ஒவ்வொரு ஆண்டும் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் சைபர்
தாக்குதல்களின் முக்கிய காரணங்களை பகுப்பாய்வு செய்கின்றன. மேலும் தனிப்பட்ட தரவு
மற்றும் கடவுச்சொற்களை ஹேக்கிங் செய்யும் சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யும் மிக
அடிப்படை வடிவமான கடவுச் சொற்கள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.
அடிப்படை பாஸ்வேர்ட்கள்
ஹேக்கர்கள் முதலில் அடிப்படை
பாஸ்வேர்ட்டை மட்டுமே பயன்படுத்துவார்கள். அதற்கேற்ப நிறைய பேர் தாக்குவதற்கு
எளிதான கடவுச்சொற்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். 2019 ஆம் ஆண்டில்,
பாதுகாப்பு சேவை நிறுவனமான ஸ்பிளாஸ் டேட்டா 5 மில்லியன் அளவு கசிந்த கடவுச்சொற்களை
அணுகி ஹேக்கர்கள் பயன்படுத்தும் அடிப்படை கடவுச் சொற்களை பகிர்ந்துள்ளது.
பாஸ்வேர்ட் மிக முக்கியம்
நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் என்பது
முக்கியான ஒன்று. தற்போதை இணையதள காலத்தில் தங்களின் வங்கி கணக்கு, ஜிமெயில்,
பேஸ்புக், டுவிட்டர் என அனைத்து கணக்குகளும் மிகவும் முக்கியமானவை. நமது
அக்கவுண்டுகளை யார் ஹேக் செய்யப்போகிறார்கள் என்று எளிதாக எண்ண வேண்டாம்.
123456789
பெரும்பாலானோர் பயன்படுத்தும்
அடிப்படை பாஸ்வேர்டாக இருப்பது. 123456789 ஆகியவையே பாஸ்வேர்டாக தேர்ந்தெடுக்கின்றனர்.
இதுதொடர்பான பாஸ்வேர்டை பயன்படுத்தும் போது நினைவு வைத்துக் கொள்ள மிகவும் எளிதாக
இருக்கும் எனவும் கருதுகின்றனர். எடுத்துக்காட்டாக 123456, 12345678, 6789,
987654321 போன்றவைகளையே பாஸ்வேர்டாக பயன்படுத்திகின்றனர்.
Qwerty
Qwerty என்ற பாஸ்வேர்ட்டை பயன்படுத்தும்
நபர்களும் அதிகமாகவே உள்ளனர் காரணம். Qwerty என்ற வார்த்தை தற்போதைய கீபோர்டில்
முதல் 6 எழுத்து சொல்லாக உள்ளது எனவே அனைவரும் இதை பயன்படுத்துகிறார்கள்.
Password
சிலர் அதிகம் சிந்திப்பதாக நினைத்து
Password என்ற சொல்லையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி வருகின்றனர். இது பலரும் முதலில்
செக் செய்யப்படும் பாஸ்வேர்டாக உள்ளது.
மொபைல் நம்பர்
சிலர் தங்களது மொபைல் நம்பரையே
பாஸ்வேர்டாக பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் சிலர் மொபைல் நம்பரையே யூஸர்
நேம்மாக பயன்படுத்தி அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்துகின்றனர்.
Iloveyou
Iloveyou என்ற வார்த்தை நியாபகம்
வைத்துக் கொள்ள எளிதாக இருக்கிறது என்ற நோக்கில் Iloveyou என்ற சொல்லை பாஸ்வேர்டாக
பயன்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் எளிதாக மற்றவர்கள் பயன்படுத்திவிடலாம்.
3333
ஒரே வகையான எண்ணை பாஸ்வேர்டாக
பயன்படுத்து சிலர் தற்போது வரை இருக்கத்தான் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக 1111,
2222, 3333 போன்ற எண்களையே கடவுச்சொல்லாக பயன்படுத்துகிறார்கள்.
123123
இது போன்ற எண்களும் பாஸ்வேர்டாக
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
1q2w3e4r
கீபோர்டில் உள்ள 1234 என்ற
வார்த்தையும், qwer என்ற கீபோர்டில் உள்ள முதல் 4 வார்த்தையையும் பயன்படுத்தி
பாஸ்வேர்டாக உபயோகிக்கின்றனர்.
!@#$%
!@#$%, இந்த வார்த்தையானது ஷிப்ட்
பட்டனை பயன்படுத்தி 12345 என்ற வார்த்தையை பயன்படுத்தினால் வரும் குறியீட்டை
பயன்படுத்தி பாஸ்வேர்டாக உபயோகிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக