நுபியா நிறுவனம் தனது நுபியா ரெட் மேஜிக் 5ஜி
ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 12-ம் தேதி அன்று அறிமுகம் செய்ய
திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன்
வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பற்றி
பார்ப்போம்.
நுபியா
ரெட் மேஜிக் 5ஜி
இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி
ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு
வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
ஸ்னாப்டிராகன்
865 சிப்செட்
நுபியா ரெட் மேஜிக் 5ஜி 5ஜி சாதனத்தில்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு
வேகமாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த
சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில்
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது,
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ள இந்த அட்டகசமான ஸ்மார்ட்போன்
மாடல்.
64எம்பி
பிரைமரி கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி
பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும்
செயற்கை நுண்ணறிவு அம்சம் என
பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம்
வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிரூட்டும்
விசிறி
இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ்
செய்யும்போது அதிக வெப்பமடைவதைத் தடுக்க ஒரு உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறி
இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ்அன்லாக் என பல்வேறு
ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.
55வாட்
பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
நுபியா ரெட் மேஜிக் 5ஜி சாதனத்தில்
4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,
மேலும் 55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும்.
யுஎஸ்பி
டைப்-சி போர்ட்
நுபியா ரெட் மேஜிக் 5ஜி யுஎஸ்பி
டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மேலும் இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக