Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 ஜனவரி, 2020

யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?

 Image result for யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?"
வாகன லாப யோகம் :

நான்காம் இடத்திற்கு உரியவன் சுப கிரகத்துடன் கூடி ஒன்பதாம் வீட்டில் இருந்தாலும், ஒன்பதுக்கு உரியவனுடன் இணைந்திருப்பின் உண்டாவது வாகன லாப யோகம் ஆகும்.

 வாகன லாப யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 வீட்டுமனைகள் மூலம் வருமானம் கிட்டும்.

 வாகன வசதிகள் உண்டாகும்.

 ஸ்வீகார புத்திர யோகம் :         

 மிதுனம் அல்லது கன்னி லக்னமாகிய ஐந்தில் செவ்வாய், சனி இருந்து புதன் பார்வை அல்லது சேர்க்கை இருப்பதால் உண்டாவது ஸ்வீகார புத்திர யோகம் ஆகும்.

 ஸ்வீகார புத்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 ஸ்வீகார புத்திர ப்ராப்தி உண்டாகும்.

 சூரனாகும் யோகம் :

 இரவில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்திலோ அல்லது பத்தாம் இடத்திலோ அமைந்திருக்க உண்டாவது சூரனாகும் யோகம் ஆகும்.

 சூரனாகும் யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 சிறந்த வீரராக விளங்குவார்கள்.

 வீரிய குறைவு யோகம் :

 லக்னம் ஒற்றைப்படை ராசியாக அமைந்து அங்கு சுக்கிரன் வீற்றிருக்க உண்டாவது வீரிய குறைவு யோகம் ஆகும்.

 வீரிய குறைவு யோகத்தின் பலன்கள் :

 காலதாமதமான குழந்தை பிறப்பு பாக்கியம் உண்டாகும்.

 சோம்பல் உண்டாகும் யோகம் :

 லக்னாதிபதியுடன் சனி இணைந்து இருக்க உண்டாவது சோம்பல் உண்டாகும் யோகம் ஆகும்.

 சோம்பல் உண்டாகும் யோகத்தின் பலன்கள் :

 எதிலும் மந்தத்தன்மையுடன் செயல்படுவீர்கள்.

 சர்ப்ப கண்ட யோகம் :

 இரண்டாம் வீட்டில் ராகு மாந்தியுடன் இணைந்து இருப்பதால் உண்டாவது சர்ப்ப கண்ட யோகம் ஆகும்.

 சர்ப்ப கண்ட யோகத்தின் பலன்கள் :

 சர்ப்பம் தீண்டுதலினால் மரணம் உண்டாகும்.

 சகோதர லாப யோகம் :

 மூன்றாம் இடம் வலுத்து மூன்றுக்கு உரியவன் பலம் பெற்று மூன்றில் சுபர் அமையப் பெறுவதால் உண்டாவது சகோதர லாப யோகம் ஆகும்.

 சகோதர லாப யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 சகோதரர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும்.

 சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

 மஹா பாக்கிய யோகம் :           

 ஆணாக பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன் ஆண் ராசியிலும், பெண்ணாக பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன் பெண் ராசியிலும் அமர்ந்தால் மஹா பாக்கிய யோகம் உண்டாகிறது.

 மஹா பாக்கிய யோகத்தின் பலன் :

 சிறந்த நிர்வாகிக்கும் திறமை உடையவர்கள்.

 சன்யாச யோகம் :       

 கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இருப்பின் உண்டாவது சன்யாச யோகம் ஆகும்.

 சன்யாச யோகத்தால் உண்டாகும் பலன் :

 ஆன்மிகத் தலைவராக இருப்பார்கள்.

 தீர்க்க தேக யோகம் :

 புதனுக்கு ஏழில் செவ்வாய் இருக்க உண்டாவது தீர்க்க தேக யோகமாகும்.

 தீர்க்க தேக யோகத்தின் பலன் :

 திடமான உடல் அமைப்பு உடையவர்கள்.

 திரவிய நாச யோகம் :

 ஒன்பதாம் இடத்தில் ராகு இருப்பதால் உண்டாவது திரவிய நாச யோகமாகும்.

 திரவிய நாச யோகத்தின் பலன் :

 பெண்ணால் அவப்பெயர்கள் மற்றும் பொருள் இழப்பு உண்டாகும்.

 மாதுரு சாப புத்ர தோஷம் :

 மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தில் பாபர் இருக்க சந்திரன் பாபர் நடுவிலோ அல்லது நீசம் பெற்றோ இருந்தால் உண்டாவது மாதுரு சாப புத்ர தோஷம் ஆகும்.

 மாதுரு சாப புத்ர தோஷ பலன் :

 காலதாமதமான குழந்தை பாக்கியம் உண்டாகும்.

குறிப்பு :

 இங்கு கூறப்பட்ட அனைத்து யோகங்களும் செயல்பட லக்னாதிபதியும், புத்திகளும் சாதகமாக இருந்தால் மட்டுமே மேற்கூறிய பலன்கள் உண்டாகும்.

- முற்றும் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக