இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த
பூமியில் அதிசயம், ஆச்சரியம், அழகுகள் என்று ஏராளமான இயற்கை காட்சிகள்
அமைந்துள்ளன. ஆனால், அவை உருவான விஷயங்களைக் கேட்டால்தான் நமக்கு கொஞ்சம் அச்சுறுத்தும்
விதத்தில் இருக்கும்.
நம் உலகம் ஆச்சரியமாகவும், அழகாகவும்
அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஒரு சில இயற்கை நிகழ்வுகள் பார்ப்பதற்கு அழகாக
இருந்தாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் என்றே கூறலாம்.
ஏரி என்று சொன்னாலே ஓய்வெடுக்க அழகான இடம்,
ஆனந்தமாக எல்லோருடன் சேர்ந்து குளித்து மகிழ்வது, மீன் பிடிப்பது போன்றவைத்தான்
நம் நினைவுக்கு வரும். ஆனால் சில ஏரிகள் திகில் நிறைந்த ஏரிகளாகவும் உள்ளன.
அந்த வகையில் மனிதர்களை அச்சத்தில் நடுங்க
வைக்கும் இறப்பு ஏரியைப் பற்றி பார்க்கலாம்.
எங்கு அமைந்துள்ளது?
இத்தாலியில் சிசிலி தீவில்தான் இந்த மர்மான
மனிதர்களை பயமுறுத்தும் இறப்பு ஏரி அமைந்துள்ளது.
மிகவும் ஆபத்தான எரிகளில் ஒன்றாக இந்த ஏரி
கருதப்படுகிறது. இந்த ஏரியில் ஏதாவது உயிரினங்கள் தவிர்க்க முடியாத நிலையில்
விழுந்துவிட்டால் அவை அழிந்துவிடும்.
இந்த ஏரியில் எந்த உயிரினங்களும் இல்லை. இறப்பு
ஏரியின் கரைப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படும். இதனை சுற்றி மரங்கள்,
செடிகள் என எதுவும் வளருவதில்லை.
மனிதர்கள் இந்த ஏரி நீரில் நீந்துவதற்கு முடிவு
செய்தால், சில நிமிடங்களில் அவர்கள் கரைந்து இறந்துவிடுவார்கள் என கூறப்படுகிறது.
இறப்பு ஏரியில் மனிதர்கள் இறப்பதற்கும்,
மரங்கள், செடிகள் வளருவதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
விஞ்ஞானிகள்
இந்த ஏரியை ஆய்வு செய்தபோது நீர்வாழ் சூழலில் அதிக அளவு செறிவூட்டப்பட்ட கந்தக
அமிலம் வெளிவருவதால் இவ்வாறு நடக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக