மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில்
ஞாயிற்றுக்கிழமை செல்பி கிளிக் செய்யும் போது ரயிலில் மோதியதில் 21 வயது மாணவி
உயிரிழந்துள்ளதாக அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) தெரிவித்துள்ளது.
ஆற்றில்
இருந்து குதித்த பெண்
ரயிலில் மோத வருவதில் இருந்து தன்னைக்
காப்பாற்றிக் கொள்வதற்காக இறந்தவருடன் வந்த மற்றொரு பெண் பாலத்தில் இருந்து
ஆற்றில் குதித்ததில் பலத்த காயமடைந்தார் என்றும் ஜிஆர்பி அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
பயிற்சிக்கு
சென்ற 100 மாணவர்கள்
மேற்கு வங்கம் மைனகுரியில் உள்ள ஒரு
பயிற்சி மையத்தின் மாணவர்கள், ஓட்லபரி பகுதியில் கிஸ் ஆறுக்கு சுற்றுலா
சென்றுள்ளனர். அப்போது தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த பயிற்சி மையத்தில்
இருந்து சுமார் 100 பேர் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.
ரயில்
வருவதை கவனிக்காமல் செல்பி எடுத்த இளம்பெண்கள்
சுமார் 100 பேர் கொண்ட குழுவில்
இருந்து இரண்டு மாணவிகள் மட்டும் ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் செல்பி எடுப்பதற்காக
சென்றுள்ளனர். அப்போது ஆற்றின் மறுபுறத்தில் இருந்து ரயில் வருவதை மாணவிகள்
கவனிக்கவில்லை. செல்பி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் மாணவிகளுக்கு
அருகில் வந்ததாக கூறப்படுகிறது.
மாணவி
மீது ரயில் மோதியது
அப்போது இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி
ரயில் பாலத்தின் மேல் இருந்து ஆற்றுக்குள் குதித்து விட்டார். மற்றொரு மாணவி
பாலத்தின் மேல் இருந்து குதிக்க அஞ்சியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த 21 வயது
மாணவி மீது ரயில் மோதியுள்ளது.
மற்றொரு மாணவி மருத்துவமனையில் அனுமதி
ரயில் மோதியில் அந்த மாணவி பாலத்தில்
இருந்து ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். முன்னதாக பாலத்தில் இருந்து
குதித்த மற்றொரு மாணவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக