Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 பிப்ரவரி, 2020

வெள்ளி கடற்கரை !!

Image result for வெள்ளி கடற்கரை !!"


வெள்ளி கடற்கரை, கடலூரில் இருந்து ஏறத்தாழ 2கி.மீ தொலைவிலும், பிச்சாவரத்தில் இருந்து ஏறத்தாழ 58கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து ஏறத்தாழ 49கி.மீ தொலைவிலும் அமைந்து சுற்றுலா பயணிகளை அதிகமாக தன்வசம் கவரும் வகையில் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

 இந்த கடற்கரையில் நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது.

 மேலும் இங்கு அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன.

 வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டையான புனித டேவிட் கோட்டை உள்ளது.

 கடலூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி கடற்கரைக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் மூலமாகவும் இங்கு செல்லலாம்.

மாலை நேரங்களில் கதிரவனின் ஒளியும்... அலையின் அழகும்... மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

 கடற்கரைக்கு தெற்கே உள்ள தெற்கு கடலூர் ஒரு தனி தீவு போல காட்சியளிக்கிறது. அலையின் வேகம் குறைந்து இறுதியில் நுரைத்தலுடன் அமைதியாக ஓடி வரும் அலையின் அழகையும் ரசிக்கலாம்.

 மேற்கு நோக்கி உள்ள ஒரு நதியில் உள்ள அடர்ந்த மாங்குரோவ் காடுகளில் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற சூழல் இருக்கிறது.

 மேலும் குழந்தைகளுடன் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான காற்றை சுவாசித்து, மகிழ்ச்சியுடன் மணலில் விளையாடி கடல் அலைகளில் நனைந்து கொள்வது மனதிற்கு ஒருவிதமான மகிழ்ச்சியை அளிக்கும்.

கடலூரில் உள்ள மக்கள் மட்டுமில்லாமல் மற்ற சுற்றுலாப்பயணிகளையும் அதிகமாக இந்த கடற்கரை கவருகிறது.

எப்படி செல்வது?

 கடலூருக்கு அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?

 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

 கடலூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

இதர சுற்றுலாத்தலங்கள் :

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்.

 டேவிட் கோட்டை.

 சாமியார் பேட்டை கடற்கரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக