Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

தமிழன் கட்டிய உலகிலேயே மிகப்பெரிய கோவில்... அதுல இத்தன மர்மங்கள் ஒளிஞ்சிருக்கா?

 
மிழன் உலகம் முழுவதையும் ஆட்சி செய்தான் என்று நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. அதெல்லாம் வெறும் வாய்ச்சொல் கிடையாது. அதற்கான ஆதாரங்கள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அதில் ஒரு அதிசயமான விஷயம் என்ன தெரியுமா? உலகிலேயே பெரிய கோவில் தமிழனால் கட்ட்பட்டது. அதுவும் பல அதிசயங்கள் நிறைந்தது.

அங்கோர் வார்ட் அதிசயம்

உலகிலேயே மிகப்பெரிய எந்த கடவுளுக்காகக் கட்டப்பட்டிருக்கிறது என்பது பற்றி தெரியுமா உங்களுக்கு?... பொதுவாக எல்லோரிடமும் கேடடால், கோவில் என்றாலே முதலில் சிவன் பெயரையோ அல்லது விஷ்ணுவின் பெயரையோ தான் சொல்வார்கள். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய கோவில் சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்டிருக்கிறது என்பது. இந்த கோவில் கம்போடியாவில் இருக்கின்ற அங்கோர் வாட். இங்கு சென்று சூரிய உதயத்தைப் பார்ப்பது தான் தான் மிகச்சிறப்பான விஷயம். அதை கோல்டன் சன்ரைஸ் என்று அழைக்கிறார்கள்.
சூரியவர்மன் என்னும் மன்னரால் சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்டமான கற்கோவில் தான் இது. சூரிய பகவானால் விஷ்ணுவைக் கொண்டாடும் ஒரு கோவிலாகவும் இருந்ததாகவும் 12 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு இது புத்தர் கோவிலாக மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கோவலின் மையப்பகுதியில் கோபுரத்தின் கீழ் இருப்பது புத்தரின் சிலை தான்.
மிதக்கும் பாலம்
தண்ணீரில் மிதக்கும் மிகப்பெரிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் கடந்து சென்று தான் கோவிலுக்குள் நுழைய முடியும். இந்த அகழியைச் சுற்றி தான் கோவில் அமையப் பெற்றிருக்கிறது. சூரிய பகவானின் கோவில் என்பதால் அதிகாலையிலேயே சூரியன் உதித்துவிடுகிறது.
சொல் விளக்கம்
அதென்ன அங்கோர் வாட், பெயரை வித்தியாசமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அங்கோர்வாட் என்பது கெமர் மொழிச்சொல். அங்கோர் என்ற நகரம் என்றும் வாட் என்றால் கோயில் என்றும் பொருள். அதாவது கோயில் நகரம் என்று அதை பொருள் கொள்ளலாம்.
பெரிய நூலகங்கள்
கோயிலின் வெளிப்புறத்தில் கோட்டைக்குள் நுழையக் கூடிய இடத்தில் இருக்கக்கூடிய முற்றத்தின் வலது புறமும் இடது புறமும் என மிகப்பெரிய இரண்டு நூலகங்கள் இருக்கின்றன. அது ஏன் நுழைவாயிலேயே நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் கேட்கலாம். முற்காலத்தில் இந்த கோவிலுக்குள்ளேயே பல்கலைக்கழகம் இருந்ததாம்.
பிரமாண்ட அகழியும் மேரு மலையும்
இந்த கோவிலைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூய்மையான நீர் ஓடக்கூடிய அகழி அமைந்திருக்கிறது. இந்த அகழியைச் சுற்றி தான் கோவில் அமையப் பெற்றிருக்கிறது.
பொதுவாக கடவுள்கள், தேவர்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்படுவது தான் மேரு மலை. இந்த அங்கோர்வாட் என்பது மேரு மலையின் குறியீடு என்று சொல்லப்படுகிறது.
நுழைவாயில்கள்
இந்த கோவிலுக்கு 5 நுழைவாயில்கள் உண்டு. அந்த காலத்தில் இந்த எல்லா நுழைவாயில்களிலும் எல்லோரும் போகமுடியாது. தனித்தனி நுழைவாயில் உண்டு. அரசர் சென்று வருவதற்கு ஒரு நுழைவாயிலும் மக்கள் செல்ல தனி நுழைவாயில், யானைகளை உள்ளே அழைத்து வர தனி நுழைவாயில் என பிரத்யேகமாக அமைத்திருக்கிறார்கள்.
மிருக அலங்காரமும் ஏழுதலை நாகமும்
கோவிலின் பல இடங்களில் பாம்புகள், சிங்கங்கள், கருடன் ஆகிய விலங்குகளின் தலைகள் பலவும் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
ஏழு என்னும் எண் இறைவனை அடைவதற்கான சூட்சமம் நிறைந்த எண்ணாகக் கருதப்படுவதால், மன்னர் நுழையும் நுழைவாயிலுக்கும் 200 மீட்டர் தொலைவில் 7 தலை நாகத்தின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.
கோயிலின் பிரதான நுழைவு
இந்த கோவிலுக்குள் செல்லும் பிரதான நுழைவாயில் இருக்கும் இடம் என்பது சதுரங்க வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையப் பகுதியில் அமர்ந்து தான் மன்னர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது, முக்கிய முடிவுகளை அறிவிப்பது ஆகியவற்றைச் செய்திருக்கிறார்.
வேறு நாடுகளில் இருந்து வருகின்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் இந்த இடத்தில் வைத்து தான் மரியாதை செய்து அவர்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
நான்கு பிரிவுகள்
கோவில் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று நாகங்களுக்காகவும் இரண்டாவது பகுதி நரகத்திற்கான அமைப்பாகவும் மூன்றாவது மனிதர்களின் பூமியாகவும் நான்காவது கடவுள்களின் இடமாகவும் பகுக்கக்கட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏன் இந்த அமைப்பு என்றால், இந்து தர்மப்படி முதலில் நாகலோகமும் அடுத்ததான எமலோகம், அடுத்து பூலோகம், கடைசியாக தேவர்கள் இருக்கும் சொர்ககம் என்ற வரிசை முறையில் தான் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
அப்சரஸ் உருவங்கள்
பூலோகத்தின் நுழைவுப் பகுதிக் கோவிலின் உள் பகுதியில் உள்ள பெரும்பாலான மண்டபங்களில் அப்சரஸின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் அங்கோர் வார்ட்டில் இருப்பது அப்சரஸ் உருவங்களாகவும் ஓவியங்களாவும் இருக்கின்றன. அந்த கோவிலின் எழில் கொஞ்சம் அழகில் இந்த அப்சரஸ் ஓவியங்களும் சிற்பங்களும் மிக முக்கியமானவை.
சிவ மந்திரங்கள்
இந்த கோவிலில் அவர்களுடைய மொழிகளால் மநதிரங்களை உச்சரிச்சாலும் அதில் பல இடங்களில் பரமேஸ்வரன் போன்ற சிவ நாமங்களும் சிவ மந்திரங்களும் தான் ஓதப்படுகின்றன. வெளிப்புறங்களில் துறவிகள் மந்திரங்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் உச்சரிப்பது தமிழோ அல்லது சமஸ்கிருதமோ இல்லை.
ஐந்து கோபுரங்கள்
நடுப்பகுதியில் 5 கோபுர அமைப்புகள் இருக்கின்றன. இதன் நடு கோபுரத்தின் கீழ் தான் ஒரு காலத்தில விஷ்ணு இருந்ததாகவும் போரில் அது அழிக்கப்பட்டு, பின் புத்தர் சிலை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சூரிய பகவான் இந்த இடத்தில் தான் புத்தரின் சிலையை வைத்து வழிபட்டு வந்ததாக கதைகள் இருக்கின்றன.
ஆனால் தற்போது அங்கோர் வாட் கோவிலின் நடுப்பகுதியில் இருக்கின்ற இடத்தில் கிடந்த கோலத்திலும் நின்ற கோலத்திலும் புத்தர் சிலையே இருக்கிறது.
புத்தர் சிலைகள்
அந்த கோவிலின் உள்ளே கிட்டதட்ட ஏராளமான புத்தர் சிலைகள் இருக்கின்றன. அதில் கிட்டதட்ட இரண்டாயிரம் சிலைகளுக்கும் மேலாக புத்தரின்  தலைகள் நீக்கப்பட்டு உடல் மட்டும் இருப்பது போல இருக்கின்றன. அதாவது அந்த காலத்தில் போர் நடந்தபோது, புத்தரின் தலைகள் கொய்யப்பட்டு, அவை வெவ்வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கப்பட்டிருக்கிறது.
எமதர்ம சிற்பம்
எருமை வாகனததின் மேல் அமைந்திருக்கும் ஜஸ்டிஸ் கடவுள் என்று சொல்லும் ஒரு சிற்பம் இருக்கிறது. அவர் பூலோகத்தில் நடக்கும் நன்மை, தீமைகளைக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் இறந்த பின் அவர் முன் தான் பாவ, புண்ணியங்களுக்காக பலன்கள் கிடைக்கும் என்ற கதையை அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். இது இந்து மதத்தில் உள்ள எமதர்ம வடிவத்தை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பூஜை நேரம்
இந்த கோவிலின் நடு கோபுரத்தின் கீழ் இருப்பவர் புத்தர் என்பவரால் இங்கு எந்தவிதமான பூஜைகளும் ஆராதனைகளும் நடப்பது இல்லை.
சூரிய உதயத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகாலை 5 மணிக்கே கோவில் திறக்கப்பட்டு சூரிய அஸ்தமனம் வரையில் அதாவது மாலை 6 மணி வரையில் கோவில் திறந்திருக்கும். மாலை 6 மணிக்கு கோவில் சாத்தப்படும்.
கோவில் பரப்பளவு
இவ்வளவு பிரமாண்டமான கோவிலின் பரப்பளவு எவ்வளவு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?... வாங்க தெரிஞ்சிக்கலாம். இந்த அங்கோர்வாட் கோவிலின் மொத்த பரப்பளவு 162.6 ஹெக்டேர். அதாவது 402 ஏக்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக