சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும்
குறிப்பாக அமேசான்,மி.காம் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும். இந்த வகை போனுக்கு அதன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த போனின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்
6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரிநோட் 8 ப்ரோ டிஸ்பிளே வசதி
இந்த ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, மேலும் 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
அருமையான சிப்செட் வசதி
ரெட்மி நோட் 8ப்ரொ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் வசதி உள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
மிரட்டலான கேமரா வசதி
ரெட்மி நோட் 8ப்ரொ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
பேட்டரி வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
இணைப்பு ஆதரவுகள் ரெட்மி நோட் 8ப்ரோ
ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்டேட் வசதி
தற்போது இந்த போனுக்கு அப்டேட் வசதி வழங்கப்பட்ட்ளது. 2020 அப்டேட் மூலம் வெர்ஷன் 11.0.4 ஆகும்.சிஸ்டம் ஸ்டேபிலிட்டியை (System stability) கிடைக்கிறது. அதோடு ஆப் லாக் அம்சம் (App Lock) வழங்கப்படுகிறது இதன் மூலம் அனைத்து ஆப்களுக்கும் பாஸ்வேர்ட் போடலாம்.
MIUI V11.0.4.0.PCOINXM
‘MIUI V11.0.4.0.PCOINXM'-க்கு அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் இந்தியாவில் இதன் அப்டேட் கிடைக்கிறுது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு 434 எம்பி மட்டுமே செலவாகும் இதை அப்டேட் செய்வதற்கு என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக