பெஙகளூரில்
இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் அதிசயத்
தூண் ஒன்று இருக்கிறது. அது தரையில் படாமல் ஆகாயத்தில் தொங்கிக் கொண்ருக்கும்படி இருக்கிறது.
இந்த தூ அசைக்க முயன்றால் கோவிலில் உள்ள எல்லா தூண்களும் நிலைகுழைய ஆரம்பிக்கிறதாம்.
அந்த அதிசய தொங்கும் தூண் பற்றி விளக்கமாக இங்கே பார்க்கலாம்.
அசையும்
தூண்
இந்தியா
பல்வேறுபட்ட கலாச்சாரம், வளமான பாரம்பரியம், மாபெரும் வரலாறு மற்றும் விரிவான
கட்டடக் கலையைக் கொண்டுள்ளது. இந்தியாவிலுள்ள பல மதங்கள் சகோதரத்துவம், சமத்துவம்
மற்றும் ஆன்மீகம் ஆகிய செய்திகளைப் பரப்புகிறது. மேலும் இந்து வரலாற்றுக்கும்
இந்து மதத்திற்கும் இணையான உறவு இருந்ததாக அதன் கோயில்கள், கோட்டைகள் மற்றும்
வரலாற்றுக்கு முந்தைய காலனிகளில் சான்றுகள் இருக்கின்றன. அத்தகைய இடங்களில்
மீதமுள்ளவற்றை கொண்டு இந்திய இதிகாசங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.
அவை
உண்மையானவையாகவும் தெய்வீகமானவையாகவும் தெரிகிறது. புகழ்பெற்ற இந்து இதிகாசங்களில்
ஒன்று இராமாயணம், ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் சில பாதச்சுவடுகள் காணப்படுகிறது
– இந்த இடம் லேபாக்க்ஷி என்று அழைக்கப்படுகிறது.
லேபாக்க்ஷி கோயில் –
இராமாயணத்தின் தோற்றம்
ராமாயண
இதிகாசத்தில் ராமருடைய மனைவியான சீதையை இலங்கை மன்னன் இராவணன் வான்வழியாக கவர்ந்த
சென்றதாக விவரிக்கப்பட்டுள்ளது. சீதாதேவியை காப்பாற்ற வந்த ஜடாயூ என்கிற பறவை
இராவணேஸ்வரனின் வாளால் காயப்பட்டு ஒரு குன்றின் மேல் விழுந்தது.
சீதையை
தேடி வந்த ராமர் ஜடாயுவை சந்தித்தபோது முதல் வார்த்தைகளாக இதை சொல்கிறார் 'லே
பக்க்ஷி ' அதாவது ‘எழுந்திடு பறவையே’ என்பது இதன் பொருளாகும். அன்று முதற்கொண்டு
இந்த இடம் லேபாக்க்ஷி என்று பெயர் பெற்றது.
லேபாக்க்ஷி
பெங்களூரில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும் ஹிந்துப்பூரிலிருந்து வெறும் 15
கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இது வரலாற்று மற்றும் கட்டிடக்கலையின்
முக்கியத்துவம் கொண்ட ஒரு சிறிய கிராமமாகும்.
கோயில் உருவாக்கம்
1336
- 1646 ஆம் ஆண்டுகளுக்கு இடையே விஜயநகர பேரரசின் ஆட்சியின் போது சிவன் விஷ்ணு
மற்றும் வீரபத்திரருக்கு இங்கே ஆலயங்கள் கட்டப்பட்டது. இந்தக் கோயில்களை வீரண்ணா
விருபண்ணா என்கிற இரண்டு சகோதரர்கள் வடிவமைத்தனர். இந்தக் கோயில் வீரபத்திரர்
கோயில் என்று அழைக்கப்பட்டது. தற்போது லேபாக்க்ஷி கோயில் என்று அறியப்படுகிறது.
விஜயநகர கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயிலில் பல வியக்கத்தக்க அம்சங்கள்
இருக்கின்றன.
தொங்கும் தூண்
கோயிலில்
இருக்கும் பல அரங்கங்களில் ஒன்றான ‘நடன அரங்கத்தில்' ஒட்டுமொத்த கோயிலின் மொத்த
எடையைத் தாங்கும் 70 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலிருந்து கீழாக எழுப்பப்பட்ட
ஒரு தூணைத்தவிர மற்ற அனைத்து தூண்களும் கீழே இருந்து மேலாக எழுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தூண் கோயிலின் தரையைத் தொடுவதில்லை மேலும் இது தரைக்கு சில
சென்டிமீட்டர்களுக்கு மேலே தொங்கிக் கொண்டு நிற்கிறது. இந்தத் தூணை ஆராய்ச்சி
செய்த ஆய்வாளர்கள் இது தவறுதலாக நடக்கவில்லை. இது அந்தக் கால கட்டடக்கலையின்
அற்புதமான சான்றாகும், இன்றைக்கும் ஒப்பற்றதாக விளங்குகிறது என்று
அறிவித்துள்ளனர்.
நிரூபிக்க முயற்சி
ஒரு
பிரிட்டிஷ் இன்ஜினியர் இந்த தொங்கும் தூணின் ரகசியத்தை வெளிப்படுத்த தன்னால்
முடிந்த அளவு முயன்றார். ஆனால் அந்தத் தூணை அசைத்தால் கோயிலின் மற்ற எல்லா
தூண்களின் அமைப்பும் பாதிக்கப்படுவதால் அவரால் அதை செய்ய முடியவில்லை. தொங்கும்
தூணாக இருந்தபோதிலும் அதுதான் கோயிலின் முக்கிய தூண் என்பது இதிலிருந்து
தெளிவாகிறது. அந்தக்கால கட்டிடக்கலையின் புத்திசாலித்தனம் இதுதான். இன்று
தொழில்நுட்ப ரீதியாக வலுவானவர்கள் என்று அழைக்கப்படும் இன்ஜினியர்களால் கூட
அத்தகைய தோற்றத்தை வடிவமைக்க முடியாது.
ஆச்சர்யப்படும் பக்தர்கள்
தினமும்
இந்த கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும் சுற்றுலா பயணிகளும் இந்த
தொங்கும் தூணின் கீழே ஒரு மெல்லிய காகிதம் அல்லது துணியை வைத்து நகர்த்தி இந்த
அதிசய நிகழ்ச்சியின் ஆதாரத்தை காண்கின்றனர். அவர்களே அப்படி செய்து பார்க்கும்போது
அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் மின்னுவதையும் முகத்தில் அதிர்ச்சியின்
வெளிப்பாடும், இதுதான் இந்தியக் கட்டடக் கலையின் தலைசிறந்த படைப்பு என்பதை
இன்றளவும் நிரூபிக்கிறது.
நமது
நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது உங்கள்
கடமையாகும். இந்தக் கோவிலுக்கு வருகை தருவது, புத்தகங்கள் அல்லது வேறு ஏதேனும்
ஊடகங்களின் வழியாக இந்த தகவலை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது உங்கள்
பொறுப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக