Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

8-வழிச்சாலை வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

8-வழிச்சாலை வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு 


ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டது மத்திய அரசு.இந்த திட்டத்தில் விவசாய நிலங்களை அரசு,  கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.நிலம் கையகப்படுத்த தடையும் விதித்தது.
8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.விசாரணையின் போது விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
ஆனால் இன்று நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு தரப்பில்  ஆவணங்கள் தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.மேலும்  வழக்கு விசாரணையை நாளை மறுநாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக