>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 16 செப்டம்பர், 2019

    கண்ணை கவரும்... அழகிய காட்சி... தட்ஷிண சித்ரா...!!

     Image result for .. தட்சிணா சித்ரா...!!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com




    சென்னையிலிருந்து ஏறத்தாழ 33கி.மீ தொலைவிலும், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஏறத்தாழ 50கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 77கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு இடம்தான் தட்ஷிண சித்ரா.

    சிறப்புகள் :

    தட்ஷிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, கட்டிடக்கலை மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை விளக்கும் மையம் ஆகும்.

    நமது முன்னோர்களின் பிரம்மாண்டமான வாழ்க்கை முறையையும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களையும் கண்ணாரக் கண்டுவர, தென்னகம் முழுவதும் பயணப்பட்டாலும் கூட காணமுடியாத விஷயங்களை இங்கே ஒரே இடத்தில் பார்க்கலாம்.

    10 ஏக்கர் பரப்பளவில் தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற 17 நிஜமான வீடுகள் உள்ளே உள்ளது.

    உதாரணமாக காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாடு வீட்டை அப்படியே தத்ரூபமாக கட்டியுள்ளார்கள்.

    வீட்டிற்குள்ளும் அவர்கள் உபயோகித்த பொருட்களை கண்காட்சியாக வைத்துள்ளார்கள். நெசவாளர் வீடு என்றால் ஒரு நெசவாளர் உட்கார்ந்து நெய்து கொண்டு இருக்கிறார்.

    குயவர் வீடு என்றால் மண்பாண்ட பொருட்கள் செய்து கொண்டு இருக்கின்றனர். அய்யனார் சிலையும், கிராமத்து குதிரை சிலைகளும் டெரகோட்டா சிற்பங்களும் தங்களது பெருமையை பறைசாற்றியபடி நிற்கின்றன.

    நாட்டுப்புறக் கலைகளை இங்கேயே தங்கியிருந்தும் கற்றுக்கொள்ளலாம். குழந்தைகளை குஷிப்படுத்த விளையாட்டு திடல், மாட்டுவண்டி சவாரி போன்றவைகளும் உண்டு.

    சுத்தமான சுகாதாரமான சூழலில் சந்தோஷமாய் புத்துணர்வு பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு அற்புதமான இடமாகும்.

    பழந்தமிழர் விளையாட்டுகளான பாண்டியாட்டம், பல்லாங்குழி, ஆடுபுலியாட்டம், உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடிப்பார்த்து குதூகலிக்கவும் தக்‌ஷிண சித்ராவில் வசதியுண்டு.

    திராவிடக் கட்டிடக்கலை, பழந்தமிழர் நாகரிகம், தென்னிந்திய கலாச்சாரம், தற்போது அரிதாகி அழிந்து வரும் தமிழக நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், பிலாக் பிரிண்டிங், தென்னிந்தியாவை ஆண்ட மன்னர்கள் வரலாறு இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும்.

    எப்படி செல்வது?

    சென்னையிலிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனங்களின் மூலம் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    சென்னையில் பல்வேறு வகையான கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக