Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 அக்டோபர், 2019

புராணத்தில் செவ்வாய் பகவானின் வரலாறு !!

Image result for புராணத்தில் செவ்வாய் பகவானின் வரலாறு !!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




 மனித இனங்களை படைக்க பிரம்மதேவர் சப்த ரிஷிகளை உருவாக்கினார். சப்த ரிஷிகளும் தங்களால் முடிந்த அளவு மனித இனங்களை படைத்தார்கள்.

 இந்த சப்த ரிஷிகளில் கசியபர்க்கும் கற்புக்கரசியான அதிதிக்கும் பிறந்தவர் சூரியன் என்றும், அத்திரி மகரிஷிக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர் சந்திரன் என்றும் நாம் அறிவோம். இந்த சப்த ரிஷிகளில் பரத்துவாஜர்க்கு பிறந்தவர் தான் குஜன் எனப்படும் செவ்வாய் கிரகமாவார்.

 பரத்துவாஜர் கடும் தவம் புரிந்து பல வரங்களை பெற்று ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

 ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தனது ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் தடம் மாறி செய்த தவறினால் தான் செவ்வாய் பிறந்தார்.

தேவ கன்னியை காணுதல் :

 நர்மதை நதிக்கரையில் பரத்துவாஜர் ஆசிரமம் அமைத்து அங்கு வாழ்ந்து வந்தார். அவர் வழக்கம்போல நர்மதை நதிக்கரையில் நீராட சென்றார்.

 அங்கு அவர் கண்ட காட்சி அவரையே மறக்க வைத்தது. அங்கு இதுவரை அவர் காணாத அழகுடன் தேவ கன்னி நீராடிக் கொண்டிருந்தாள். அந்த தேவ கன்னியால் அவர் தன்னை மறந்து தன் ஆசைகள் தன்னை ஆளும் நிலைக்கு மாறி தன் ஆசைகளை (விருப்பத்தை) வெளிப்படுத்தினார்.

விதி வெல்லுதல் :

 பரத்துவாஜர் வந்து தன்னுடன் இணையும் விருப்பத்தை வெளிப்படுத்திய போது தேவ கன்னி அதிர்ச்சி அடைந்தாள். முதலில் தயங்கிய அவள் விதியின் செயலால் தன்னை மறந்து பரத்துவாஜருடன் இணைய ஒப்புக் கொண்டாள். பரத்துவாஜரும், தேவ கன்னியும் இணைந்ததால் அவள் கருவடைந்தாள்.

குழந்தைப் பிறப்பு :

 ரிஷி பிண்டம் இரவு தங்காது என்ற முதுமொழி ஒன்று புராண வரலாற்று காலங்களில் இருந்தது. அதன்படி ரிஷி உடன் இணைந்த அந்த தேவ கன்னி கருவடைந்தாள். கருவடைந்த உடனே ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.

 ஈன்றெடுத்த அந்த குழந்தையை தன்னுடன் தேவலோகத்திற்கு எடுத்து செல்ல முடியாத நிலையில் இருந்தாள். எனவே குழந்தையை ரிஷியிடம் கொடுத்து வளர்க்க இயலாத நிலையில் அந்த குழந்தையை நர்மதை நதிக்கரையில் விட்டுவிட்டு தேவ கன்னி தேவலோகம் சென்று விட்டாள்.

தாயான பூமாதேவி :

 தான் ஒரு தவ சிரேஸ்டர் என்பதை மறந்து, தன் ஆசையின் காரணமாக தேவ கன்னியுடன் இணைந்ததை நினைத்து வருந்துகிறார் பரத்துவாஜர். பின் தன் இருப்பிடமான ஆசிரமத்தை நோக்கி சென்று விடுகிறார்.

 தாயான தேவ கன்னியும், தந்தையான பரத்துவாஜரும் கைவிட்டு நர்மதை ஆற்றங்கரையில் விடப்பட்ட குழந்தை பசியின் பொருட்டு அழத் தொடங்கியது.

 யாரும் இல்லாத அந்த நர்மதை ஆற்றில் குழந்தையின் கதறலை கண்டுகொள்ள ஆளில்லை. தாய், தந்தையால் கைவிடப்பட்ட குழந்தையின் கதறல் உலகிற்கே தாயான பூமாதேவியின் காதில் கேட்டது.

 கேட்ட நொடியில் தாய் என்னும் வேகத்தில் அந்த குழந்தையை அடைகிறாள் பூமாதேவி. தன்னுடைய ஞானப் பார்வையால் நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட பூமாதேவி, எந்த தவறையும் செய்யாத இந்த குழந்தையை தன்னுடனே எடுத்துச் சென்று வளர்க்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு குழந்தை பாலகராக வளர்கிறார்.

 பாலகராக வளர்ந்தவருக்கு ஒரு ஆசை ஏற்படுகிறது. நான் குழந்தையிலிருந்து என்னுடைய தாயான உங்களை மட்டுமே கண்டு வருகிறேன். உங்கள் குணங்களை பற்றி நான் அறிவேன். என் தந்தையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 என் தந்தை எப்படி இருப்பார். அவரின் குண நலன்களை அறிய மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். என் தந்தை யார் என்று சொல்லுங்கள் தாயே என பூமாதேவியிடம் பாலகர் கேட்கிறார்.

பிறப்பை பற்றி அறிதல் :

 தன் தந்தை யார் என பாலகன் பூமாதேவியிடம் கேட்டபோது முதலில் அதிர்ச்சி அடைந்தார். பிறகு, என்ன சொல்வது என யோசித்த பூமாதேவி இனி உண்மையை மறைப்பது சரியல்ல என்பதை உணர்ந்து பாலகரின் பிறப்பின் உண்மையை கூறுகிறார்.

 பாலகனே நான் உன்னை ஈன்றெடுத்த தாய் அல்ல. நான் உன்னை வளர்த்த தாய் என்று பாலகரிடம் கூறுகிறார் பூமாதேவி. இதைக்கேட்ட பாலகர் அதிர்ச்சி அடைந்தார்.

பின், தன் தந்தை மற்றும் தாய் யார் என்று பூமாதேவியிடம் கேட்கிறார். அதற்கு பூமாதேவி, உன் தந்தை சப்த ரிஷிகளில் ஒருவரான சிவபெருமானிடம் பல வரங்கள் பெற்ற தவ சிரேஸ்டரான பரத்துவாஜர் என கூறுகிறார். பின் உன் தந்தையை பார்க்க செல்லலாம் என பரத்துவாஜரின் ஆசிரமத்திற்கு அழைத்து செல்கிறார் பூமாதேவி.

தந்தையை காணுதல் :

பூமாதேவியும், பாலகரும் மகரிஷியான பரத்துவாஜரின் ஆசிரமத்திற்கு சென்றார்கள். பின் பரத்துவாஜரிடம் பாலகரின் பிறப்பை பற்றி பூமாதேவி எடுத்துக்கூறுகிறார்.

அதைக்கேட்ட பரத்துவாஜரும் பூமாதேவி கூறிய அனைத்திலும் உள்ள உண்மையை அறிந்து தன் தவறுக்கான பரிகாரமாக அந்த பாலகரை ஏற்றுக்கொள்கிறார்.

பூமாதேவி அருளும், பிரிதலும் :

பூமாதேவி தன் மைந்தனில் ஒருவராக வளர்த்த, அந்த பாலகரை பரத்துவாஜரிடம் ஒப்படைத்து, பாலகருக்கு வேண்டிய அருளையும், ஆசியையும் வழங்குகிறார்.

பூமாதேவியான என்னால் இந்த பாலகர் வளர்க்கப்பட்டதால், இனி இந்த பாலகர் மனைகளுக்கு அதிபதி ஆக இருப்பாய் என்று ஆசி வழங்கி தான் எக்காலத்திலும் உன்னுடன் இருப்பேன் என்ற உறுதியையும் அளிக்கிறார்.

பெயர் சூட்டல் :

பரத்துவாஜரும் அந்த பாலகனை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார். பின் அந்த பாலகரின் உடல் வலிமையையும், அழகையும் மற்றும் ஆண்மையையும் கண்டு மகிழ்ந்து அந்த பாலகருக்கு பெயர் சூட்டுகிறார்.

அதுவரையிலும் அந்த பாலகருக்கு பெயர் சூட்டப்படவில்லை. ஏனெனில் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது மிகவும் உன்னதமான, சிறப்பான நடைமுறையாக இருந்தது. பரத்துவாஜர் தன் மகனுக்கு அங்காரகன் என்னும் பெயரை சூட்டுகிறார்.

அங்காரகரின் கலைகளும், பயிற்சியும் :

அங்காரகன் என்று பெயர் சூட்டிய தன் மகனுக்கு அனைத்து சாஸ்திரங்களையும் முறையாக கற்றுக் கொடுத்து அவரை சிறந்த அறிவாளியாகவும், ஞானியாகவும் மாற்றினார்.

மேலும், அவருக்கு அனைத்து விதமான போர்க்கள வித்தைகளையும், படைக்களத்தை பற்றிய ஞானத்தையும் பரத்துவாஜர் போதித்தார். இவர் கற்ற இந்த போர் கலைகளே, பிற்காலத்தில் தளபதி (அ) சேனாதிபதி என்ற பட்டமும் பெற காரணமாயிற்று.

தந்தையின் வழிகாட்டல் :

தன் மகனான அங்காரகன் விநாயகரின் பரிபூரண ஆசியைப் பெற விநாயகரை மனதில் எண்ணி தவம் புரிய சொல்கிறார் தந்தையான பரத்துவாஜர்.

மேலும், தன் மகனிற்கு விநாயகரின் வழிபாட்டு முறையையும், தவமுறையும் உபதேசிக்கிறார். தந்தையின் சொல்லுக்கு கீழ்படிந்த அங்காரகன் தந்தையிடம் ஆசியைப் பெற்று விநாயகரை நோக்கி கடும் தவம் புரிகிறார்.

விநாயகர் அருள்புரிதல் :

அங்காரகன் பல இன்னல்களையும், இயற்கை மாற்றங்களையும் பொருட்படுத்தாமல் தவத்தை மேற்கொள்கிறார். எண்ணிய காரியத்தில் முழு உத்வேகத்துடன் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் விநாயகரை மட்டும் மனதில் எண்ணி தவம் புரிகிறார்.

விக்னங்களை தீர்க்கும் விநாயகர் அங்காரகனின் தவத்தை மெச்சினார். பின் அங்காரகன் முன் விநாயகர் தோன்றி அங்காரகனிடம் வேண்டிய வரத்தை கேட்க சொன்னார். அங்காரகன் விநாயகரை வணங்கி நான் இப்போது போல எப்போதும் தங்களை வழிபாடு செய்வதுடன் தேவர்களுக்கு சமமான அந்தஸ்து அளிக்க வேண்டி வரம் கேட்டார்.

விநாயகர், மனமுகந்து அங்காரகனுக்கு தேவர்களுக்கு நிகரான மதிப்பையும், அதுமட்டுமல்லாமல் அந்த தேவர்களை அவர்களின் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மை தீமைகளை செய்யும் நவகிரக பரிபாலனத்தில் அங்காரனுக்கு இடம் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக