இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பார்லே ஜி மற்றும் பிரிட்டானியா
உள்ளிட்ட அனைத்து நிறுவன பிஸ்கட்டுகளின விலை கணிசமாக உயரப்போகிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிஸ்கட்டுகளின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள்
முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பார்லே ஜி நிறுவனம் 6 சதவீதமும்,
பிரிட்டானியா நிறுவனம் 3 சதவீதமும் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக
அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார மந்த நிலை, ஜிஎஸ்டி வரி
பிரச்சனை காரணமாக பிஸ்கட்டுகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து
தற்போது கார்ப்பரேட் வரி சீர்திருத்தம் காரணமாக பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள்
கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளன
விலை
உயருகிறது
இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை
உயர்வால் பார்லே குளுக்கோஸ் பிஸ்கட் பிரிட்டானியா மில்க் பிஸ்கட்டுகள், போர்பன்
பிஸ்கெட்டுகள், ஹைட் & சீக் (Hide & Seek) பிஸ்கட்டுகுள் மற்றும் மிலானோ
பிஸ்கெட்டுகள் விலை உயர வாய்ப்பு உள்ளது. விலை உயர்வு என்பது ரூ .1, 2, 5 மற்றும்
10 என்ற அளவில் இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி
வரி பிரச்சனை
மூலப்பொருள்கள் விலை அதிகரித்த
காரணத்தால் பிஸ்கட் தயாரிப்பாளர்கள் பிஸ்கட் விலையை அதிகரிக்க முடிவு
செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிரீமியம் மற்றும் நிலையான தரமுள்ள பிஸ்கெட்டுகளை
தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகபட்ச ஜிஎஸ்டி போன்ற
பிரச்னைகள சமாளிக்க முயன்று வருதாக பார்லே தயாரிப்புகளின் மூத்த பிரிவுத் தலைவர்
மயங்க் ஷா, முன்னதாக ஒரு ஆங்கில வணிக செய்தி ஊடகத்திற்கு நேர்காணலில் தெரிவித்து
இருந்தார்.
பார்லே
அச்சுறுத்தல்
முன்னதாக மந்தநிலை மற்றும்
பிஸ்கட்டுக்கு அதிக ஜிஎஸ்டி போன்ற காரணத்தால் 10,000 பேரை பணிநீக்கம் செய்வதாக
பார்லே நிறுவனம் முன்னதாக அச்சுறுத்தி இருந்தது. இருப்பினும், நிர்மலா சீதாராமனின்
கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை பார்லே நிறுவனத்திற்கு ஓரளவு நிம்மதியைக்
கொடுத்தது. மந்தநிலையால் குறைந்த விற்பனை பிரச்சனையை இந்த சீர்திருத்தம்
குறைக்கும் என்று அந்த நிறுவனம் கூறியது.
அதிரடியாக
உயருகிறது
இந்நிலையில் தான் தற்போது
மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்த அனைத்து
நிறுவனங்களும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக