இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இங்கிலாந்தின்
கிராஸ்மியர் நகரில் டபோடில் உணவகம் மற்றும் அழகுநிலையம் ஒன்று செயல்பட்டு
வருகிறது. இந்த உணவகம் தங்களது உணவகத்தில் தயாரிக்கும் உணவை ருசி பார்த்து
சொல்வதற்கு தினசரி 129 டாலர் சம்பளமாம்.
அதன்
இன்றைய இந்திய மதிப்பு சுமார் 9250 ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
தனது
வாடிக்கையாளர்களுக்கு சுவை மிகுந்த உணவு வழங்குவதை, உறுதி செய்வதற்காக
வித்தியாசமான முயற்சியில் இறங்கி உள்ளது அந்த உணவகம்.
உணவை ருசி பார்க்க தினசரி $129 சம்பளம்
உணவகத்தில்
தயாரிக்கப்படும் டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை சுவை பார்த்து சொல்வதற்காக
பிரத்யேக ஊழியர்களை இந்த நிறுவனம் நியமிக்க உள்ளது. அவர்களுக்கு தினமும் 129
அமெரிக்க டாலர்கள் சம்பளம் வழங்க உள்ளது. இது குறித்து அந்த நிறுவன அதிகாரிகள்
கூறுகையில், ஆடம்பரமான மதிய வேளை தேநீரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம். இதனால்
சிறப்பானதொரு உணவை மக்களுக்கு வழங்க நாங்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகிறோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறந்த உணவகம் என நிரூபிக்க திட்டம்
பிரிட்டனிலேயே
இது தான் சிறந்த உணவகம் என்பதை நாங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த உணவுப்பொருளின்
சுவையை அதிகப்படுத்த நினைக்கிறோம். இதற்கு எங்களுக்கு திறமையான சோதனையாளர்கள்
தேவைப்படுகிறார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த
வேலைக்காக உணவகத்தின் இணையதளத்தில் பலரும் விண்ணப்பித்துள்ளனராம்.
எந்தெந்த உணவுகள்
இவ்வாறு
தேர்ந்தெடுக்கப்படும் ருசி பார்க்கும் சோதனையாளர்கள் தேநீர் மற்றும் பீட்ரூட்
மற்றும் மட்டன் சீஸ் ஸ்கோன்கள், மாலை நேரம் சாப்பிடும் பிஸ்கட்டுகள் மற்றும்
மிளகுக்கீரை பை உள்ளிட்ட சிற்றுண்டிகளை சுவைத்து சோதனை செய்வார்கள். இந்த நிலையில்
இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படுவார்களாம்
சம்பளத்துடன்
தங்குமிடமும் இலவசமாம்
தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு
ஒருநாள் சம்பளமாக 129 அமெரிக்க டாலர்களும்(இந்திய ரூபாய் மதிப்பில் 9,250
ரூபாயும்), இது தவிர இலவசமாக தங்குமிடமும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமாம்.
இப்படி ஒரு ருசிகரமான நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தால் யாருக்கு தான்
பிடிக்காது. என்ன நீங்கள் அப்ளை செய்து விட்டீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக