்று பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை இரண்டு நபர்கள் சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு ஒவ்வொரு நபரும் 100 புளியங்கொட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒற்றை முறை
பிறகு முதல் நபர், அவரிடம் உள்ள புளியங்கொட்டைகளை கையில் எடுத்து மூடிக்கொண்டு, இரண்டாம் நபரிடம் கையில் இருப்பவை 'ஒற்றையா.. இரட்டையா..?" என்று கேள்வி கேட்க வேண்டும்.
அதற்கு இரண்டாம் நபர் அவர் விருப்பத்திற்குக்கேற்ப பதில் கூறுவார். அதனை சரியாக சொல்லிவிட்டால் இரண்டாம் நபர் அந்த புளியங்கொட்டைகளை வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், இரண்டாம் நபர் தவறாக பதில் சொன்னால், முதல் நபரின் கையில் உள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கைகேற்ப இரண்டாம் நபர் புளியங்கொட்டைகளை தர வேண்டும்.
இரட்டை முறை
இவ்வாறு விளையாடி கொண்டிருக்கும்போது புளியங்கொட்டை இல்லாமல் வெறுங்கை காட்டுதலை பரட்டை என்று கூறுவார்கள். இங்கு 'பரட்டைக்குப் பத்து முத்து" என்ற பரிமாற்றம் நிகழும்.
யாராவது ஒருவர் கையில் புளியங்கொட்டைகள் இல்லாமல் போகும் வரை இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பலன்கள் :
கணிதத் திறமை மேம்படும்.
விரல்களை மடக்கி, நிமிர்த்துவன் மூலம் விரல்கள் வலுப்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக