ஏற்கனவே உள்ள ஆல் ரவுண்டர் பிளான்கள் பற்றி?
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ .95 ஆல் ரவுண்டர் திட்டமானது தற்போதுள்ள ரூ.39, ரூ.49 மற்றும் ரூ.79 போன்ற மற்ற ஆல் ரவுண்டர் திட்டங்களுடன் இணைகிறது. இருப்பினும், ரூ.95 பேக் ஆனது தற்போது வரையிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.
யாருக்கெல்லாம் கிடைக்கிறது?
இந்த ரூ.95 ஆல் ரவுண்டர் திட்டமானது பீகார், சென்னை, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மும்பை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் உள்ள வோடபோன் வாடிக்கையாளர்கள் அணுக கிடைக்கிறது.
ரூ.95 ஆல் ரவுண்டர் நன்மைகள் பற்றி?
வோடபோனின் பிற ஆல் ரவுண்டர் திட்டங்களைப் போலவே, ரூ.95 பேக் ஆனது டேட்டா, டால்க் டைம் மற்றும் வாய்ஸ் காலிங் ரேட் கட்டர் ஆகிய மூன்று நன்மைகளையும் வழங்குகிறது. இது ரூ.74 டால்க் டைம் நேரத்தினை வழங்குகிறது.
மேலும் அனைத்து உள்ளூர் / தேசிய அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். தவிர இந்த ப்ரீபெய்ட் திட்டம் 200 MB அளவிலான டேட்டா நன்மையையும் வழங்குகிறது. கடைசியாக, திட்டத்தின் செல்லுபடியாகும் காலம், ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 56 நாட்கள் ஆகும்.
நினைவூட்டும் வண்ணம், வோடபோன் நிறுவனம் கடத்த டிசம்பர் 2019 இல் நிகழ்த்தப்பட்ட கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த ரூ.95 ஆல் ரவுண்டர் திட்டத்தை வழங்கியது. அப்போது இந்த ரூ.95 திட்டமானது புல் டால்க் டைம், உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு வினாடிக்கு ஒரு பைசா மற்றும் 500 எம்பி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கியது.
வேறுபாடுகளைப் பொறுத்தவரை, ரூ.95 ஆல் ரவுண்டர் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், டேட்டா நன்மையானது பாதிக்கும் மேலாக குறைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக