Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 மார்ச், 2020

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியி ல் மறைந்து போகும் குறுந்தகவல்களை அனுப்புவது எப்படி?


கடந்த சில ஆண்டுகளில் இன்ஸ்டண்ட் மெசேஜிங் அதிக பிரபலம் அடைந்து விட்டது. மெசஞ்சர், டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்டவை என்ட் டு என்ட் என்கிரிப்ஷன் வழங்கி வருவதால் சாட்களை பாதுகாக்க முடிகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் சீக்ரெட் கான்வெர்சேஷன் எனும் அம்சத்தினை அறிமுகம் செய்தது. இதை கொண்டு குறுந்தகவல் படிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதனை மறைந்து போக செய்ய முடியும். டெலிகிராம் செயல்யில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.





மெசஞ்சர் செயலியில் இந்த சீகெரட் கான்வெர்சேஷன் அம்சம் கொண்டு மறைந்த போக வைக்கும் குறுந்தகவல்களை அனுப்ப முடியும். இதனை சாட் விண்டோவிலேயே மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், வித்தியாசமாக என்க்ரிப்ட் செய்யப்படுவதால், இதனை வழக்கமான சாட்களில் மேற்கொள்ள முடியாது. சீக்ரெட் கான்வெர்சேஷன் பயன்படுத்த பிரத்யேக சாட் பேனல் உள்ளது. அங்கு இதற்கென அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.
மறைந்து போக செய்யும் குறுந்தகவல்களை அனுப்புவது எப்படி?
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட குறுந்தகவல்களை அனுப்ப முடியும். இதற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

வழிமுறை 1: கூகுள் பிளே ஸ்டோர் சென்று மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
வழிமுறை 2: பின் யூசர் ப்ரோஃபைல் சென்று உங்களின் பெயரை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 3: சீக்ரெட் கான்வெர்சேஷன் அம்சத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
வழிமுறை 4: சாட் பேனல் ஒன்று திறக்கும். அதில் அனுப்ப வேண்டிய குறுந்தகவலை டைப் செய்ய வேண்டும்
வழிமுறை 5: பின் எவ்வளவு நேரத்தில் படிக்கப்பட்ட குறுந்தகவல் அழிய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

வழிமுறை 6: நீங்கள் நிர்ணயித்த நேரத்தில் குறுந்தகவல் அழிக்கப்பட்டு இருப்பதை உங்களால் பார்க்க முடியும்

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் எளிய வழிமுறைகளை பின்பற்றி மறைந்து போக செய்யும் குறுந்தகவல்களை என்க்ரிப்ட் டசெய்து அனுப்ப முடியும். இது எளிமையான வழிமுறை மட்டுமின்றி பாதுகாப்பான ஒன்றாகும். தனிப்பட்ட உரையாடல்களை மேற்கொள்ள இது மிக சிறந்த வழிமுறை ஆகும்.என்க்ரிப்ஷன் முறையில் மறைந்து போகும் குறுந்தகவல் அம்சம் உருவாக்கப்பட்டு இருப்பது மிகவும் பயனுள்ள ஒன்றாகவும் இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக