Facebook நிறுவனம் அதன் Privacy Checkup tool-ஐ அப்டேட்
செய்துள்ளது. பேஸ்புக் பயனர்களின் அக்கவுண்ட் பாதுகாப்பை மேம்படுத்தும் நான்கு
புதிய Security அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக இனிமேல் யாராலும் உங்களின்
அக்கவுண்ட்டை அவ்வளவு எளிதாக ஹேக் செய்யவோ அல்லது உங்களை பற்றி தகவல்களை
சேகரிக்கவோ முடியாது என்று எதிர்பார்க்கலாம்.
பேஸ்புக் நிறுவனம் தனது ப்ரைவஸி செக்கப் டூலில் (Privacy
Checkup Tool) நான்கு புதிய அம்சங்களை இணைத்துள்ளது. இந்த புதிய அம்சங்கள் ஆனது
பயனர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்டீன் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின்
தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று
பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ப்ரைவஸி செக்கப் டூல்கள் ஆனது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் உள்ளது என்பதும், மேலும் புதிய அம்சங்கள் அங்றது இந்த வாரம் உலகளவில் வெளிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அம்சங்களின் பெயர் என்ன? அதன் வழியாக நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.
முதலாவதாக "Who Can See What You Share" அம்சம்: இது பயனர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களின் போஸ்ட்கள் போன்ற ப்ரொபைல் தகவல்களை யார் எல்லாம் காணலாம் என்பதை மதிப்பாய்வு செய்ய உதவும் ஒரு அம்சம் ஆகும்.
இரண்டாவதாக "'How to Keep Your Account Secure' அம்சம்: "வலுவான கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) அமைத்து உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் லாகின் அலெர்ட்களை எனேபிள் செய்து வைக்கவும் இந்த அம்சம் உதவும்” என்று கடந்த திங்கள்கிழமையன்று ஒரு வலைப்பதிவு வழியாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
மூன்றாவதாக "How People Can Find You" அம்சம்: மக்கள் உங்களை எப்படியெல்லாம் பேஸ்புக் வழியாக கண்டறியலாம் மற்றும் உங்களுக்கு யாரெல்லாம் பிரென்ட் ரெக்வஸ்ட்டை அனுப்பலாம் என்பதை மறுபரிசீலனை செய்ய உதவும்.
கடைசியாக "Your Data Settings" அம்சம்: இது பேஸ்புக் வழியாக நீங்கள் லாகின் செய்ய ஆப்களுடன் நீங்கள் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும். இதன் வழியாக நீங்கள் பயன்படுத்தாத ஆப்களையும் அகற்றலாம் "என்று பேஸ்புக் கூறியுள்ளது.
பேஸ்புக்கின் டெஸ்க்டாப் தளத்தில் உள்ள கேள்விக்குறி ஐகானைக் கிளிக் செய்து நீங்கள் உங்களின் ப்ரைவஸி செக் டூலை அணுகலாம். "தனியுரிமை என்பது மிகவும் தனிப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும், உங்களுக்காக சரியான தனியுரிமை முடிவுகளை நீங்கள் எடுக்க உங்களுக்கு உதவ தனியுரிமை உதவிக்குறிப்புகளை ஒருங்கிணைத்துள்ளோம்" என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக