>>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 31 மார்ச், 2020

    அருள்மிகு ஜகதீசுவரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர்


    சிவஸ்தலம் பெயர் திருப்பேரெயில் (தற்போது ஓகைப்பேரையூர் என்றும் வங்காரப் பேரையூர் என்றும் வழங்கப்படுகிறது)

    இறைவன் பெயர்

    ஜகதீசுவரர்

    இறைவி பெயர்

    பெண்ணமிர்த நாயகி

    தேவாரப் பாடல்கள்

    அப்பர்

    மறையு மோதுவர் மான்மறிக்

    எப்படிப் போவது?

    திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்தலத்தை அடையலாம். திருவாரூரில் இருந்து மாவூர் கூட்டுரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.

    ஆலய முகவரி

    அருள்மிகு ஜகதீசுவரர் திருக்கோயில்
    ஓகைப்பேரையூர்
    வடபாதிமங்கலம் அஞ்சல்
    திருவாரூர் வட்டம்
    திருவாரூர் மாவட்டம்
    PIN - 610206
    தொடர்புக்கு: 04367 - 237 692

    இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
    ஆலயத்தின் அர்ச்சகர் பாஸ்கர சிவாச்சாரியார் சற்று தொலைவில் இருந்து வருவதால், அவரை முன்கூட்டியே தொடர்பு கொண்டு ஆலயத்திற்குச் செல்வது நல்லது. அவரது கைபேசி எண்: 9360740260

    தல வரலாறு


    பேரையூர் என்ற பெயரில் பல ஊர்களிருப்பதால் மக்கள் இப்பதியை ஓகைப்பேரையூர் என்று வழங்குகின்றனர். வங்காரப்பேரையூர் என்ற பெயரும் வழங்குகிறது.

    இக்கோவில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிரகாரத்துடனும் அமைந்துள்ளது.மூலவர் ஜகதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. 

    மூலவர் கருவறை கோஷ்டத்தில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பது போல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. இத்தலத்திலுள்ள நடராஜர் மிகவும் அழகானதோர் உருவத்துடன் காட்சி தருகிறார்.

    ஆலயத்தின் தல மரமாக நாரத்தை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளன. வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

    சிறப்புகள்


    சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச் சார்ந்த கோட்டை இருந்தது என்றும்; அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் 'பேரெயிலூர்' என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி "பேரையூர் " என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.

    இவ்வூரில் தோன்றிய பெண் புலவர் ஒருவர் - பேரெயில் முறுவலார் - பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநாநூற்றிலும் உள்ளன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக