டியூப் சேனல் மூலம் பணம் ஈட்டி அதையே பணியாக கொண்டவர்கள் பல
பேர். இதில் சிலர் பல்வேறு ஐடியாக்களை நுழைத்து வித்தியாசமாக வீடியோ பதிவிட்டு
பிரபலமாகுவது உண்டு. அதேபோல் சிலர் தங்களின் திறமைகளை வெளியிட்டு பிரபலமாகுவதும்
உண்டு.
டாப்
10 யூடியூப் சேனல்கள் வெளியீடு
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் யூடியூபில்
அந்த ஆண்டு அதிகம் பார்த்த வீடியோ மற்றும் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப்
சேனல் பெயர்கள் வெளியிடப்படும். அதன்படி இந்தாண்டும் youtube rewind 2019 and for
the record என்ற தலைப்பில் டாப் 10 யூடியூப் சேனல்கள் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. அதன் வரிசையை பார்க்கலாம்.
ஆந்திரா
தாத்தா அசைவ சமையல்
யூடியூப் டாப் 10 பட்டியலில் முதல்
இடத்தில் இருப்பது கிராண்ட்ஃபா கிச்சன் என்ற சேனல்தான். இந்த சேனல் சுமார் 6.64
மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. இந்த சேனலில் ஆந்திராவைச்
சேர்ந்த முதியவர் ஒருவர் இளைஞர்களோடு இணைந்து சமையல் செய்வர். பலருக்கு பந்தி
வைக்கும் அளவுக்கு இவர் மொத்தமாக வெளிபுறத்தில் வைத்து சமைப்பது அனைவரையும்
வெகுவாக கவர்ந்துள்ளது.
மொரட்டு
சேட்டைகளின் மைக் செட் சேனல் பிடித்த இடம்
இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ் சேனலான
மைக் செட் சேனல் ஆகும். 3.39 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட இந்த சேனல் மைக்
செட் ராமின் கெத்து நடிப்புக்காக ரீச் ஆனது. மிகையான நடிப்பு இல்லாமல் மாஸ்
காட்டியிருக்கும் மைக் செட் ராம் நடிக்கும் மைக் செட் அனைவரையும் பெரிதளவு
கவர்ந்துள்ளது. பாண்டிச்சேரி இளைஞர்கள் நடத்தும் இந்த சேனல் கடந்த 2017 ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது.
அட்டகாச
ரூம்மேட்ஸின் கரிக்கு
அடுத்த இடத்தில் உள்ளது கரிக்கு என்ற
மலையாளச் சேனல். கரிக்கு என்ற சேனல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே
கூறலாம். கரிக்கு என்றால் இளநீர் என்று பொருள், இந்த சேனலானது தேராபேரா என்ற
வெப்சீரிஸ் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தது. இந்த சேனலானது, வேலையில்லாமல்
இருக்கும் நான்கு இளைஞர்கள் ரூம்மேட்டுகளாக வலம்வந்து தங்களின் தினசரி வாழ்க்கையை
கழிப்பது குறித்து தெரிவிப்பதாகும்.
எச்சில்
ஊறும் ஆறுமுக தாத்தா சமையல்
அடுத்த இடம் வேறு யாருக்கும் இல்லை
நமது ஆறுமுக தாத்தா தான். கிராமாத்தார்களால் டாடி ஆறுமுகம் என்று செல்லமாக
அழைக்கப்படும் இவரது யூடியூப் சேனல் பெயர் வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற பெயரில்
தொடங்கி சுமார் 3.39 மில்லியன் சப்ஸ்கிரைபருடன் வலம் வருகிறது. கிராமத்து மணம் மாறாமல்
வெளிப்புறத்தில் வைத்து சமைக்கும் இவரது கலை அசைவப் பிரியர்களை கண் சிமிட்டாமல்
எச்சில் ஊர பார்க்க வைக்கும். அதோடு, சமைத்து முடித்துவிட்டு இறுதியாக இவர்
சாப்பிடும் காட்சி, அடடடடடடா என்ற அளவு நாமே உண்பது போல் அமைந்திருக்கும்.
நிகழ்வுகளை
விளக்கும் மதன்கௌரி
அப்போதைய நிகழ்வு அனைத்தையும் தெளிவாக
வரலாற்றோடு எடுத்து கூறும் மதன்கௌரி சேனல் தான் 2.77 மில்லியன் சப்ஸ்கிரைபரோடு 5
ஆம் இடத்தில் உள்ளது. இந்த சேனலில் மதன் கூறுவதை கேட்கும்போது தெளிவாக சிந்தனை
பிறக்கும் விதமாக இருக்கும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
கலக்கலக்க
வைக்கும் பிளாக் ஷீப்
பிளாக் ஷீப், அனைவருக்கும் தெரிந்த
ஒரு சேனல்தான் இது, இதில் நடித்த பலரும் தற்போது சினிமாத்துறையில் அடியெடுத்து
வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சேனலுக்கு சுமார் 2.71 மில்லியன் சந்தாதாரர்கள்
உள்ளனர். இவர்களது வீடியோ அனைவரையும் கலகலப்பாக வைப்பதோடு சிந்திக்கும்
வீடியோக்களும் தற்போது பதிவிட்டு வருகின்றனர். இவர்களது சீரிஸ்-க்கு தனி ரசிகர்கள்
பட்டாளமே உண்டு என கூறலாம்.
மாமியார்
மருமகள் இணையும் சமையல்
ஏழாவது இடத்தில் இருப்பது மதுராஸ்
ரெசிப்பி என்ற சேனல் ஆகும். இந்த சேனலானது 2.56 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டது.
இதுவரை யாரும் பார்த்திடாத அதிசியமாக மாமியார் மருமகள் இணைந்து சமையல் செய்து
காண்பிக்கும் என்ற நடைமுறையே அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.
டெக் செய்திகள் குறித்த விளக்கம்
எம்
4 டெக் என்ற சேனலானது ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் 2.5 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன்
8-வது இடத்தை பிடித்துள்ளது. டெக் செய்திகள் தொடர்பான செய்திகளை துல்லியமாக வழங்கி
பிரபலமடைந்த சேனல் இது.
கொங்கு தமிழில் நக்லைட்ஸ்
9-வது
இடத்தை பிடித்திருப்பது நக்லைட்ஸ் என்ற சேனலாகும். இந்த சேனல் 2.28 மில்லியன்
சப்ஸ்கிரைபர்களை கொண்டது. கோயம்புத்தூர் கொங்கு தமிழில் கலக்கியிருக்கும் இந்த
சேனலின் சிறப்பம்சம், குடும்ப சங்கதிகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளை பட்டும்படாமல்
கையாளும் நடைமுறையே ஆகும்.
ஹரிஜாவின்
சொற்பொழிவில் எருமசாணி
10 இடத்தில் இருப்பது எருமசாணி, இந்த
பெயரே பலராலும் பேசப்பட்டது. இதில் வரும் ஹரிஜா மிகவும் பிரபலமடைந்த
கதாபாத்திரமாகும். பார்க்க மாடல் பெண்ணாக இருக்கும் இந்த பொண்ணு என்னாமா
பேசுராங்கயா என்ற அளவுக்கு அனைத்தையும் சகலமாக பேசி கலக்கியிருப்பார். தினசரி
நிகழ்வுகளை அதிரடியாகவும், வார்த்தை ஜாலவத்தாலும் கலக்கியிருப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக