இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஐ.நாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ``யாதும்
ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்கட்டி
தமிழைப் புகழ்ந்து பேசினார். இந்நிலையில் இன்று சென்னை ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு
விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ``நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு
பேசுகையில், `தமிழ்மொழி மிகவும் பழைமையான மொழி’ என்று சொல்லியிருக்கிறேன்.
இதுதான்
ஊடகங்களில் பேசப்பட்டுவருகிறது. உலகின் மிகப்பழைமையான மொழி தமிழ். எனவே தமிழைப்போற்றுவோம்.
தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது. இட்லி, வடை ஆகிய உணவுகளைச் சாப்பிட்டால்
உற்சாகம் பிறக்கும்" எனப் பேசினார். இதற்கு வரவேற்பு தெரிவித்து கமென்டுகள்
குவிந்துவருகின்றன.
இதற்கிடையே மஹிந்திரா குரூப் சேர்மன் ஆனந்த்
மஹிந்திரா தமிழ் மொழி குறித்து தற்போது இரண்டு டுவீட்களைப் பதிவிட்டுள்ளார். அது
தற்போது வைரலாகி வருகிறது. ``ஐ.நாவில் பிரதமர் மோடி உலகின் பழைமையான மொழி தமிழ்
என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். இதுவரை இது தெரியாமல் இருந்ததற்காக நான்
வெட்கப்படுகிறேன். இந்த உண்மை இவ்வளவு நாள் எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது.
தமிழ்மொழியின் பெருமையையும் இந்த உண்மையையும் நாம் இந்தியா முழுவதும் பரப்ப
வேண்டும்.
நான் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில்தான்
படித்தேன். அப்போதே தமிழைப் படித்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக என்
பள்ளித் தோழர்களிடமிருந்து துஷ்பிரயோகம் செய்யும் சில வார்த்தைகளை மட்டுமே நான்
கற்றுக்கொண்டேன். இது எனது குழுவின் தமிழ் பேசும் உறுப்பினர்களை வெட்கப்பட
வைக்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார். இந்த டுவீட் தற்போது தமிழ் இளைஞர்களிடையே
வைரலாகப் பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக