ஏர்டிராப்
என்பது ஆப்பிள் சாதனங்களைக் கொண்ட பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள்,
தொடர்புகள் மற்றும் பிற தரவை வயர்லெஸ் மற்றும் அதிவேகத்தில் பகிரக்கூடிய
செயல்பாடகும். அதேபோல் இந்த அம்சம் ஐபோனில் இருந்து டாக்யூமென்ட் அல்லது ஏதேனும்
மீடியா ஃபைல்களை பகிரும் போது, வாட்ஸ்அப் காண்டாக்ட், க்ரூப்கள், ஏர் டிராப்
மற்றும் மெயில் ஆப்ஷன்கள் போன்றவை பரிந்துரைக்கப்படும்.
புதிய ஐ.ஒ.எஸ். ஷேர் ஷீட்
புதிய
ஐ.ஒ.எஸ். ஷேர் ஷீட் மூலம் மல்டிமீடியா தரவுகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம்.இந்த
தொழில்நுட்பமானது ப்ளூடூத், வைபை முதலியவற்றின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.
ஏர்டிராபில் ஷேர் செய்யும் போது பைல்கள் உடனடியாக அனுப்பப்படுகிறது. சமீபத்திய
புதிய மாடல் அனைத்து ஐபோன்களும் ஏர்டிராப்பை ஆதரிக்கின்றன.
நான்காவது தலைமுறை புதிய தொழில்நுடபம்
நான்காவது
தலைமுறை புதிய தொழில்நுடபம் எனப்படும் ஏர்டிராப் ஐபோன் வாடிக்கையாளர்கள் மத்தியில்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தி ஐபாட் மினி el, ஐபாட் புரோ மற்றும் ஐபாட் டச்
5வது தலைமுறை உள்ளிட்ட அனைத்து வகைகளில் ஏர்டிராப் உள்ளது.
ஏர்டிராப்
பயன்பாடு
அதேபோல்
மேக்ஸுக்கு வரும்போது, ஏர் டிராப்பை
எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம் 2012 மேக் மற்றும் அதன்பின் உள்ள அனைத்து
வகைகளிலும் ஏர்டிராப் வசதியை பயன்படுத்தலாம். இந்த செயல்பாடு ஆப்பிள்
வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய சேவை
இந்த
நிலையில் அந்த வரிசையில் தற்போது சாம்சங் நிறுவனமும் ஃபைல் ஷேரிங் என்ற
தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங்கின் ஃபைல்
ஷேரிங் சேவையானது க்விக் ஷேர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக
கூறப்படுகிறது.
பிற சாதனங்களுக்கு பின்பு வெளிவரும்
இந்த
தொழில்நுட்பமானது கேலக்ஸி எஸ்20 சீரிஸ் போனில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இதை
கொண்டு இரண்டு கேலக்ஸி போன்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். அதேபோல்
க்விக் ஷேர் ஆப்சன் மூலம் யாருடன் எல்லாம் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பெறவும்
முடியும் என அறிந்துக் கொள்ள முடியும். இந்த க்விக் ஷேர் ஆப்ஷன் முதல் கட்டமாக
எஸ்20 சீரிஸ் போனில் சோதிக்கப்பட்ட பின் பிற சாதனங்களுக்கு வழங்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக