>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 1 அக்டோபர், 2019

    பசுமை நிறைந்த... பச்சை மலை...!!

    Image result for பச்சை மலை...!!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    திருச்சியிலிருந்து ஏறத்தாழ 86கி.மீ தொலைவிலும், துறையூரிலிருந்து ஏறத்தாழ 41கி.மீ தொலைவிலும், பெரம்பலூரிலிருந்து ஏறத்தாழ 79கி.மீ தொலைவிலும், நாமக்கலில் இருந்து ஏறத்தாழ 80கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய மலைதான் பச்சை மலை.
    மேலும் புளியஞ்சோலையிலிருந்து ஏறத்தாழ 34கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள பசுமை நிறைந்த இடமாகும்.

    சிறப்புகள் :

    பெயருக்கு ஏற்றாற்போல எங்கும் பச்சை போர்த்திய மரங்கள், ஜில் காற்று, மூலிகை சுவாசம் என மறக்க முடியாத நிகழ்வாக அமைகிறது பச்சைமலை பயணம்.

    பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவி நிற்கும் ஒரு மலைத்தொடர் ஆகும்.

    பச்சைமலையிலுள்ள டாப் செங்காட்டுப்பட்டி, முருகன் கோவில், கீழ்கரை, கன்னிமார்சோலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பார்வை கோபுரங்களில் இருந்தபடி மலையின் அழகை காண்பது தனி அனுபவம்.

    பச்சமலப் பூவு, நீ உச்சி மலத் தேனு-ன்னு இளையராஜா பாடியிருப்பாரே அந்த மலைதான் இது. பெயருக்கு ஏற்ற மாதிரியே பசுமை நிறைந்த வனக்காடுகளைக் கொண்டுள்ளது.

    அதிகாலை அல்லது அந்திசாயும் நேரம் இங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டால் அழகான மான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதை கண்டு ரசிக்கலாம்.

    கொல்லிமலையில் உருவாகி இங்கு ஓடி வரும் மூலிகை கலந்த நீரில் குளிக்க விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    இயற்கை வளம் செறிந்த பச்சை மலையில் பழங்குடி மக்கள் பல சிறு கிராமங்களில் வாழ்கின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்புக்கு குறைவில்லை.

    பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளால் அறியப்படாமல் உள்ள இந்த பச்சைமலையை சுற்றிலும் டாப் செங்காட்டுப்பட்டி, பேலுர் பாதுகாக்கப்பட்ட காடுகள், கேக்கரை என இன்னும் ஏராளமான அம்சங்கள் இருக்கிறன.

    இது டிரெக்கிங் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம். மேலும், இங்குள்ள அருவியில் குளித்தும் மகிழலாம்.

    எப்படி செல்வது?

    திருச்சிக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளது.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    திருச்சி மற்றும் துறையூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக