Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 23 டிசம்பர், 2019

முதுகுவலியால் மருத்துவமனைக்கு சென்ற 19 வயது பெண்!அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

முதுகுவலியால் மருத்துவமனைக்கு சென்ற 19 வயது பெண்!அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!


ஹைதராபாத்தை சேர்ந்த அஷ்மாபேகம்.சுமார் 19 வயதான இவர் ஓராண்டாக தீராத முதுகுவலியால் அவதிபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு நேற்று முதுகுவலி அதிகமாக இருந்துள்ளது.
இதன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் கட்டாயமாக ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதன் காரணமாக அவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த பெண்ணின் உடம்பிற்குள் துப்பாக்கி குண்டு இருந்துள்ளது.அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அந்த குண்டை எடுத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து அந்த பெண்ணிடமும் அவரின் தாயாரிடமும் விசாரித்ததுள்ளனர்.ஆனால் அவர்கள் எப்படி குண்டு உடலில் வந்தது  என்று தெரியாது என கூறியுள்ளனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!