இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடந்த மூன்று நாட்களாகத் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை,
கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் 7
- 8 பைசா வரைக்கும் விலை அதிகரித்து இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசலுக்கான விலை
9 - 10 பைசா வரை அதிகரித்து இருக்கிறது.
கடந்த 15 நாட்களாக ஒரு பைசா கூட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை
குறையவில்லை என்பதும் மக்கள் மத்தியில் ஒரு சின்ன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு எல்லாம் காரணம் கடந்த செப்டம்பர் 14, 2019 அன்று சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின்
மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் தான்.
இந்த ட்ரோன் தாக்குதல் நடந்து முடிந்த சில நாட்களிலேயே
"ஈரானை முறையாகக் கட்டுப்படுத்தவில்லை என்றால், கச்சா எண்ணெய் விலை நினைத்துப்
பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும். இந்த விலை அதிகரிப்பை நம் வாழ்நாளில் பார்க்காத
அளவுக்கு விண்ணைத் தொடும்" எனவும் எச்சரித்தது சவுதி அரேபியா. இவர்கள் எச்சரிப்பதற்கு
முன்பே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.42 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஒரு லிட்டர் டீசல் விலை 67.33 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 77.10 ரூபாய்க்கு விற்பனை
ஆகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 69.75 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
மும்பை ஒரு லிட்டர் பெட்ரோல் 80.08 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஒரு லிட்டர் டீசல் விலை 70.64 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை ஒரு லிட்டர் பெட்ரோல் 77.36 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஒரு லிட்டர் டீசல் விலை 71.19 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த செப்டம்பர் 17, 2019-ல் இருந்து இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான
விலை 2 ரூபாய் 25 பைசா வரை அதிகரித்து இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசலுக்கு ஒரு
ரூபாய் 75 பைசா வரை அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேச
சந்தையில் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.72 டாலருக்கு வர்த்தகம் ஆகி வருகிறது.
ஒருவேளை சவுதி எச்சரிப்பது போல கச்சா எண்ணெய் விலையை ஏற்றத் தொடங்கினால், பலத்த அடி
வாங்கும் எண்ணெய் இறக்குமதி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம்
இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக