அதன்படி ஐசோ ப்ரோப்பைல் ஆல்ஹகால் கொண்டு சானிட்டைசர்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கேரளா பாலக்காடு சிறையில் கைதியாக இருந்து வந்த ராமன் குட்டி என்பவர் கடந்த செவ்வாய் அன்று காலை 10.30மணிக்கு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகில் சிறையில் தயாரிக்கப்படும் சானிட்டைசர் காலி பாட்டில் கிடைந்தது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் பலன் இல்லாமல் அவர் உயிர் இழந்துவிட்டார்.
சானிட்டைசரில் ஆல்ஹகால் இருப்பதால் இது மதுவில் இருக்கும் ஆல்ஹகால் தான் என நினைத்து இவர் குடித்திருக்கலாம் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே இவரது இறப்பிற்கான காரணம் தெரியும் என கூறப்படுகிறது.
சானிட்டைசரை, சரக்கு என குடித்து இவர் உயிரிழந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக