இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வாட்ஸ்
ஆப் நிறுவனம் தற்பொழுது ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த
ஆண்டு பிப்ரவரி மாதமா முதல் சில மாடல் மொபைல் போன்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது
என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
நீண்ட
காலமாக இயங்குதளத்தை புதிய பதிப்பிற்கு மேம்படுத்தப்படாத ஐபோன் பயனர்கள் மற்றும்
ஆண்ட்ராய்டு பயனர்களின் போன்களில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் வாட்ஸ் ஆப்
செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
ஐபோன் iOS 8 இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்தில்
இயங்கும் போன்களுக்கு வாட்ஸ் ஆப் இனி எடுக்காது. தற்பொழுது ஆண்ட்ராய்டு 2.3.7
இயங்குதளம் மற்றும் ஐபோன் iOS 8 இயங்குதளத்தில் வாட்ஸ் ஆப்
இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் எந்த மாற்றமும் இப்பொழுது இல்லை.
பிப்ரவரி
1 ஆம் தேதி முதல் ஷாக்
ஆனால்
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இந்த பயனர்களால் புதிய வாட்ஸ் ஆப் அக்கௌன்ட் மற்றும்
பழைய வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்களை தங்களின் போன்களில் திறக்க இயலாது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்டேட் செய்யாத ஐபோன் பயனர்களை, உடனடியாக iOS 9
இயங்குதளத்திற்கு மேம்படுத்திக்கொள்ளுமாறு வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல்
ஆண்ட்ராய்டு பயனர்களை தங்களின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு 3 அல்லது
தற்பொழுது உள்ள ஆண்ட்ராய்டு 9 பை போன்ற வெர்ஷனை பயன்படுத்தும்படி
அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய காரணமாக வாட்ஸ் ஆப் சேவையின் புதிய அம்சங்கள் இந்த
இயங்குதளங்களில் சரியாகச் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள்
ஆகையால்
பயனர்களின் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்கள் முடக்கம் செய்யப்படாமல், தொடர்ந்து வாட்ஸ் ஆப்
சேவையை பயன்படுத்திக்கொள்ள இயங்குதளத்தை உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள் என்று
வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக