சீனாவில் இருந்து வரும் பொருட்கள்
எல்லாமே கிட்டத்தட்ட"போலியானதாக" இருக்கும் என்கிற ஏளன பேச்சுகள் இப்போதெல்லாம்
எழுவதில்லை, குறிப்பாக மொபைல் போன்கள் துறையில்! இப்போதெல்லாம் பெரும்பாலான இந்தியர்களின்
கைகளில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களைத்தான் காண முடிகிறது. யாரை கேட்டாலும் சாம்சங்,
சியோமி, ஒப்போ, ஒன்பிளஸ் என்கிறார்கள்.
உண்மை
கசக்கத்தான் செய்யும்!
ஆனால்
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? இப்போதும் கூட சீனாவில் இருந்து வரும்
"பொருட்கள்" அத்துணையுமே ஒரிஜினல் கிடையாது. இதை நாங்கள் சொல்லவில்லை, சீன
பெஞ்ச்மார்க்கிங் போர்ட்டல் ஆன மாஸ்டர் லூ (Master Lu) கூறுகிறது. இந்த சீன
போர்டல் சீனாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 10 போலியான
ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிர்ச்சியான விடயம்
என்னவென்றால், அந்த பட்டியலில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின்
சாதனங்கள் ஆனது முறையே 28.7% மற்றும் 15.88% பங்கைக் கொண்டிருக்கின்றன. ஆக
கீழே பட்டியலிடப்பட்டுள்ள போன்களை வாங்கப்போகிறீர்கள் என்றால், கொஞ்சம்
உஷாராக இருக்கவும். சீனாவில் அதிகம் விற்பனையாகும் 10 போலி
ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:
01.
சாம்சங் W2018
இது 4.20
இன்ச் (1080x1920) எ;அளவிலான டிஸ்பிளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835, 5எம்பி
செல்பீ கேமரா, 12எம்பி ரியர் கேமரா,6 ஜிபி அளவிலான ரேம், 64 ஜிபி அளவிலான உள்ளடக்க
சேமிப்பு, 2300mAh பேட்டரி மற்றும் Android 7.1.1 ஓஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.
டூயல் சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் நானோ சிம்
மற்றும் நானோ சிம் கார்டுகளை ஏற்றுக்கொள்கிறது. சாம்சங் W2018 ஆனது வைஃபை,
ஜி.பி.எஸ், ப்ளூடூத் வி 4.20, என்.எஃப்.சி, 3 ஜி, மற்றும் 4 ஜி போன்ற இணைப்பு
விருப்பங்களை வழங்குகிறது.
02. ஐபோன்
8
இது 4.70
இன்ச் அளவிலான (750x1334) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.மேலும் ஆப்பிள் A11 பயோனிக் சிப்
கொண்டு இயங்குகிறது முன்பக்கத்தில் 7MP அளவிலான கேமரா கொண்டுள்ளது. பின்பக்கத்தில்
12MP அளவிலான ரியர் கேமராவை கொண்டுள்ளது. இது 2GB அளவிலான ரேம் மற்றும் 64GB
அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. இதன் பேட்டரி திறன் 1821mAh ஆகும். இது
iOS 11 கொண்டு இயங்குகிறது.
03. ஐபோன்
XL மேக்ஸ்
இது 6.50
இன்ச் அளவிலான (1242x2688) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.மேலும் ஆப்பிள் A12 பயோனிக்
சிப் கொண்டு இயங்குகிறது முன்பக்கத்தில் 7MP அளவிலான கேமரா கொண்டுள்ளது.
பின்பக்கத்தில் 12MP + 12MP என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 64GB
அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ள இந்த ஐபோன் ஐஓஎஸ் 12 கொண்டு இயங்குகிறது.
04. ஐபோன்
X
இது 5.80
இன்ச் அளவிலான (1125x2436) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.மேலும் ஆப்பிள் A11 பயோனிக்
சிப் கொண்டு இயங்குகிறது முன்பக்கத்தில் 7MP அளவிலான கேமரா கொண்டுள்ளது.
பின்பக்கத்தில் 12MP + 12MP என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 3ஜிபி
அளவிலான ரேம் + 64GB அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ள இந்த ஐபோன் 2716mAh
மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஐஓஎஸ் 11 கொண்டு இயங்குகிறது.
05.
சாம்சங் W2019
இது 4.20
இன்ச் அளவிலான (1080x1920) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது க்வால்காம்
ஸ்னாப்டிராகன் 845 மூலம் இயக்கப்படுகிறது, முன்பக்கத்தில் 8 எம்பி அளவிலா செல்பீ
கேமராவை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 12MP + 12MP என்கிற டூயல் கேமரா அமைப்பை
கொண்டுள்ளது. 6 ஜிபி அளவிலான ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இது ஒரு
3070mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம்
இயக்கப்படுகிறது.
06.
சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ்
இது 6.20
இன்ச் அளவிலான (1440x2960) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது சாம்சங் எக்ஸினோஸ்
8895 மூலம் இயக்கப்படுகிறது, முன்பக்கத்தில் 8 எம்பி அளவிலா செல்பீ கேமராவை
கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 12MP கேமராவை கொண்டுள்ளது. 4 ஜிபி அளவிலான ரேம் + 64
ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இது ஒரு 3500mAh பேட்டரி மூலம்
சக்தியூட்டப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயக்கப்படுகிறது.
07. சியோமி
மி மேக்ஸ்
இது 6.44
இன்ச் அளவிலான (1080x1920) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது க்வால்காம்
ஸ்னாப்டிராகன் 650 மூலம் இயக்கப்படுகிறது, முன்பக்கத்தில் 5 எம்பி அளவிலா செல்பீ
கேமராவை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 16MP கேமராவை கொண்டுள்ளது. 3 ஜிபி அளவிலான
ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இது ஒரு 4850mAh பேட்டரி மூலம்
சக்தியூட்டப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 6.0.1 மூலம் இயக்கப்படுகிறது.
08. சியோமி
மி 9
இது 6.39
இன்ச் அளவிலான (1080x2340) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது க்வால்காம்
ஸ்னாப்டிராகன் 855 மூலம் இயக்கப்படுகிறது, முன்பக்கத்தில் 20 எம்பி அளவிலா செல்பீ
கேமராவை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 48MP + 12MP + 16MP என்கிற ட்ரிபிள் கேமரா
அமைப்பையும் கொண்டுள்ளது. 6 ஜிபி அளவிலான ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
கொண்ட இது ஒரு 3300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 9.0
மூலம் இயக்கப்படுகிறது.
09. ஒப்போ
R11 பிளஸ்
இது 6.00
இன்ச் அளவிலான (1080x1920) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது க்வால்காம்
ஸ்னாப்டிராகன் 660 மூலம் இயக்கப்படுகிறது, முன்பக்கத்தில் 20 எம்பி அளவிலா செல்பீ
கேமராவை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 20MP கேமராவை கொண்டுள்ளது. 6 ஜிபி அளவிலான
ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இது ஒரு 4000mAh பேட்டரி மூலம்
சக்தியூட்டப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இயக்கப்படுகிறது.
10.
ஒன்பிளஸ் 7 ப்ரோ
இது
6.67 இன்ச் அளவிலான (1440x3120) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது க்வால்காம்
ஸ்னாப்டிராகன் 855 மூலம் இயக்கப்படுகிறது, முன்பக்கத்தில் 16 எம்பி அளவிலா செல்பீ
கேமராவை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 48MP + 8MP + 16MP என்கிற ட்ரிபிள் கேமரா
அமைப்பை கொண்டுள்ளது. 6 ஜிபி அளவிலான ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட
இது ஒரு 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 9.0 பை
மூலம் இயக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக