ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் எஸ்இ
தொடரின் கீழ் புதிய ஐபோன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக நீண்ட காலமாக வதந்திகள்
பரப்பப்பட்டு வருகிறது. தற்காலிகமாக அது ஐபோன் எஸ்இ 2 என்று அழைக்கப்படுகிறது.
நிச்சயமாக ஐபோன் எஸ்இ 2, அனைவரும் வாங்கும்படியான பட்ஜெட் விலைக்கு அறிமுகம் ஆகும்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சந்தேகம் எல்லாமே ஐபோன் எஸ்இ 2-வின் வடிவமைப்பு
எப்படி இருக்கும்? எப்போது அறிமுகம் ஆகும்? என்பது மட்டுமே! அந்த சந்தேகத்தை
தீர்த்து வைக்கும்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
எவ்ளோ லேட் ஆனாலும் வெயிட் பண்ண வைக்கும் வடிவமைப்பு!
வெளியான வீடியோவில் ஐபோன் எஸ்இ 2-ஐ
360 டிகிரி கோணங்களிலும் பார்க்க முடிகிறது. சுவாரசியமான விடயம் என்னவென்றால்
வெளியான ஐபோன் எஸ்இ 2 ரெண்டர்கள் ஆனது ஐபோன் 8 போன்ற வடிவமைப்பை
வெளிப்படுத்துகின்றன, அதாவது ஒற்றை பின்புற கேமரா, தடிமனான பெஸல்கள் மற்றும் டச்
ஐடி பட்டன் போன்றவைகளை கொண்டுள்ளது. ஆனால் டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐபோன் எஸ்இ 2
ஆனது ஐபோன் 9-ஐ பின்பற்றுவதாக தெரிகிறது. அதாவது 4.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ரெடினா
டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மூன்று ஐபோன்களின் கலவையாக இருக்கும்!
@OnLeaks உடனாக கூட்டணி கொண்டு
iGeeksBlog வழியாக வெளியான ஐபோன் SE 2 ரெண்டர்கள் மற்றும் 360 டிகிரி வீடியோவில்
காட்சிப்படும் ஐபோன் எஸ்இ 2-வை பார்ப்பவர்கள் அதை ஐபோன் 8 என்று குழம்பிப்போகும்
அளவிற்கு ஒற்றுமைகளை காண முடிகிறது. ஆனால் அவற்றை வேறுபடுவதற்கு உட்புறமும்
வெளிப்புறமும் வேறுபட்ட சில காரணிகள் உள்ளன. ஐபோன் எஸ்இ 2 ஆனது iPhone 8-இல் உள்ள
பளபளப்பான பூச்சு போலல்லாமல், iPhone 11 Pro போன்ற ப்ராஸ்டட் கிளாஸ் பூச்சை பெறும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபோன் எஸ்இ 2 ஆனது ஒரு எஃகு சட்டகத்தைக்
கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது, இது iPhone X-லிருந்து நேராக எடுக்கப்பட்டதாகத்
தெரிகிறது.
கேமரா மற்றும் டிஸ்பிளே பற்றி?
ஐபோன் எஸ்இ 2-வின் பின்புறத்தில் ஒரே
ஒரு கேமரா மட்டுமே உள்ளது, இது ஒரு பட்ஜெட் போன் என்பதால்இந்த ஒற்றை கேமராவனது
ஐபோன் எக்ஸ்ஆரிடமிருந்து இமேஜிங் வன்பொருளைக் கடன் வாங்க வாய்ப்புகள் அதிகமாக
உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் 8 உடன் கிட்டத்தட்ட
ஒத்ததாக இருக்கிறது, தடிமனான பெசல்கள் மற்றும் டச் ஐடி கைரேகை சென்சார் கொண்ட வட்ட
வடிவிலான ஹோம் பட்டன் ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது 4.7
இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ரெடினா டிஸ்ப்ளேவை கொண்டிருப்பதாக என்று கூறப்படுகிறது,
அதாவது 326 பிபிஐ பிக்சல் அடர்த்தியுடன் கூடிய எச்டி ரெசல்யூஷனை எதிர்பார்க்கலாம்.
சிப் மற்றும் பேட்டரி பற்றி?
உள்ளே, ஐபோன் எஸ்இ 2 ஆனது
நிறுவனத்தின் சொந்த ஏ 13 பயோனிக் சிப் கொண்டு கட்டமைக்கப்படும் என்று
கூறப்படுகிறது, இது ஐபோன் 11 தொடருக்கு சக்தி அளிக்கும் சிப் ஆகும் என்பது
குறிப்பிடத்தக்கது. கேமரா தீர்மானம் மற்றும் பேட்டரி திறன் போன்ற மற்ற
விவரக்குறிப்புகள் பற்றி எந்த வார்த்தையும் இல்லை, ஆனால் இதில் வயர்லெஸ் சார்ஜிங்
இடம்பெறலாம் என்று வதந்தி உள்ளது.
வழக்கமான சில அம்சங்கள் மற்றும் பெயர்
குழப்பம்!
மீதமுள்ள வடிவமைப்பு மிகவும் பொதுவாக
இருக்கும். அதாவது பவர் பட்டன் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும், அதே நேரத்தில்
சவுண்ட் ப்ரொபைல் ஸ்விட்ச் மற்றும் வால்யூம் பட்டன்கள் இடதுபுறத்தில் உள்ளன.
அளவீட்டில் ஐபோன் எஸ்இ 2 ஆனது 138.5 x 67.4 x 7.8 மிமீ இருக்கலாம் என்று
கூறப்படுகிறது. இது என்ன பெயரின் கீழ் வெளியாகும் என்கிற குழப்பத்தைப் பொறுத்தவரை,
இது ஐபோன் எஸ்இ-யின் மேம்படுத்தப்பட்ட சாதனம் என்பதை விட ஐபோன் 8-ன் வாரிசாகவே
தெரிவதால் இது ஐபோன் 9 என்று அழைக்கப்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக