இதனால் மக்கள் தங்களுடைய வாகனங்களை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்கள் பலரும் கார், பைக் உள்ளிட்டவற்றை காக்கும் பொருட்டு பேட்டரிகளுடனான இணைப்பை துண்டித்தும், ஹேண்டில் பிரேக்கை விடுவித்தும், ரிவெர்ஸ் பார்க்கிங் செய்தும் தங்களுடைய வாகன்ங்களை கவர் போட்டு மூடி வைத்துள்ளனர்.
எனினும், அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டாலும் 21 நாட்களுக்கு பிறகு வாகனங்களை மீண்டும் எடுக்கும் போது அதிகமாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகிறது.
அண்மையில் ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாக இருந்தது. நீண்ட நாட்களாக பார்க் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை உரிமையாளர் ஒருவர் எடுத்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ஹேண்டில் பார்க் துவாரத்தில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீற்றத்துடன் வெளிப்பட்டது.
படமெடுத்து ஆடிய பாம்பை பார்த்ததும் பக்குவமாக நிறுத்திவிட்டார் உரிமையாளர். உடனே அதை வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டார். அது சமூகவலைதளங்களில் பலரால் பார்க்கப்பட்டது.
மேலும் வீடியோவை பார்த்த சிலர், நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் ஸ்கூட்டர்களில் இருந்து இதுபோன்ற விஷ ஜந்துக்கள் இருந்தால் ஆபத்து தான். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் பலர் நீண்ட நாட்களாக வாகனங்களை பார்க் செய்வதை தவிர்த்துவிட்டு, அவ்வப்போது அதை சுத்தம் செய்வது நல்லது. இது கார், பைக், ஸ்கூட்டர் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என கமெண்டு செய்து வருகின்றனர்.
நல்லவேளையாக இந்த சம்பவத்தைல் ஆபத்து ஏதேனும் நிகழுவதற்கு முன்னதாகவே ஸ்கூட்டரில் பாம்பு இருப்பது தெரிய வந்தது. நல்ல பாம்பு என்பதால், அது கொடிய விஷம் கொண்டது. தெரியாதவர்கள் யாரேனும் ஹேண்டில் பாரை தொட்டிருந்தால், பாம்பு கடித்து இறந்திருக்கக்கூடும். நல்லநேரமாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
பாம்புகள் அதிகம் வெப்பம் இல்லாத பகுதிகளில் வசிப்பதற்கு விரும்பும். இது அனைத்து வகையான பாம்புகளுக்கும் பொருந்தும். நம்மில் பலர் வாகனங்களை நிழலான பகுதியில் பார்க் செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். அப்படி செய்யப்படும் போது அது பாம்பு வந்து தங்குவதற்கு எளிதாகிவிடுகிறது.
தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக வாகனங்கள் பார்க் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தவிர்ப்பதற்கு, அவ்வப்போது வாகனங்களை எடுத்து சுத்தம் செய்து மீண்டும் பார்க் செய்துவிடுங்கள். பார்க் செய்யப்படும் இடத்தையும் சுத்தமாக வைத்திடுங்கள்.
இந்த சம்பவத்தில் பாம்பு ஹேண்டில் பார் பகுதியில் இருந்தது. இதுவே வேறு ஏதேனும் இடத்தில் இருந்திருந்தால் அந்த உரிமையாளரின் கதை கந்தலாகி இருக்கும். எனினும், இந்த சம்பவம் வாகன பராமரிப்பில் நமக்கு இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளின் அவசியத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு வாகன உரிமையாளரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக