உலகமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அச்சமடைந்து
வரும் நிலையில், உத்திர பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் 2,891 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். மேலும் இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்திர பிரதேசத்தில் 81 பேருக்கு எச்1என்1 என்ற பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும் அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 81 பேரில் 20 பேர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக