நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் இந்தியாவில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதிலும் இந்தியாவில் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா 1500 கோடி ரூபாய் நிதி உதவியினை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பேடிஎம் நிதியுதவி
இந்த நிலையில் ஆன்லைன் இ-காமர்ஸ் நிதி நிறுவனமான பேடிஎம் நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதியினை பிரதமரின் Citizen Assistance and Relief in Emergency Situations Fund திட்டத்தின் கீழ் அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர பேடிஎம் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ.10 அதிகமாக செலுத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பேடிஎம் பங்களிப்பு
ஒன்97 கம்யூனியேஷன். அலிபாபா குழுமம் மற்றும் சாப்ட் குழுமம் என கூட்டாக பங்கு வைத்திருக்கும் இந்த நிறுவனம்,உலகளவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் பங்களித்து வருகிறது. இப்பொழுது இந்தியாவில் நாடு முழுவதும் மக்கள் போராடி வரும் நிலையில், மக்களுக்கு உதவ அரசாங்கம் எடுத்து வரும் அனைத்து நிவாரணங்களிலும் பேடிஎம் பங்களிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிஎம் கேருக்கு நிதி
மேலும் இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் தனது வாடிக்கையாளர்களும் இதற்கு பெரிதும் உதவுவார்கள் என நம்புவதாகவும் பேடிஎம்மின் தலைவர் மதுர் தியோரா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பேடிஎம் மூலம் செலுத்தப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையோடு சேர்த்து, பேடிஎம்மின் பங்களிப்பும் இருக்கும், இது நேரிடையாக பிஎம் கேர்க்கு அனுப்பப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ரூ.5 கோடி நிதியுதவி
முன்னதாக இந்த வைரஸினை எதிர்த்து போராடும் மருத்துவ கருவிகள் மற்றும் மருந்துகளை உருவாக்கும் புதுமையாளர்களுக்கு பேடிஎம் 5 கோடி ரூபாய் நிதியினை உருவாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த பிஎம் கேருக்கு செலுத்தப்படும் தொகைக்கு, வருவாய் வரிசட்டம் 1961ன் கீழ் பிரிவு 10 மற்றும் 139ன் நிதி அளிப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதே வருமான வரி சட்டம் 80G-யின் கீழ் 100% நன்கொடை தொகைக்கோ வருமான வரிச் சலுகை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக