தமிழகத்தில் மலைவாச தலங்களில் ஒன்று சிறுமலை. இவை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
இது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 34கி.மீ தொலைவிலும், வத்தலக்குண்டில் இருந்து 62கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
சிறுமலையில் வளர்ந்தோங்கிய மரங்கள், சோலைகள் என பசுமையை உள்ளடக்கி ரம்மியாக காட்சியளிக்கின்றன.
இந்த சிறுமலையில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
சிறுமலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு அரிய வகை மூலிகைகள், எலுமிச்சம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் அதிகமாக விளைகின்றன.
இங்கு விளையும் பழவகைகள் தனிச்சுவை உடையது என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். மேலும், இங்கு விளையும் மலை வாழைக்கு என தனிச்சுவை உண்டு.
இங்கு அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மலையில் பல வகையான தாவர வகைகள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளதால் இங்கு தூய்மையான காற்றை சுவாசிக்கின்றனர் இப்பகுதி மலைவாழ் மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வழியாக சந்தானவர்த்தினி ஆறு மற்றும் சாத்தையாறு ஓடுகின்றன.
இந்த இரண்டு ஆறுகளும் சிறுமலையில் உருவாகின்றன. சந்தானவர்த்தினி ஆற்றில் நீராடுபவர்களுக்கு சந்ததிகள் (சந்தானம்) பெருகும் என்பது நம்பிக்கை.
மலையில் இருந்து வரும் நீர் பல வகை மூலிகைகளை உள்ளடக்கியதால் நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது என கூறப்படுகிறது.
சிறுமலையை சுற்றி புதூர், பனையூர், சக்கிலிப்பட்டி, அரளக்காடு, தவிட்டுக்கடை, தாழைக்காடு, கடமான்குளம் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன.
சிறுமலையிலுள்ள மீன்முட்டிபாறை பகுதியில் உள்ள குகைகளில் ஆதிவாசிகளின் ஓவியங்களும் காணப்படுகின்றன.
இங்கு இயற்கையோடு கூடிய மக்கள் விரும்பும் பல இடங்கள் உள்ளன.
அங்கிருந்து கீழே தெரியும் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க மிகவும் அருமையான இடம் இது.
திண்டுக்கல் நகரப்பகுதி முதல் சிறுமலையின் பிற மலைப்பகுதிகள் வரை கண்டுகளிக்கலாம்.
எப்படி செல்வது?
திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
இதர சுற்றுலாத் தலங்கள் :
கொடைக்கானல் மலை
பழநி மலை
திண்டுக்கல் கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக