மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டுமல்ல.. இன்று
சிறியவர்களிடமும் பரவலாக இருக்கிறது. நடக்காமல் படிகளில் ஏறாமல் சிகிச்சை செய்
யாமல் கொஞ்சம் ஓய்வெடுத்து கொள்வோம் என்னும் முடிவுகள் வலியை குணப்படுத்தாமல்
அதிகரிக்கவே செய்யும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
தரையில் சமமாக சம்மணமிட்டு
உட்கார முடியவில்லை. படிகளில் ஏறி இறங்கி ஏறமுடியவில்லை, பேருந்துகளில் ஏறுவதும்
கொஞ்சம் சிரமமாக இருக்கிறது இத்தகைய வசனங்களை இன்று இளைய தலைமுறையினரிடம் அதிகம்
கேட்கலாம். 108 வயதிலும் தள்ளாடாமல் நடந்த நம் முன்னோர்களின் வழித்தோன்றலில்
வந்திருக்கும் இன்றைய இளம் தலைமுறையினர் உடலில் பல வலிகளை அவ்வபோது உணர்கிறார்கள்
இத்தகைய
ஆரோக்கிய குறைபாடுகள் ஒருபுறம் இருக்க அதை அலட்சியம் செய்து காலத்தைக் கடப்பது அதை
மேலும் சிக்கலுக்கு உண்டாக்கிவிடும் என்பதையும் அறிவதில்லை. அதனால் தான் 40 வயதைக்
கடக்கும் போதே மூட்டுவலியும், எலும்பு தேய்மானமும் அதிக வாய்ப்புகளை
பெற்றுவிடுகிறது.
எனக்கு தெரிந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் தான் கல்லூரி காலம் முடிந்து ஐடி பணியில் நுழைந்திருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக (வலது புறம்) இடுப்பு எலும்பு பகுதியிலிருந்து உள்ளங்கால் பாதம் வரை காலையில் எழுந்திருக்கும் போதே வலியில் துடித்துவந்தார்.
அந்த வலி வரும் போது விண்ணென்று உச்சி வரை ஏறுகிறது என்றும் கூறியவரை ஆர்த்தோ சிகிச்சை நிபுணரைச் சந்திக் கும்படி அறிவுறுத்தினேன். கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துபற்றாக்குறை என்பதை அறிந்து தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டி ருக்கிறாள்.
வயது முதிர்ந்தவர்களுக்கும் மூட்டு வலி வராது என்பது முன்னோர்கள் காலம். ஆனால் வயது வராத இளைய தலைமுறைக் கும் மூட்டுவலி உண்டாகும் என்பது இன்றைய காலம். முதியவர்களுக்கும் நடுத்தரவயதை தாண்டியவர்களுக்கும் வரக் கூடிய நோய்கள் எல்லாம் இளையதலைமுறையினரையும் எளிதாக பாதிக்கிறது.
எனக்கு தெரிந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் தான் கல்லூரி காலம் முடிந்து ஐடி பணியில் நுழைந்திருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக (வலது புறம்) இடுப்பு எலும்பு பகுதியிலிருந்து உள்ளங்கால் பாதம் வரை காலையில் எழுந்திருக்கும் போதே வலியில் துடித்துவந்தார்.
அந்த வலி வரும் போது விண்ணென்று உச்சி வரை ஏறுகிறது என்றும் கூறியவரை ஆர்த்தோ சிகிச்சை நிபுணரைச் சந்திக் கும்படி அறிவுறுத்தினேன். கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துபற்றாக்குறை என்பதை அறிந்து தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டி ருக்கிறாள்.
வயது முதிர்ந்தவர்களுக்கும் மூட்டு வலி வராது என்பது முன்னோர்கள் காலம். ஆனால் வயது வராத இளைய தலைமுறைக் கும் மூட்டுவலி உண்டாகும் என்பது இன்றைய காலம். முதியவர்களுக்கும் நடுத்தரவயதை தாண்டியவர்களுக்கும் வரக் கூடிய நோய்கள் எல்லாம் இளையதலைமுறையினரையும் எளிதாக பாதிக்கிறது.
உடற்பயிற்சி இல்லாததும் உடல் உழைப்பு குறைபாடுமே மூட்டுவலிக்கு முக்கிய காரணமான சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து பணிச்சூழல், பணி முறையும் உடல் உழைப்பைக் குறைத்திருக்கிறது. உடலுக்கு வலுவூட்டக்கூடிய உணவு முறையும் மாறி பல்வேறு நோய்களைதந்துவிடுகிறது.
மூட்டுகள்மனித உடலின் எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கும் இடம்தான் மூட்டுகள் என்றழைக்கப்படுகிறது. இந்த மூட்டுகள் அசையும் மற்றும் அசையா மூட்டுகள் என்று இருவகை உண்டு. நம் உடல் இயங்கும் போது அசையும் மூட்டுகளுக்கும் வேலை கொடுக்கிறோம்.
உடலில் தோள் மூட்டு, முழங்கை மூட்டு, இடுப்பு மூட்டு, மணிக்கட்டு மூட்டு, முழங்கால் மூட்டு போன்ற மூட்டுகள் முக்கிய மானவை. இடுப்பு வலி, கழுத்துவலி, தோளிபட்டை வலி இதைத் தாண்டி அதிக சதவீதத்தினர் பாதிக்கப்படுவது முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியே. இதுதான் அதிகளவில் வயது பேதமில்லாமல் அதிகரித்துவருகிறது.
மூட்டுவலிநடக்கும் போது, படிக்கட்டிகளில் ஏறும்போது அடுத்த அடியை எடுத்துவைக்க கால்கள் இயல்பாக ஒத்துழைக்க மறுக்கும். தசைகளைத் தாண்டி மூட்டுகளில் வலியையும் ஒருவித சத்தத்தையும் உணரலாம். இந்த வலியானது ஒருவாரம் வரை தொடர்ந்து இருந்தால் அது மூட்டுவலி என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
வலி இரண்டு கால்களில் தான் வரும் என்பதில்லை. ஒரு கால் மட்டும் கூட வலி எடுக்கலாம். சிலருக்கு வலியோடு கூடிய காய்ச்சலும் உடலில் அதிக குளிரும் உண்டாகும். மூட்டுகளில் சிவப்பு, சூடான உணர்வு,வீக்கம், கடுமையான வலி போன்ற வையும் ஏற்படும். வெகு சிலருக்கு எலும்புப்புரை, எலும்புருக்கி இருக்கலாம்.
மூட்டுவலியை எப்போது உணர்கிறீர்கள்மூட்டுவலியின் தொடக்கத்தில் உங்கள் வலியானது எந்த வேலையை அதிகம் அல்லது எந்த உடல் அசைவை அதிகம் செய்யும் போது உண்டாகிறது என்பதைக் கண்டறியுங்கள்.
உதாரணத்துக்கு முழங்கால் வலியாக இருந்தால் ஒரு நாளில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போதோ, உட்கார்ந்து எழும் போதோ, காலை நீட்டி மடக்கி அமரும் போதோ, நாற்காலியில் அவ்வபோது எழுந்து எழுந்து உட்காரும் போதோ அதிக வலியை உணர்ந்தால் அந்தக் குறிப்பிட்ட வேலையை தொடர்ந்து வரும் நாளில் குறைத்துக்கொண்டு கவனித்து பாருங்கள்.
இதே போன்று தோள்பட்டை, கை மூட்டு, இடுப்பு மூட்டு பகுதிகளில் மட்டும் வலியை உணர்ந்தால் அந்த உறுப்புகளின் அசைவைக் குறைத்தும் கவனித்து பாருங்கள். வலியின் தீவிரம் குறைந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள். மருத் துவரிடம் சிகிச்சைக்கு செல்லும் போது மறக்காமல் இதையும் தெரிவியுங்கள்.
மூட்டுவலி உண்டாக காரணம்வயதானவர்களுக்கு:முழங்கால் மூட்டில் உள்ள குறுத்தெழும்பு வழுவழுப்பாக இருக்கும். கொலாஜன் என்னும் புரதப்பொருள் இந்த வழுவழுப்புத் தன்மையைப் பாதுகாத்து குருத்தெழும்பை உறுதியாக வைத்துக்கொளும்.
ஆனால் வயாதாகும் போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறைவது போலவே கொலாஜன் உற்பத்தியும் குறைகிறது. அப் போது மூட்டில் உள்ள குருத்தெலும்பு திசைகள் தேய்ந்து நடக்கும் போது மூட்டுகள் வழுவழுப் பின்மையால் உரசும் போது வலியை உண்டாக்கும். இது வயதானவர்களுக்கும் வரும் மூட்டு வலிக்கான காரணம் என்று சொல்லலாம்.
இளைய தலைமுறையினருக்குஉடல் உழைப்பு குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் கோளாறுகள், அதிகப்படியான உடல் பருமன், துரித உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கால்சியம் குறைபாடு, சத்தான உணவின்மை, உடற்பயிற்சி இன்மை இவையே முக்கிய காரணமாக அமைகிறது.
இவைதவிர மூட்டு தேய்மானம், நீரிழிவு நோய்,மரபு, அடிபடுவது, மூட்டில் இருக்கும் சவ்வுப்பகுதி கிழிவது. ருமட்டாய்டு, காச நோய் மூட்டுகளில் படியும் அதிகப்படியான யூரிக் அமிலம் போன்றவற்றையும் சொல்லலாம்.
வலியை அலட்சியம் செய்யாதீர்மூட்டு வலி ஆரம்ப கட்டத்தில் சாதாரண காய்ச்சல் போன்று தான் இதுவும் என்று பலரும் நினைத்து சாதாரணமாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் மூட்டுவலி நீண்டநாள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வலியின் தீவிரம் பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.
முதலிலேயே ஆர்த்தோ மருத்துவரை அணுகினால் உங்களுக்கு ஓய்வு தேவையா அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை தேவையா என்பதை அவரே பரிந்துரைப்பார். சிகிச்சையின்றி வலியின் தீவிரம் அதிகமாகும் போது ருமட்டாய்டு, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ், ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.
மூட்டுவலியின் தொடக்கத்திலேயே சிகிச்சையைத் தவறினால் நாளடைவில் இதன் பாதிப்பு பெரிதாக இருக்கும். ஏனெனில் தீவிர மூட்டுவலி இருந்தால் மூட்டு அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்றாலும் மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வில்லை நிரந்தர குணமில்லை என்பதே உண்மை. மூட்டுவலி சிகிச்சைகள் அனைத்துமே வலையைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத் தவோ மட்டுமே செய்யும்.
பெண்களை குறிவைக்கும் மூட்டுவலிஹார்மோன் சுரப்பு குறைந்தால் இயல்பாகவே மூட்டுகளில் பாதிப்பு உண்டாகும். ஹார்மோன் கோளாறுகளால் அதிகம் அவதிப்படுபவர்கள் பெண்களே என்பதால் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுபவர்களும் இவர்களே என்கிறார்கள் மருத்துவர்கள்.
மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் கார்டிலேஜ் சுரக்க ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் காரணமாகிறது. பெண்களின் மாதவிடாய் காலங்களில் இதன் சுரப்பு குறையும் . மேலும் அவர்கள் மெனோபாஸ் காலங்களில் அடியெடுத்து வைக்கும் போதே ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் மிக மிக குறைவாக சுரக்க தொடங்கும். இதனால் மூட்டுவலி எளிதாக ஏற்படுகிறது.
மேலும் கால்சியம் பற்றாக்குறை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உண்டாவதற்கும் இந்த மாதவிடாயே காரண மாகிறது.. கால்சியம் குறைபாடு எலும்பின் வலுவை குறைப்பதாலும் மூட்டுவலி பாதிப்பு உண்டாகிறது. இதனோடு உடல் பருமனையும் கொண்டிருக்கும் பெண் களுக்கு மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்கவே செய்யும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
உடலில் எலும்புகள் இணையும் முக்கிய மூட்டுகளில் உண்டாகும் வலியை பொருட்படுத்தாமல் முதலிலேயே மருத்துவரிடம் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் மூட்டுவலியின் தீவிர பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். இல்லையென்றால் நடக்கவே முடியாமல் அதிக நேரம் முடங்கியே இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக